செந்தில் வேலன் என்பவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை தனியார் செய்தி தொலைக்காட்சியில் பத்திரிக்கையாளராக பணியாற்றியவர். அந்த பணியில் இருந்து விலகி தன் சொந்தமாக ஒரு youtube சேனலை ஆரம்பித்து திமுகவிற்கு ஆதரவாக தொடர்ந்து பேசிக் கொண்டு வருகிறார். எப்படி என்றால் தவறு நடந்தாலும் திமுக பக்கம் தான் சரி, நல்லது என்றாலும் திமுக பக்கம் தான் என்று தெள்ளத்தெளிவாக தன்னை திமுக காரர் என்று கூறிக் கொள்ளும் அளவிற்கு ஒரு பத்திரிக்கையாளர் திமுகவை எதிர்ப்பவர்களை கடுமையாக சாடியும் ஆதரிப்பவர்களை புகழ்ந்து பாராட்டியும் வீடியோ பதிவிட்டுள்ளார். அப்படி அவர் பதிவிட்ட வீடியோக்களின் தலைப்புகளானவை அதிமுக செய்த தவறு 14 வயது சிறுமி பலி! சென்னையில் பெய்த மழை அப்சட்டில் அதிமுக பல்பு வாங்கிய பாஜக என பாஜகவையும் அதிமுகவையும் கடுமையாக சாடி வீடியோக்களை தனது youtube சேனல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற தனியார் பேட்டியில் பங்கேற்று பேசிய செந்தில்வேலன் ஒரு புது சர்ச்சையில் மாட்டிக் கொண்டுள்ளார். அதாவது அந்த பேட்டியில் 2015 ஆம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்ட பொழுது களத்தில் நின்று மக்களுக்காக பணியாற்றி மக்கள் பட்ட கடும் துயரங்கள் ஒவ்வொன்றையும் ரிப்போர்ட்டாக பதிவு செய்த நீங்கள் இந்த முறை ஏன் களத்தில் நின்று மக்களுக்காக போராடவில்லை என்று கேள்வி முன்வைக்கபட்டதற்கு நீங்கள் கேட்கும் கேள்வி எனக்கு புரியவில்லை அன்று வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்பட்டதற்காக குரல் கொடுத்தேன் இன்று ஏன் குரல் கொடுக்கவில்லை என்று கேட்கிறீர்கள் என்னை என்ன அரசாங்கத்திற்கு எதிராக நிற்க சொல்கிறீர்களா? ஆளும் கட்சியை எதிர்த்து பேச சொல்கிறீர்களா என்ற வகையில் பதில் அளித்து மக்களுக்கு என் அன்பை வெளிப்படுத்தும் விதமாக இந்த முறையும் நான் உதவிகளை அதை நிரூபிக்க வேண்டும் என்றால் 40 குழுக்களை உங்களிடம் அழைத்து வருகிறேன்.
ஆனால் எப்படி அரசாங்கத்தை எதிர்த்து பேச முடியும் என்பது போன்ற வகையில் அவரது பதில் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படி அன்று மக்களுக்காக நின்றீர்களே இன்று ஏன் நிற்கவில்லை என்ற கேள்விக்கு அரசு எதிர்த்து நிற்க சொல்கிறீர்களா என்று செந்தில்வேலன் பதிலளித்தது இணையங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. மேலும், திமுகவை எதிர்க்க மாட்டேன் என இவர் வாயாலே ஒப்புக்கொண்டுவிட்டார் என இவரை இணைவாசிகள் வச்சு செய்து வருகின்றனர். தேவையில்லாமல் செந்தில்வேலனும் கேட்கப்படும் கேள்வியின் உள்நோக்கம் புரியாமல் இப்படி மாட்டிக்கொண்டார் என விமர்சனங்கள் எழுந்துள்ளது! எப்படித்தான் இவர் எல்லாம் பத்திரிகையாளராக இருந்தார் எனவும் வேறு விமர்சனங்கள் கொடி கட்டி பறக்கிறது.
அதுமட்டுமின்றி ஒரு பத்திரிகையாளராக இருக்கும் நபர் மக்களுக்காகவும் மக்கள் படும் துயரங்களையும் துன்பங்களையும் கண்டு கொந்தளித்து எந்த ஒரு கட்சியின் பக்கமும் சாராமல் நடுநிலையாக நின்று மக்களின் துன்பங்களை அரசாங்கத்திற்கு கொண்டு செல்லவும் மக்களின் கோரிக்கைகளை அரசாங்கத்திற்கு எடுத்துச் சொல்லவும் முக்கிய பாலமாக செயல்படுபவர். அப்படி ஒரு பணியில் இருந்த செந்தில் வேலன் தற்பொழுது முற்றிலுமாக திமுக பக்கம் திரும்பி விட்டார் அரசாங்கத்தை எப்படி எதிர்ப்பது என்ற பதிலை இவர் கூறுவார் என நினைக்கவில்லை என்று பத்திரிகையாளர்கள் தரப்பிலும் கடும் அதிருப்திகள் தெரிவிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது. அதுவும் இந்த மழை வெள்ளத்தில் மக்கள் சிக்கியிருக்கும் வேளையில் அதனை கூட பார்க்காமல் திமுகவிற்கு ஆதரவு கொடுக்கும் செந்தில் வேலன் செயல் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.