சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டன் நிதி நிறுவனம் ஒரு மாதத்திற்கு 25 முதல் 30 சதவீத வட்டியை தருவதாக கூறி கடந்த 2020 செப்டம்பர் மாதத்தில் இருந்து 2022 மே மாதம் வரை ஒரு லட்சத்திற்கு அதிகமானவரிடம் 2400 கோடி வரை முதலீடு பெற்றது. ஆனால் இந்த நிறுவனம் கூறியபடி எந்த ஒரு வட்டி பணத்தையும் வழங்காமல் முதலீடு செய்த பணத்தையும் திருப்பி வழங்காமல் முதலீட்டாளர்களாகிய மக்களை ஏமாற்றியுள்ளது. இதனால் இந்த நிறுவனத்தால் ஏமாந்தவர்கள் புகார் அளிக்க அதனடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்த விசாரணையில் கடந்த 10 மாதங்களாக தலைமறைவாக இருந்த ஆருத்ரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மைக்கேல் ராஜ் துபாய் விமான நிலையத்திலிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கைது செய்தது.
அதற்குப் பிறகு அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இவர் ஆருத்ரா நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராகத்தான் பணிபுரிகிறார் என்றும் ஆன்லைன் மூலமாக நடைபெறும் பண பரிவர்த்தனைகளை கண்காணித்து நிறுவன கணக்குகளை மட்டுமே இவர் நிர்வகித்து வந்தது தெரிய வந்துள்ளது. மேலும் இவரிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் ஆர்கே சுரேஷ் இந்த விவகாரத்தில் சிக்கினார். இவரைத் தொடர்ந்து கடந்த வாரத்தில் பாடி பில்டர் என்று அழைக்கப்படுகின்ற ஹரிஷும் மாலதி என்கிற இன்னொருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் இந்த மாலதி என்பவர் இயக்குனர் நிர்வாகி, அதுமட்டுமின்றி பாடி பில்டர் ஹரிஷ் என்பவர் பாஜகவை சேர்ந்தவர் என்பதும் செய்திகளில் பரபரப்பாக வெளியானது.
இதனை அடுத்து பாஜகவிற்கும் இந்த ஆருத்ரா நிதி மோசடிக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்ற பேச்சு அரசியல் வட்டாரங்களில் சுற்றி வந்தது அதுவும் பாஜக நிர்வாகி ஆகிய ஆர்கே சுரேஷ் இந்த விவகாரத்தில் தலைமறைவாகியது பாஜகவின் மாநில தலைமை என எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் கூறி வந்தனர்.. அதுமட்டுமின்றி ஆருத்ரா நிறுவனத்தில் மோசடி செய்யப்பட்ட பணங்கள் தான் கட்சிக்கு செலவழிக்கப்பட்டு வருகிறது என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பரப்பி வந்தனர்.மேலும் ஆர் கே சுரேஷ்சும் சில சொந்த விஷயங்கள் காரணமாக வெளிநாட்டில் தங்கியிருந்தார். இந்த நிலையில் தற்பொழுது அவர் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். மற்றவர்களின் குறிப்பாக எதிர்க்கட்சியினர் இந்த விவகாரத்தில் அண்ணாமலையின் பெயரை மோசடியில் இழுத்துவிடவேண்டும், ஆர்கே சுரேஷ் நேரில் ஆஜராகும் பொழுது அண்ணாமலையை பற்றி, பாஜகவை பற்றி எல்லாம் அதிகமாக பேசுவார் என்று அதனால் இந்த மோசடி குறித்து அதிக தகவல்கள் வெளிவரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில், அந்த எதிர்பார்ப்புகள் எதுவும் நடைபெறவில்லை!
ஆர் கே சுரேஷிடம் போலீசார் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் அவர் பதில் அளித்துள்ளார், அதில் ஒன்றாக ஆருத்ரா மோசடியில் கைது செய்யப்பட்ட தயாரிப்பாளர் ரூபாவிடமிருந்து அவர் பணம் பெற்றதற்கான காரணமாக வைட் ரோஸ்ட் என்ற திரைப்படத்திற்காக தான் அந்த பணத்தை அவர் பெற்றதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்! அதுமட்டுமின்றி ஆருத்ரா நிறுவனத்திடம் ஆர்கே சுரேஷ் தான் பெற்ற பணத்திற்கான காரணத்தை தெளிவாக எடுத்துக் கூறிவிட்டார். இதில் பாஜக குறித்தும் அண்ணாமலை குறித்தும் எந்த ஒரு தகவல்களும் எதிர்தரப்பினர் எதிர்பார்த்தபடி இல்லை என்பது எதிர்தரப்பினருக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது! இதனை அடுத்து இந்த விசாரணை அடுத்த கட்டத்தை நோக்கி செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர் கே சுரேஷ் விவகாரத்தில் அண்ணாமலையை கோர்த்து பேசியவர்களுக்கு பேரிடி விழுந்து உள்ளது என விமர்சனங்கள் எழுந்துள்ளது.