24 special

ராகுல் காந்திக்கு ஒரே வரியில் பதிலடி கொடுத்த அமிட்ஷா... பழசை படி தம்பி..!

Amitshah ,Rahul Gandhi
Amitshah ,Rahul Gandhi

ராகுல் காந்திக்கு அமித் ஷா அறிவுறை..!சாவர்க்கர் பற்றி இந்திரா காந்தி குறிப்பிட்டதை ராகுல் காந்தி முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.கடந்த 2019 ஆம் ஆண்டு ராகுல் காந்தி கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பிரதமர் மோடியை விமர்சிப்பதாக கூறி, ஒட்டுமொத்த மோடி சமூகத்தினரையும் அவதூறாக பேசினார். இதன் காரணமாக ராகுல் காந்திக்கு குஜராத்தில் உள்ள சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.


மேலும், மக்களவையில் உள்ள ராகுல் காந்தியின் எம்பி பதவியையும் தகுதி நீக்கம் செய்து, மக்களவை செயலகம் அறிவித்தது. இதனை தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, எம்பி பதவி தகுதி நீக்கம் குறித்து விளக்கம் அளித்தார்.

அப்போது, ராகுல் காந்தியிடம் மோடி சமூகத்தை பற்றி நீங்கள் அவதூறாக பேசியதற்கும், பிரிட்டனில் இந்திய ஜனநாயகத்தை பற்றி அவதூறாக பேசியதாக மத்திய அரசு குற்றம் சாட்டி வருகின்றன. மேலும், அதற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என கருத்து தெரிவித்தும் வருகின்றன. இதற்காக நீங்கள் மன்னிப்பு கேட்பீர்களா??? என அவரிடம் கேள்வி எழுப்பட்டது.

அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி,  “மன்னிப்பு கேட்பதற்கு நான் ஒன்னும் சாவர்க்கர் கிடையாது. என் பெயர் காந்தி. காந்தி மன்னிப்பு கேட்க மாட்டார் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்”.மேலும் சாவர்க்கர் குறித்து பல்வேறு சமயங்களில் ராகுல் காந்தி கடுமையான விமர்சனத்தை முன்வைத்து இருக்கிறார்.

இந்நிலையில் சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதலடி கொடுத்து உள்ளார்.  “தி ரைசிங் இந்தியா மாநாட்டில்” கலந்து கொண்டு பேசிய அமித் ஷா, ராகுல் காந்தி மோடி சமூகத்தினரை பற்றி அவதூறு கருத்துக்களை பேசுயதற்கு மன்னிப்பு கேட்க விரும்பவில்லை என்றால், அதை ஓப்பனாக ராகுல் காந்தி சொல்லிருக்க வேண்டும். அதற்கு பதிலாக சாவர்க்கர் பெயரை களங்கப்படுத்தி இருக்கிறார்.    

இந்தியா விடுதலைக்காக போராடிய வீரர்களில் குறிப்பிடத்தக்கவர் சாவர்க்கரும் ஆவார். விடுதலை போராட்டத்திற்காக இரட்டை ஆயுள் தண்டனையை அனுபவித்த  ஒரே ஒரு வீரர் சாவக்கர் மட்டுமே. சாவக்கர் பற்றி ராகுல் காந்திக்கு முழுமையாக தெரியவில்லை. அவருடைய பாட்டியும், முன்னாள் பிரதமரான இந்திரா காந்தி சாவர்க்கர் பற்றி என்ன சொல்லி இருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். மேலும் ராகுல் காந்தி போலவே சிவசேனா கட்சியினர் சாவர்க்கர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறார்கள் என குற்றம் சாட்டினார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, ஒரு கடிதத்தில் சாவர்க்கர் பற்றி எழுதி இருந்தார். அதில் ஆங்கிலேயருக்கு எதிராக போராட்டைத்தை முன்னெடுத்தில் சாவர்க்கரின் பங்கு வரலாற்றில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது எனவும், இந்தியாவை நினைவுகூறும் அவருடைய பிறந்த நாளை கோண்டாடும் திட்டங்களை அவர் வாழ்த்தியகிறேன் என்று இந்திரா காந்தி தெரிவித்துள்ளார். மேலும் சாவக்கரின் விடுதலை போரட்டத்தை நினைவுகூறும் வகையில் அவருக்கு 1966 ஆம் ஆண்டு தபால் தலையை வெளியிட்டும் சிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.