அர்த்த ராத்திரி இரண்டு மணிக்கு திருமாவளவன் செய்த செயல் பேசுபொருளாக மாறியுள்ளது.திமுக கூட்டணியில் தற்போது இருந்து வரும் திருமாவளவன் அவ்வபோது முரண்டுபிடிக்கும் வேலையை செய்து வருகிறார், குறிப்பாக கூற வேண்டும் என்றால் ஒரு சமயம் திமுக அரசுக்கு ஆதரவாக பேசுவார், மறு சமயம் திமுக கூட்டணியில் இருந்து கொண்டே எதிர் தரப்பு கூட்டணியான அதிமுக கூட்டணிக்கு வாழ்த்துக்கள் மற்றும் அறிவுரைகளை கூறுவார்.
இதை அரசியல் நாகரிகம் என்று எடுத்துக்கொண்டாலும் இதன் பின்னணியில் திருமாவின் அரசியல் யுக்தி இருக்கிறது என்று சில தரப்பினர் கூறி வந்தனர். உதாரணமாக எடுத்துக்கொண்டால் அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் கிடைத்ததற்கு வாழ்த்துக்கள் கூறினார், திமுக கூட்டணியில் இருந்துகொண்டு எதிர்தரப்பான அதிமுக கூட்டணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்ததற்கு இப்படி வாழ்த்து கூறுகிறாரே என அறிவாலய வட்டாரத்திற்கே அதிர்ச்சி ஏற்படுத்தியவர் திருமாவளவன்.
மேலும் திருமாவளவன் 'பதவி என்பது தலை முடிக்கு சமம்' 'நான் பாஜக, பாமக இருக்கும் கூட்டணியில் இருக்க மாட்டேன்' என்றதும் எதிர் தரப்பிற்கு சவால் விடுவதாக காட்டிக் கொண்டு திமுகவிற்கே சவால் விடுக்கும் அரசியல் பேச்சுகள் என பத்திரிகையாளர்கள் விமர்சனம் செய்து வந்தனர் .
இப்படி சமயம் கிடைக்கும் போது தனது இருப்பை காட்டிக் கொள்ள திமுக கூட்டணியில் இது போன்ற அரசியல் விளையாட்டுகளை திருமாவளவன் செய்து வருவார். இந்த நிலையில் காவல்துறை அதிகாரி பல்வீர் சிங் பல்லை பிடுங்கிய விவகாரம் குறித்து திருமாவளவன் ஒரு வாரம் கழித்து அறிக்கை விடும் விதமாக திமுக அரசை சீண்டியது திமுக கூட்டணிக்குள் மீண்டும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
அம்பாசமுத்திரத்தில் உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பொறுப்பு வகித்து வந்தவர் பல்வீர் சிங், சிறிய குற்றங்களுக்காக காவல் துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்படுவோரின் பற்களை பிடுங்கி தண்டனை அளித்து வந்ததாக புகார் எழுந்தது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
10-க்கும் மேற்பட்டோருக்கு இவ்வாறு தண்டனை தகவல் வெளியானது. இதனையடுத்து உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் நெல்லை எஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அதனை தொடர்ந்து சஸ்பெண்டும் செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில், 3 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 6 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மாநில மனித உரிமைகள் ஆணையமும் விசாரணையை துவங்கி உள்ளது.
இப்படி திமுக அரசுக்கு மேலும் கெட்டபெயர் ஏற்படுத்திய பல்வீர் சிங் விவகாரம் குறித்து செய்திகள் வெளிவந்து கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு மேலாகப் போகிறது,இந்த ஒரு வார காலமாக திருமாவளவன் இதுகுறித்து பேசவில்லை இது குறித்து அறிக்கை எதும் விடவில்லை. அதிகாரி பல்வீர் சிங் பல்லை பிடுங்கிவிட்டார் என்ற செய்திகள் வந்தபொழுது, 'அது ஒரு காவலரின் தனிப்பட்ட செயல் அதில் அரசு என்ன செய்ய முடியும்?' என பேசிவந்த திருமாவளவன் ஒரு வாரம் கழித்து அதுவும் அர்த்த ராத்திரி இரண்டு மணிக்கு பல்வீர் விவகாரம் தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
தனது சமூக வலைதள பதிவில் திருமாவளவன் கூறியதாவது, 'விசாரணை எனும் பெயரில் கொடூரமான நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரி பல்வீர் சிங் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்து சட்டப்படியான குற்ற விசாரணை நடத்த வேண்டும். மனித உரிமை மீறல், மனித சித்திரவதை, அதிகார வரம்பு மீறல் போன்றவற்றை துறை சார்ந்த விதிமுறைகள் மீறல்கள் அல்ல கிரிமினல் குற்ற நடவடிக்கைகளாகும். எனவே கிரிமினல் வழக்கு தொடர்ந்து தலையீடுகள் ஏதுமின்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியுள்ளார்.
இப்படி அதிகாலை 2:00 மணிக்கு அதுவும் சம்பவம் நடந்து தகவல்கள் வெளிவந்து ஒரு வாரம் கழித்து பல்பீர் சிங் விவகாரத்தில் திருமாவளவன் கண்டனம் தெரிவித்திருப்பது பல்பீர் சிங் விவகாரத்தை வைத்து திமுக அரசை தாக்குவதற்காக திருமாவளவன் செய்த திட்டமா என்ற சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது.
ஏற்கனவே அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு திருமாவளவன் வாழ்த்து கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியதுஎப்போது சமயம் கிடைக்கும் திமுக கூட்டணியை விட்டு வெளியேறலாம் என திருமாவளவன் காத்துக் கொண்டிருப்பதாகவும் இதனால் தான் அவ்வப்போது வாரத்திற்கு ஒரு முறையாவது திமுக அரசை விமர்சிக்கும் வேலைகளில் திருமா இறங்கி வருகிறார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விரைவில் திமுக அரசின் கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேறி விடுவார் எனவும் தகவல்கள் கசிகின்றன அரசு பல்வீர் சிங் விஷயத்தில் கடுமையான நடவடிக்கையை எடுத்த பின்பு கூட்டணி கட்சி தலைவர்களில் ஒருவரான திருமாவளவன் ஏன் இவ்வாறு பேசுகிறார் என்ற சந்தேகம் திமுகவினருக்கே உண்டாகி இருக்கிறது.