நடிகர் விஜய், நடிகை திரிஷா உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலர் நடித்து கடந்த மாதம் 19ம் தேதி வெளியான படம் 'லியோ' இந்த படம் வெளியான முதல் நாளே 148.5 கோடி வசூல் ஈட்டியதாக படக்குழு அறிவித்தது. தற்போது வரி லியோ படம் 540 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் செவன் ஸ்க்ரீன் அதிகாரபூர்வமாக தெரிவித்தது. இதற்கு பலரும் நீங்கள் மட்டும் வடை சூடுங்கள் என்று மீம்ஸ் செய்து வந்தனர்.தமிழில் எந்த முன்னணி நடிகர் படம் வந்தாலும் அதற்கு முதல் ஆளாக படத்தை பற்றி விமர்சனம் செய்யும் வரிசையில் ப்ளூ சட்டை மாறன் முதல் ஆளாக உள்ளார்.
அந்த வகையில் இவரது சரித்திரத்தில் இதுவரை எந்த படத்திற்கும் படம் நல்லா இருக்கு தியேட்டரில் சென்று படத்தை பாருங்கள் என்று தெரிவித்தது இல்லை. அனைத்து படத்திற்கும் நெகட்டிவ் விமர்சனம் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இருப்பினும் இவரது விமர்சனத்தை பார்த்து தான் பலர் படம் பார்க்க செல்வார்கள்.ப்ளூ சட்டை மாறன் லியோ படம் வெளியானதில் இருந்து விமர்சனத்தை தெரிவித்து வரும் நிலையில், இதுவரை வசூல் செய்த தொகையையும் அவர் விமர்சனம் செய்து வந்தார். படம் மொக்கை அது எப்படி இவ்ளோ வசூல் ஈட்டும் என்று தெரிவித்தார்.
லியோ படம் பொறுத்தவரை முதல் பாதி ஓகே எனவும் இரண்டாம் பாதி படும் மொக்கை இதனால் படம் வேஸ்ட் என்று ரசிகர்கள் தெரிவித்தனர்.இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் சமீபத்திய நிகழ்ச்சியில் தெரிவித்தது; லியோ படத்தின் 2ம் பாகத்தில் மன்சூர் அலிகான் சொன்ன பிளாஷ் பேக் தவறானது என்று தெரிவித்தார். இதற்கு ப்ளூ சட்டை மாறன் அவரது எக்ஸ் தளத்தில் "படம் ஊத்திக்கிச்சி. அதான் இப்படி கதை விடுறாரு.
ஹிட்டாகி இருந்தா மூடிக்கிட்டு இருந்துருப்பாரு...மக்களை ஏமாத்த முடியாது. இந்த பொய்க்கதையை கழுதைப்புலிங்க மட்டும்தான் நம்பும். ஏன்னா... அதைத்தான் ஈசியா ஏமாத்தலாம் என்று விமர்சித்தார்.ஒரு படம் சரியாக வரவேற்பு கிடைக்கவில்லை என்றால் குடும்பங்கள் கொண்டாடும் படம் என்று மாற்றுவது வழக்கமாகி விட்டது. தற்போது குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என்று போட்டாலே கலாய்க்க ஆரம்பித்துள்ள இந்தகாலத்தில் குடும்பங்கள் கழுவி ஊற்றும் தோல்வி என ப்ளூ சட்டை மாறன் லியோ படத்தின் வெற்றி விழா இன்று மாலை கொண்டாட உள்ள நிலையில் இப்படி ஒரு ட்வீட் போட்டு விடாமல் துரத்தி வருகிறார்.
மேலும், விஜய் படம் ஃபிளாப் ஆகுறது முதல் தடவை இல்லை.. ஆனால் ஃபிளாப் ஆனா படத்திற்கு முதல் டைம் வெற்றி விழா கொண்டாடுவது இதுதான் முதல் தடவை என்று சிவகார்திகேயனின் பிரின்ஸ் படத்தின் மீம் டெம்ப்ளட் பயன்படுத்தி கலாய்த்து உள்ளார் ப்ளூ சட்டை மாறன்.இதற்கிடையில் ஜெயிலர் மற்றும் லியோ படத்தின் வசூலை பங்கமாக கலாய்த்து தள்ளிவிட்டார் அதாவது, *பருந்து: பொன்னியின் செல்வனை விட கொஞ்சம் எக்ஸ்ட்ரா போட்டு.. 525 கோடி வடை சுட்ருங்க மாஸ்டர்.*(வடை) தயாரிப்பாளர்: தமிழ்நாடு, அதர் ஸ்டேட், வெளிநாட்டுல எவ்ளோ கலக்சன்? டீடெயில் குடுன்னு கேட்டா?....*பருந்து: அதெல்லாம் கேக்க மாட்டாங்க.
நீ வடையை சுட்டுத்தள்ளு. *நாமதான் நம்பர் 1 பாக்ஸ் ஆபீஸ் கிங். *சுறா: ஜெயிலரை விட 20 கோடி எக்ஸ்ட்ரா போட்டு.. 545 கோடி வடை சுட்ருங்க மாஸ்டர். *(வடை) தயாரிப்பாளர்: தமிழ்நாடு, அதர் ஸ்டேட், வெளிநாட்டுல எவ்ளோ கலக்சன்? டீடெயில் குடுன்னு கேட்டா? *சுறா: அதெல்லாம் கேக்க மாட்டாங்க. நீ வடையை சுட்டுத்தள்ளு. *நாமதான் நம்பர் 1 பாக்ஸ் ஆபீஸ் கிங்...நாமதான் பாக்ஸ் ஆபீஸ் கிங். *மக்கள்: அட நாரைகளா..ஒரே நேரத்தில் விமர்சித்து வரும் ப்ளூ சட்டை மாறனுக்கு விஜய் மற்றும் ரஜினி ரசிகர்கள்..நீ தாண்ட நார பயல என்று கடுமையாக விமரிசித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.