உத்திரபிரதேசம் : தனியார் டிவி சேனலின் நேரலை விவாதத்தில் பங்குகொண்ட பிஜேபி முன்னாள் செய்திதொடர்பாளரிடம் நிருபர் சர்க்கத்திற்குரிய வகையில் கேள்வியெழுப்ப அதற்க்கு நுபுர் ஷர்மா கூறிய கருத்து பெரும் சர்ச்சையாக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வெள்ளிக்கிழமையன்று தொழுகை முடித்தபின்னர் ஒரு பிரிவினர் வன்முறையில் இறங்கியதாக செய்திகள் தெரிவித்திருந்தன.
இந்நிலையில் வன்முறை தொடர்பாக உத்திரபிரதேச போலீசார் இதுவரை 300க்கும் மேற்பட்டோரை கைதுசெய்துள்ளனர். மேலும் பலரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இதனிடையே கான்பூர் வன்முறைக்கு காரணமானவர் என போலீசாரால் கருதப்படும் முகம்மது ஜாவேத் வீட்டின் முன்னாள் புல்டோசர்கள் அணிவகுத்து நிற்கவைக்கப்பட்டுள்ளது.
முகமது ஜாவேத் ஒரு பிரபல கட்சியின் முக்கிய புள்ளியும் கூட. ஏற்கனவே குற்றம்சாட்டப்பட்ட இருவரின் வீடுகளை போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து தரைமட்டமாக்கியுள்ளது. மேலும் மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் ஜாவேத்தின் வீட்டின் வாசல் கதவுகள் மற்றும் ஜன்னல்களை புல்டோசர்கள் இடிக்க ஆரம்பித்துள்ளன.
மேலும் ப்ரயாக்ராஜ் மேம்பாட்டு ஆணையத்தால் இடிக்கப்பட்ட ஜாவேத்தின் வீட்டு முற்றம் மற்றும் வாசல் மேல்தளம் ஆகியவை சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் பிரயாக்ராஜ் மாவட்ட நிர்வாகத்தால் 2022 மே மாதம் இதுகுறித்த நோட்டிஸ் அனுப்பப்பட்டும் பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதேபோல சஹரான்பூரில் குற்றம்சாட்டப்பட்ட இரண்டு பேரின் வீட்டை நகராட்சி நிர்வாகம் போலிஸாரின் துணையுடன் இடித்து தள்ளியது. ஆனால் அது ஆக்கிரமிக்கப்பட்ட இடம் என மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும் கான்பூர் மற்றும் சில பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டவர்களின் வீடுகள் தொடர்ந்து இடிக்கப்படும் என அதிகாரிகள் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மாநிலம் முழுவதும் பதட்டம் நிறைந்த பகுதிகளில் போலீசாருடன் புல்டோசர்களும் அணிவகுத்து நிற்கின்றன.