லோகேஷ்ஷ கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த 'லியோ' படம் கடந்த மாதம் 19-ந்தேதி திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. பல சர்ச்சைகளை தாண்டி படம் வெளியானது. முதல் நாளிலேயே படம் 148.5 கோடி வசூல் குவித்தது இந்த படம்.
முன்னதாக லியோ படத்தின் ஆடியோ வெளியீடு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த திட்டமிட்டு இருந்தனர். இதனால் ரசிகர்கள் விஜயின் குட்டி ஸ்டோரியை கேட்க அவலுடன் இருந்தனர். அப்போது தீடீரென்று தயாரிப்பாளர் லலித் குமார் ஆடியோ வெியீட்டு விழா இல்லை. பாதுகாப்பு காரணங்களால் இந்த விழாவுக்கு அனுமதி கிடைக்கவில்லை இதனால் விஜய்யை கான எதிர்பார்த்த ரசிகர்களுக்கு விருந்து அமையவில்லை.
அந்த சமயத்தில் லியோ படம் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து கிடைத்தது. படம் மாபெரும் வெற்றி என்று கொண்டாடி வந்தனர். மறுபக்கம் பட தயாரிப்பாளர் லியோ படம் வெளியாகி 12 நாட்களில் 550 கோடியை தாண்டி விட்டதாக தெரிவித்தது.
இந்த வெற்றி விழாவை கொண்டாட திட்டமிட்ட படக்குழு அதே சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பாதுகாப்பு நிபந்தனைகளுடன் நடத்த போலீசார் அனுமதி அளித்தனர்.
அதன்படி லியோ படத்தின் வெற்றி விழா நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கியது. விழாவில் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் லலித்குமார், நடிகர் அர்ஜுன், மன்சூர் அலிகான், நடிகை திரிஷா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய நடிகர் தளபதி எதை விஜயின் ரசிகர்கள் மிஸ் செய்தார்களோ அதை விஜய் பேசினார். அதாவது வழக்கமாக அவரது குட்டி ஸ்டோரி ஆரம்பித்தார், இதனை கேட்ட ரசிகர்கள் விசில் சத்தத்தை பறக்க விட்டனர். தொடர்ந்து பேசிய விஜய் தற்போது லியோ படத்திற்கு எழுந்த அனைத்து சர்ச்சைகளுக்கும் தெளிவுபடுத்தி ரசிகர்களை பொறுமை காக்க சொன்னார்.
இந்த விழாவில் நடிகர் விஜய் கடைசியாக பேசியது அரசியல் வட்டாரத்தை திருப்பி போட வைத்துள்ளது. அதாவது, அவர் அரசியலுக்கு வருவதை உறுதிபடுத்தும் விதமாக பேசினார். இதுநாள் வரை மௌனம் காத்து வந்த விஜய் நேற்று வெளிப்படையாக பேசிவிட்டார் என்றே சொல்லலாம்.
அதாவது, நிகழ்ச்சித் தொகுப்பாளர் 2026-ம் ஆண்டு குறித்து கேள்வி எழுப்ப, நடிகர் விஜய்யோ, "என்ன உலகக் கோப்பையா?" என்று கிண்டலாக கேள்வி எழுப்பினார். பின்னர் அவரே தொடர்ந்து, "2026ல் கப்பு முக்கியம் பிகிலு" என்று குறிப்பிட்டார். இதனால் ரசிகர்கள் கத்தி கூச்சலிட்டனர். இந்த சத்தம் அடங்குவதற்கு வெகு நேரம் ஆனது. நடிகர் விஜய்யின் பேச்சு மற்றும் குட்டி ஸ்டோரியை கேட்டு லியோ படத்தை பார்த்ததை விட இரட்டிப்பு சந்தோஷத்தில் இருப்பதாக அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
நா ரெடி தான் பாடல் வெளியாகி அந்த பாடலுக்கு முதல் ஆளாக சர்ச்சையை கிளப்பிய ராஜேஸ்வரி பிரியாக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சினிமாவை சினிமாவாக மட்டும் பார்க்கவேண்டும் அந்த பாடலின் வரிகளை நீங்கள் என் நெகடிவாக பாக்குறீங்கள் என்று தெரிவித்தார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனால் விஜய் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தார் அதன் மூலம் விஜய் அரசியல் களத்தில் குதிப்பது கிட்டத்தட்ட 90 சதவீதம் உறுதியாகி இருந்தது. இப்போது அவரே கப்பு முக்கியம் என்று சொல்லி அதனை 100 சதவீதம் உறுதியாகி விட்டது. இதனை சமூக தளத்தில் 2026ம் ஆண்டு முதல் விஜய் முதலமைச்சர் என்று பதிவிட்டு வருகின்றனர்.