Cinema

ரஜினிக்கு பதிலடி கொடுத்தாரா விஜய்?....வைரலாகும் குட்டி ஸ்டோரி!

Kamal, rajini,vijay
Kamal, rajini,vijay

லியோ படத்தின் வெற்றி விழா நேற்று சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் விஜய் ரஜினியை வம்பிழுத்து, கமலுடன் ரஜினியை கோர்த்து விட்ட சம்பவம் தீயாக பரவி வருகிறது.


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான ”லியோ” திரைப்படம் இதுவரை 540 கோடி வசூல் பெற்று சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் படத்திற்கான வெற்றி விழா நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மாலை 6 மணிக்கு தொடங்கியது. இதில் ரசிகர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. மேலும், ஆதார் கார்ட் கண்டிப்பாக எடுத்து வரவேண்டும் என்று உத்தரவு போடப்பட்டது.

ரஜினிகாந்த ஜெயிலர் படத்தில் காக்கா, கழுகு கதையை கூறியிருப்பார். அதனால் இணையத்தில் காக்கா விஜய் என்றும் கழுகு ரஜினி என்றும் பேசியதாக பனிப்போர் தொடங்கியது. ரஜினி பேச்சுக்கு நிச்சயம் தளபதி பதிலடி கொடுப்பார் லியோ இசை வெளியீடு விழாவில் என்று, காத்திருந்த விஜய் ரசிகர்கள் கடைசியில் இசை வெளியீடு விழா இல்லாமல் போனது. இதனால் மௌனம் காத்து வந்த ரசிகர்கள் நேற்று நடைபெற்ற லியோ பட வெற்றி விழாவில் அந்த கதைக்கு முற்று புள்ளி வைத்தார் விஜய்.

லியோ பட வெற்றி விழாவில் குட்டிக்கதையை கூறிய விஜய், “ஒரு காட்டுக்கு இரண்டு பேர் வேட்டைக்கு சென்றனர். அந்த காட்டில் யானை, மயில் இந்த காக்கா, கழுகு ....என்று கூறியவுடன் அரங்கமே சத்தத்தால் அதிர ஆரம்பித்தது. 

பின்னர் தொடர்ந்த விஜய், ”காடு என்றால் இதெல்லாம் இருக்க வேண்டும் என்பதால் கூறினேன். காட்டுக்கு சென்ற இரண்டு வேட்டைக்காரர்களில் வில்-அம்பு ஒருவர் எடுத்து சென்றார், ஒருவர் ஈட்டி எடுத்து சென்றார். வில்-அம்பு எடுத்துச்சென்றவர் முயலை வேட்டையாடி எடுத்து சென்றார். ஈட்டி எடுத்து சென்றவர் யானையை வேட்டையாட நினைத்து எதுவும் இல்லாமல் வீட்டுக்கு சென்றார். இதில் யார் வெற்றிபெற்றவர்?

யானையை வேட்டையாட நினைத்தவர்தான் வெற்றியாளர். உங்கள் இலக்கை பெரிதாக வைத்து அதையை நோக்கி நாம் செல்ல வேண்டும்.. பாரதியார் சொல்வது போல் பெரிதும் பெரிது கேள்.. பெரிதாக கனவு காணுங்கள். “Small aim is crime” என கலாம் கூறியுள்ளார். எனவே பெரிதாக கனவு காணுங்கள்.” என குட்டிக்கதை மூலம் கூறியுள்ளார் விஜய். 

இதற்கு ரசிகர்களோ விஜய் பேசியது ரஜினிக்கு பதிலடி என்றும் அரசியலில் கமல்ஹாசன் இறங்கி தோல்வியை சந்தித்தாலும், அவர் அரசியலில் குதித்து வெற்றி பெற்றுள்ளார். 

அரசியலுக்கு வருகிறேன், நிச்சயம் அரசியலில் இறங்குவேன் என்று சொல்லிவிட்டு சினிமாவில் மட்டும் தன் கவனத்தை திருப்பிய ரஜினி தோல்வியடைந்து விட்டதாகவும் ரசிகர்கள் விஜய்யின் குட்டி ஸ்டோரியை ரஜினி முயல் வேட்டையாடுகிறார் என்றும் கமல்ஹாசன் யானையை வேட்டையாட முயன்றார் என்றும் டீக்கோடிங் செய்து வருகின்றனர். இதுதான் தளபதியின் சரியான பதிலடியாம்.

முன்னதாக விஜய் சொன்னது போல் இரண்டு படங்களுக்கு பிறகு ஓய்வு எடுப்பேன் என்று தெரிவித்திருந்தார். அந்த ஓய்வு அரசியலுக்கு வலி வகுக்கும் என்று பேசப்பட்டது. நேற்று நடந்த விழாவிலும் அரசியல் குறித்த கேள்விக்கு 'கப்பு முக்கியம் பிகிலு' என்று கூறியது லிங்க் செய்து பார்த்தால் தளபதி 68 படத்திற்கு பிறகு அரசியலில் இறங்கவுள்ளது உறுதியாகிவுள்ளது.