கடந்த மே மாதம் 26 ஆம் தேதி தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் தான் ஒட்டுமொத்த இந்தியாவையும் தமிழ்நாட்டை திரும்பி பார்க்க வைத்தது. வருமானவரித்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் ஆகிய இருவருக்கும் தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை செய்ய இறங்கியபோது கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அசோக் குமார் வீட்டில் அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள சென்றனர். அப்பொழுது எங்கள் அண்ணன் வீட்டிலேயே அதிகாரிகள் இறங்குகிறார்களா, எங்கள் அண்ணன் வீட்டில் சென்று எப்படி அவர்கள் ஆய்வு செய்து விடுவார்கள் என பார்க்கிறேன் என்று செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமாரின் ஆதரவாளர்கள் தங்கள் அராஜக போக்கை காண்பிக்கத் துவங்கினர்.
அதன் விளைவாக வருமானவரித்துறை அதிகாரிகள் சென்ற கார் அடித்து நொறுக்கப்பட்டது, வருமானவரித்துறை அதிகாரிகளும் தாக்கப்பட்டனர். அப்போது அந்த வருமான வரித்துறை அதிகாரிகள் முக்கிய அதிகாரியாக சொல்லப்பட்ட காயத்ரியும் தாக்கப்பட்டார். இந்த காயத்திரி முன்னாள் தடகள வீராங்கனை, அரியலூர் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட காயத்ரி ஏழ்மையான குடும்ப பின்னணியை கொண்டவர். படிக்கும் காலத்திலேயே தடகளப் போட்டியில் ஜொலிக்க துவங்கிய அவர் 16 வயதினருக்கான தடை தாண்டுதலில் தங்கம், 2016 ஆம் ஆண்டு அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற்ற தெற்காசிய போட்டியில் 100 மீட்டர் தடை தாண்டுதல் தங்கம், 2008 ஆண்டு புவனேஸ்வரன் நடைபெற்ற காமன் விளையாட்டு போட்டியில் தடை தாண்டுதல் பதக்கம் என பல பதக்கங்களை குவித்துள்ளார்.
இப்படி பழக்கங்களை குவித்த காரணத்தினால் அவருக்கு வருமான வரித்துறை அதிகாரியாக பதவி அளிக்கப்பட்டது, அந்த சமயம் திமுகவினரால் தாக்கப்பட்ட கும்பலில் முக்கியமான அதிகாரி காயத்ரி, தாக்கப்பட்டதை தொடர்ந்து கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதன் பிறகு தான் வருமானவரித்துறை தங்கள் வேலையை காட்டத் துவங்கியது, அரசு பணி செய்யவிடாமல் தடுத்தார்கள் எனக் கூறி திமுகவினர் மீது தாக்குதல் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு மதுரை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது, ஆனால் வருமானவரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய அடுத்த இரண்டு மாதங்களில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டடு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
கரூர் கும்பலின் ஆட்டமும் குறைந்தது, கரூர் கும்பலில் ஆட்டம் குறைந்தாலும் சரி வருமான வரித்துறை மீது கை வைத்த அதுவும் விளையாட்டில் வென்று அதன் மூலம் அரசு வேலை வாங்கி சாதனை மங்கையாக விளங்கும் காயத்ரி மீது கை வைத்தவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்கும் அளவிற்கு தற்போது வழக்கு நடந்து வருகிறது. மதுரையில் நடைபெற்ற இந்த வழக்கில் தற்பொழுது முக்கிய கட்டம் எட்டியுள்ளது, அதிகாரி தாக்குதல் மீது நடத்திய சம்பவத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்கள் தான் முக்கியமாக அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த நான்கு பேரில் ஜாமீனை ரத்து செய்த மதுரை நீதிமன்றம் இந்த நான்கு பேர் தாக்கிய வீடியோவை தாக்கல் செய்ய சொல்லி தற்பொழுது அதிரடியாக அறிக்கை பிறப்பித்து இருக்கிறது.
அந்த அறிக்கையின் படி தற்பொழுது அதிகாரி காயத்ரி தாக்கப்பட்ட வீடியோவை வருமானவரித்துறை தரப்பு தாக்கல் செய்ய இருக்கிறது, ஒருபுறம் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருக்கும் நிலையில் மறுபறம் அவரது ஆட்களை அதுவும் அதிகாரிகள் தாக்கிய அந்த குண்டர்களை ஆவணங்கள் தாக்கல் செய்வதன் மூலம் சட்டப்படி விரைந்து நடவடிக்கை எடுக்க வருமானவரித்துறை முயற்சி செய்து வருகிறது. எப்படியும் இவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.