கடந்த 17 ஆண்டுகளாக பருத்திவீரன் போர் மவுனமாக சிவகுமார் குடும்பத்திற்கும் இயக்குனர் அமீருக்கும் நீடித்து வந்த நிலையில், இந்த கடந்த ஒருவாரமாக பூதகரமானது இந்நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இயக்குனர் அமீருக்கு மன்னிப்பு கோரி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். இதற்கு எல்லாம் காரணம் நடிகர் சூர்யா தான் கரணம் என்ற கருத்தும் உலா வர தொடங்கியுள்ளது.
பருத்திவீரன் படம் மூலம் தமிழ் சினிமாவால் இடம் பிடித்தவர் நடிகர் கார்த்தி, அந்த படம் பட்டி தொட்டி எங்கும் பரவியது. இது தொடர்பாக படம் 2007ம் ஆண்டு இருந்தே இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் கருத்து முரண்பாடு ஏற்பட்டு நடிகர் சூர்யாவும் இந்த படம் தேவை இல்லை என சொல்லிவிட்டாராம். இது குறித்த வழக்கும் நீதிமன்றத்தில் நீடித்து வருகிறது. சமீபத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா யூ டூயூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளிக்கையில், பருத்திவீரன் படத்தின் இயக்குனர் அமீர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார். அமீர் அதிக செலவு செய்தார், படத்தின் காசை திருடினார். அது எனக்கு முதல் படம். ஆனால் நான் கொடுத்த காசை வைத்து படத்தை எடுக்காமல் பணத்தை திருடிவிட்டார் என்று குற்றச்சாட்டு வைத்து சினிமாவில் இருபவர்களிடமும் மக்களிடமும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக அந்த படத்தில் நடித்தவர்கள் மட்டுமின்றி பலரும் ஞானவேல் ராஜாவை விமர்சனம் செய்யத் தொடங்கினர். அந்த படத்தில் நடித்த பொன்வண்ணன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் பருத்திவீரன் படத்தை இயக்க காசு இல்லாமல் அமீர் அவர்கள் என்ன கஷடப்பட்டார் என்பதை நேரில் இருந்து பார்த்தவன் நான் தேவையில்லாமல் குற்றச்சாட்டை சுமத்தக்கூடாது என்று கண்டனம் தெரிவித்தனர். இந்த படத்தில் நடித்த கார்த்தி அமீருக்கு ஆதரவாகவும், ஞானவேல் ராஜாவுக்கு ஆதரவாகவும் ஏதும் பேசாமல் இருந்து வந்தார். காரணம் சிவகுமாரின் குடும்பத்திற்கு ஞானவேல் ராஜ ஒரு விதத்தில் சொந்தமாம் அதனால் தான் ஏதும் பேசாமல் இருந்து வருகிறாராம். ஞானவேல் ராஜா தயாரிப்பு நிறுவனத்திற்கு சூர்யா தான் ஸ்டூடியோ கீரின் என்று பெயரை சூட்டியதாக சொல்லப்படுகிறது. அமீருக்கு ஆதரவாக திரை பிரபலங்கள் வந்த நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மன்னிப்பு தெரிவித்துள்ளார்.
'பருத்தி வீரன்' பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இது நாள் வரை அதை பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே “அமீர் அண்ணா" என்றுதான் நான் அவரை குறிப்பிடுவேன். ஆரம்பத்திலிருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப்பழகியவன். அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது. அதற்கு பதில் அளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான். நன்றி! என்று மன்னிப்பு தெரிவித்துள்ளார்.
இதற்கெல்லாம் காரணம் சூர்யா தான் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது, அதாவது வாடிவாசல் படத்தை இயக்குனர் வெற்றி மாறன் இயக்க நடிகர் சூர்யா நடிகராக அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்த படம் பெரிய அளவில் வசூல் ஈட்டப்படும் என்று பட தயாரிப்பிலார் ப்ரமோஷனை ஆரம்பித்தார். இந்நிலையில் இந்த பருத்திவீரன் விவகாரத்துடன் வாடிவாசல் படத்தில் அமீர் முக்கிய வேடத்தில் நடிப்பதாக வெற்றி மாறன் தெரிவித்தார். இதனால் சூர்யா உடன் அமீர் எப்படி நடிப்பார் படத்தில் இருந்து சூர்யா விலகிவிடுவார் என்று கூறப்பட்டது. சூர்யாவிற்கு தொடர்ச்சியாக தோல்வி படமாக அமைந்ததால் வாடிவாசல் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் வெற்றி மாறன் சூர்யாவை அழைத்து ஞானவேல் ராஜாவிடம் சொல்லி இந்த பிரச்சனைக்கு முற்று புள்ளி வைக்க சொன்னாராம். சூர்யா பேச்சை தட்டாமல் கேட்கும் ஞானவேல் ராஜா உடனே சரி என்று ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோரி அறிக்கையை அவசரமாக வெளியிட்டதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.