24 special

முடிவுக்கு வந்த 400 மணி நேர போராட்டம்... பிசின்றி அப்படியே வெளியே வந்த சுரங்க தொழிலாளர்கள்... தொழிலாளர்களின் தைரியமும், பொறுமையும் உத்வேகம் அளிக்கிறது.... மீட்பு குழுவினருக்கு பிரதமர் பாராட்டு...

modi , uttrakant
modi , uttrakant

உத்தராகண்ட் மாநிலத்தின் சில்க்யாரா சுரங்கத்தில் கடந்த 17 நாட்களாக சிக்கியிருந்த 41 தொழிலாளர்களையும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர். முன்னதாக, உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி சுரங்கப் பாதையில் குழாய் பதிக்கும் பணிகள் நிறைவடைந்து விட்டதாக, அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்திருந்தார். மேலும், இடிந்து விழுந்த சில்க்யாரா சுரங்கம் இறுதியாக உடைக்கப்பட்டு விட்டாதாகவும் அதிகாரிகள் தெரிவித்ததால் உள்ளே சிக்கியிருந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


மீட்புப் பணிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், 41 தொழிலாளர்களையும் பத்திரமாக வெளியே கொண்டுவரும் நடவடிக்கைகள் தொடங்கி நடைபெற்று வந்தது.மீட்புப் பணிக்களத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படைகளைச் சேர்ந்த வீரர்கள் கயிறு, விளக்குகள், ஸ்ட்ரக்சர்கள் போன்ற உபகரணங்களுடன் சுரங்கத்தின் முன்னால் காத்திருந்தனர். இந்தச் சிக்கலான மீட்பு திட்டத்தின் ஒரு பகுதியாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தேவையான உபகரணங்களுடன் குழாய் வழியாக மறுமுனைக்கு முதலில் உள்ளே சென்று அங்கு சிக்கியிருந்த தொழிலாளர்களுடன் தொடர்புகொண்டு, அவர்களின் தற்போதைய நிலையின் ஆய்வு செய்து, பாதுகாப்பாக வெளியேறுவதற்கான வழிகளைத் தெரிவித்தனர்.

ஒருவர் பின் ஒருவராக... - இந்நிலையில், 17 நாட்களுக்குப் பின், சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களையும், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். ஒருவர் பின் ஒருவராக சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். முதலாவது நபர் வெளியே வந்தபோது, சுரங்கத்தின் வெளியே காத்திருந்த மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள், உறவினர்கள், பொதுமக்கள், ஓட்டுநர்கள் என அனைவரும் கைகளைத்தட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.41 தொழிலாளர்களும் மீட்பு: சுரங்கத்தில் இருந்து முதலில் 5 தொழிலார்கள் மீட்கப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து நடந்த மீட்பு பணிகளின் மூலம் 15 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். பின்னர் 33 தொழிலாளர்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில், 8 தொழிலாளர்களை மீட்க வேண்டி இருந்தது. இறுதியாக சுரங்கத்தினுள் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் முழுமையாக மீட்கப்ட்டனர். சுரங்கத்தில் இருந்து வெளியே வந்த தொழிலாளர்கள் ஒவ்வொருவரையும், உத்தராகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி மாலை அணிவித்து ஆரத்தழுவி வரவேற்றார். 41 தொழிலாளர்கள் மீட்கப்பட்டதற்கு, நாடு முழுவதும் மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.சுரங்கத்தில் இருந்து வெளியே வந்த தொழிலாளர்கள் நேரடியாக ஆம்புலன்ஸுக்கு அழைத்து வரப்பட்டு, அங்கு அவர்களுக்கு அடிப்படையான முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டனர்.

பின்னர் அவர்கள் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும், தொழிலாளர்கள் அனைவரும் ஒருநாள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டு, பரிசோதனைகளுக்குப் பின்னரே, அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்  என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே 41 தொழிலாளர்களும் மீட்கப்பட்ட செய்தி அறிந்து நிம்மதி பெருமூச்சு விட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.   உத்தரகாசியில் நமது தொழிலாளர் சகோதரர்களின் மீட்புப் பணியின் வெற்றி அனைவரையும் உணர்ச்சிவசப்பட வைக்கிறது என்றும்,  சுரங்கப்பாதையில் சிக்கித் தவித்த நண்பர்களுக்கு உங்கள் தைரியமும் பொறுமையும் எல்லோருக்கும் உத்வேகம் அளிக்கிறது என்பதைச் சொல்லிக்கொள்ள விரும்புவதாக குறிபிட்டுள்ளார். 

நீங்கள் அனைவரும் நலமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வாழ்த்துகிறேன் என்றும், நீண்ட காத்திருப்புக்குப் பிறகு இந்த நண்பர்கள் இப்போது தங்கள் அன்புக்குரியவர்களைச் சந்திப்பார்கள் என்பது மிகவும் திருப்திகரமான விஷயம் என தெரிவித்துள்ளார்.இந்த சவாலான நேரத்தில் இந்தக் குடும்பங்கள் காட்டும் பொறுமையும் தைரியமும்  பாராட்டுக்குரியது என கூறிய பிரதமர், இந்த மீட்பு நடவடிக்கையில் தொடர்புடைய அனைத்து மக்களையும்  வணங்குகிறேன் என்றும் அவர்களது துணிச்சலும் உறுதியும் நமது தொழிலாளர் சகோதரர்களுக்கு புது வாழ்வு அளித்துள்ளது.  இந்த பணியில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவரும் மனிதநேயம் மற்றும் குழுப்பணிக்கு ஒரு அற்புதமான உதாரணத்தை அமைத்துள்ளனர் என்றும் உணர்ச்சி பொங்க தனது வாழ்த்துகளை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதேபோன்று அனைத்து தலைவர்களும் தங்களது வாழத்துகளை பகிர்ந்து வருகின்றனர். 41 தொழிலாளர்களும் மீண்டும் உயிர்பெற்ற நிகழ்வுக்காக போராடிய அனைத்து குழுவினருக்கும் வாழ்த்துகள்.....