24 special

புஷ்வானமான எடப்பாடியின் கர்நாடக தேர்தல் கணக்கு... அண்ணாமலை ராக்ஸ்

Annamalai , edappadipalanisamy
Annamalai , edappadipalanisamy

'எது கர்நாடகாவில் சீட்டா அப்படியே திரும்பி பாக்காம போயிடனும்' என பாஜக மேலிடம் அதிமுகவை திருப்பி அனுப்பி வைத்ததன் பின்னணி வெளிவந்துள்ளது. 


கர்நாடக மாநில சட்டசபை தேர்தல், அடுத்த மாதம் 10ம் தேதி நடக்க உள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில், 10ல் தமிழ் வாக்காளர்கள் கணிசமாக உள்ளனர். அதனால், பா.ஜ.க கூட்டணியில் 2 அல்லது 3 தொகுதிகளில் போட்டியிட, அ.தி.மு.க., விருப்பம் தெரிவித்தது. அதேபோல் பன்னீர்செல்வம் அணியும், போட்டியிட விருப்பம் தெரிவித்தது. இந்நிலையில், பா.ஜ., அறிவித்த இறுதி வேட்பாளர்கள் பட்டியலில் அ.தி.மு.க'வுக்கு இடம் இல்லை. ஆனாலும் கோலார் தங்கவயல் தொகுதியில், அ.தி.மு.க பக்தவச்சலம் 3 முறை வெற்றி பெற்றுள்ளார். காந்திநகர் தொகுதியில், அ.தி.மு.க முனியப்பா வெற்றி பெற்றுள்ளார்.

சட்டசபை தவிர, பெங்களூரு மாநகராட்சியில், அ.தி.மு.க'வுக்கு 9 கவுன்சிலர்கள் உள்ளனர். அப்படியிருந்தும், அ.தி.மு.க'வுக்கு 'சீட்' ஒதுக்காமல் பா.ஜ.க கைவிரித்து விட்டதால், பொதுச் செயலர் எடப்பாடி  பழனிசாமி அதிருப்தியில் உள்ளார்.

இதன் பின்னணியில் உள்ள தகவல்கள் வெளிவந்துள்ளன. பாஜக உடனான கூட்டணியில் சிறிது சலசலப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை எடப்பாடி பழனிசாமி பொருட்படுத்துவதில்லை என டெல்லி தலைமைக்கு தகவல் கிடைத்துள்ளன. மேலும் எடப்பாடி பழனிசாமியும் 'நமக்கு டெல்லி தலைமை போதும், மாநில தலைமை சரியில்லை' என்பது போன்ற கருத்துக்களை தனது ஆதரவாளர்களிடம் கூறி வருவதாகவும் டெல்லி தலைமைக்கு தகவல் கிடைத்துள்ளன. 

கடந்த இரு தினங்களுக்கு முன்பு கூட அண்ணாமலை சொத்து பட்டியல் குறித்து கருத்து தெரிவிக்கும் பொழுது எடப்பாடி பழனிசாமி அண்ணாமலை பற்றியெல்லாம் என்னிடம் கேட்காதீர்கள், முதிர்ச்சியடைந்த அரசியல் தலைவர்கள் பற்றி என்னிடம் பேசுங்கள், அவர் விளம்பரத்திக்காக அரசியல் செய்து வருகிறார்' என அண்ணாமலையை பற்றி கூறியுள்ளார். இப்படி பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை அலட்சியமாக பேசிவிட்டு டெல்லி மேலிடத்திடம் கூட்டணி பேசிக்கொண்டிருந்தது எடப்பாடி தரப்பு. 

இதன் பின்னணியில் எடப்பாடி பழனிசாமி வேறு விதமாக கணக்கு போட்டுள்ளார், அதாவது கர்நாடக இடைத்தேர்தலில் பாஜக மேலிடத்திடம் பேசி எப்படியாவது மூன்று, நான்கு சீட்டுகள் வாங்கி விட வேண்டும் எனவும் அப்படி சீட்டுகள் வாங்கி விட்டால் எடப்பாடி பழனிச்சாமி ஆளுமைக்கு கிடைத்த வெற்றி எனவும் கட்சியின் மத்தியில் எடப்பாடியின் இமேஜை உயர்த்திக்கொள்ள எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டமிட்டு இருந்தது. மேலும் தமிழகத்தில் அதுவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை பொருட்படுத்தாமல் பாஜக மேல் இடத்தில் நான் பார்த்துக் கொள்கிறேன் என்னுடைய அனுபவம் இவரது வயசு எனக் கூறிக்கொண்டு அலட்சியமாக இருந்தது பாஜக மேல் இடத்திற்கு தெரிய வந்துள்ளது. 

மேலும் நமக்கு அண்ணாமலையை விட அதிமுக ஒன்றும் பெரிது கிடையாது எனவே அதிமுகவை நாம் அந்த அளவிற்கு பொருட்படுத்த வேண்டியதில்லை  என முடிவெடுத்த பாஜக தலைமை தற்பொழுது எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு சீட்டு ஒதுக்கவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.

மேலும் 'நீங்கள் உங்கள் கட்சிக்குள் பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக எங்களுடன் கூட்டு இணைத்து வெற்றி கண்டு, அதை வைத்து அரசியல் செய்ய முடியாது! உங்களுக்கு வேண்டுமென்றால் தமிழகத்தில் இருக்கக்கூடிய எங்களது மாநில தலைமையுடன் இணக்கமாக செல்லவும் அதை விடுத்து விட்டு இங்கு வந்து கர்நாடகத்தில் உங்கள் நன்மைக்காக எங்களிடம் அரசியல் செய்யாதீர்கள்' எனவும் டெல்லி தலைமை எடப்பாடியிடம் கூறியதாக தகவல்கள் கிடைத்துள்ளன. 

இதனால் எடப்பாடி தரப்பு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது. அடுத்தகட்டமாக சென்னையில் வரும் 20ம் தேதி நடக்கும், அ.தி.மு.க மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில், கர்நாடக விவகாரம் குறித்து விவாதிக்க உள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.