திமுகவினர் சொத்து பட்டியலை தொடர்ந்து தற்போது திமுகவின் முக்கிய புள்ளிகள் பேசும் ஆடியோ உரையாடல்கள் வெளியாகி அதிர்வலைகளை உண்டாக்கி வருகிறது.
சமீபத்தில் தமிழக நிதி அமைச்சர் பெயரில் வெளியான ஆடியோ திமுகவிற்குள் பூக்கம்பத்தை உண்டாக்கி இருக்கும் நிலையில், அடுத்தடுத்து திமுகவை சேர்ந்த பல முக்கிய புள்ளிகளின் ஊழல் குறித்தும் சொத்து பட்டியல் குறித்தும் தாங்களே பேசும் வீடியோ அல்லது ஆடியோ உரையாடல்கள் மிக பெரிய அளவில் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறதாம்.
யார் யார் எல்லாம் அண்ணாமலை மீது வழக்கு தொடுப்பதாக நோட்டீஸ் அனுப்புகிறார்களோ அவர்கள் மீது சக திமுக உறுப்பினர்கள் முக்கிய புள்ளிகள் சொத்து குவிப்பு சம்மந்தமாக பேசும் ஆடியோ மற்றும் ஆவணங்கள் பாஜகவிடம் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் பட்டியலில் இடம்பெற்ற பலருக்கும் தெரியவர இந்த விவாகரத்தை எப்படி ஊடக வெளிச்சம் படாமல் கையாளுவது என ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. தற்போது செய்தியாளர்கள் யாரெல்லாம் அண்ணாமலை வெளியிட்ட ஊழல் பட்டியல் குறித்து கேள்வி எழுப்பினாலும் அதெல்லாம் மலுப்பும் விதமாக பதில் சொல்லி எஸ்கேப் ஆகி விடுகிறார்களாம் சீனியர் அமைச்சர்கள் அதனை உறுதி படுத்தும் விதமாக அமைந்து இருக்கிறது சமீபத்தில் மூத்த திமுக அமைச்சர் கே என் நேரு செய்தியாளர்களிடம் பேசிய பேச்சுக்கள்.
ஐயா சாமி வேற கேள்வி கேளுங்க, இதையெல்லாம் டிவியில் போடாதீர்கள் என கே என் நேரு பேசிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Dmk files வேலை செய்யாது என பலர் பேசி வந்த சூழலில் அடுத்தடுத்து வெளியாகும் ஆடியோக்கள் மற்றும் தரவுகள் மூலம் பல அமைச்சர்கள் அலற தொடங்கி ஓட்டம் எடுத்து வருகிறார்களாம்.
அடுத்த வீடியோவில் எப்படி அண்ணாமலைக்கு திமுக முக்கிய புள்ளிகள் குறித்த சொத்து பட்டியல் கிடைத்தது, சிவாஜி பட பாணியில் அரங்கேறிய சம்பவம் குறித்து முழுமையாக பார்க்கலாம்...!