24 special

பிரதமரை சந்தித்த உதயநிதி...! வெளியான டெல்லி தகவல்...! கொந்தளிக்கும் அறிவாலயம்!

Udhayanithi, Modi
Udhayanithi, Modi

தமிழ்நாட்டில் ஹிந்தி மட்டும் பாஜக கட்சியை அறவே வெறுத்து வந்த திமுக, ஆரம்பத்தில் இருந்து பாஜகவை வெறுத்து வந்த திமுக ஒன்றிய பிரதமர் என கூறி வந்தது. மோடி தமிழகத்திற்கு வந்தால் கருப்பு கோடி காட்டுவது இணயத்தில் கோ பேக் மோடி என பதிவிடுவது போல பல தில்லாலங்கடி வேலைகளை செய்துவந்த திமுக காதசியினர் தற்போது பாஜகவிற்கு ஆதரவு தெரிவிக்க வந்துள்ளனர். இந்த ஆண்டின் முதல் பயணமாக தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை தொடங்க திருச்சிராப்பள்ளிக்கு வந்திருந்தார் அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் பாரத பிரதமர் என்றும் ஒண்டிய அமைச்சர்கள் என்றும் கூறியது பேசு பொருளாக மாறியது.


இந்நிலையில், 2023ஆம் ஆண்டிற்கான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் இந்த ஆண்டு 19ம் தேதி முதல் 31ம் தேதி வரை தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது.  இந்த விளையாட்டு போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லியில் சந்தித்து அழைப்பு விடுத்தார். திடீரென்று பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்தைக்கு காரணம் என்னவாக இருக்கும் என தமிழகத்தில் உள்ள கட்சியினர் குழம்பி இருந்தனர். தொடர்ந்து பாஜகவை வெறுத்து திமுக இப்பொது மட்டும் எதற்காக வரிசையாக மோடி அவர்களை முதலமைச்சர் சந்தித்து வருகிறார் என கேள்வி எழுந்தது.

முன்னதாக ஹிந்தி மொழி வெறுத்த திமுக விளையாட்டு போட்டிக்கு எதற்காக கேலோ விளையாட்டு போட்டி என பெயரிட்டது அது ஒரு ஹிந்தி மொழி தானே?. தமிழ்நாடு இளைஞர் விளையாட்டு போட்டி என பெயர் வைக்கலாமே என்ற விமர்சனம் தொடங்கியது. ஏற்கனவே இண்டியா கூட்டணிக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் அன்றே பிரதமரை சந்தித்து அழிப்பு கொடுத்து இருக்கலாம். அதன் பிறகு தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமருக்கு ஸ்டாலின் அழைப்பு கொடுத்திருக்கலாமே? ஏன் டெல்லி திடீர் பயணம் என எல்லோரும் யோசித்த நேரத்தில் புது தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது கேலோ போட்டி அழைப்பிதழ் கொடுத்துவிட்டு அரசியல் குறித்து பேசியிருக்கலாம் என்ற தகவல் கசிந்துள்ளன.

அதாவது, முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு பிறகு அந்த இடத்தி நிரப்புவது உதயநிதி ஸ்டாலினாம் பொங்கல் முடிந்த கையோடு உதயநிதி துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளாராம். இதனால் பிரதமர் சந்தித்து ஆசி பெற்று உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, இந்த அமலாக்கத்துறை மட்டும் வருமான வரித்துறை அமாஸிகர்கள் யார் வீட்டுக்கு வேண்டுமானாலும் போகட்டும் முதல்வருக்கு தொடர்புடைய இடத்தில கைவைக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டு பிரதமரை தமிழ்நாட்டிற்க்கு வர அழைப்பிதழ் கொடுத்து வந்ததாக தகவல் கசிந்துள்ளன. இந்நிலையில், இதனை அறிந்த மூத்த அமைச்சர்கள் கனிமொழி உள்ளிட்ட பலரும் அப்போ நாங்கள் எல்லாம் எதற்காக திமுகாவுடனே இருக்கிறோம் என கொந்தளிப்பில் உள்ளார்களாம். 

மேலும், உதயநிதி முதலமைச்சராக பொறுபேற்றால் அவரால் வழி நடத்த முடியுமா என கேள்வி எழுப்புகின்றனர். முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு கால் வலி மட்டும் உடலில் சிறு சிறு பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் அவரால் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத சூழலில் இருப்பதால் அவருக்கு ஓய்வு தேவை படுவதால் தான் சென்னையில் நடந்த புத்தக கண் கட்சியில் கூட முதலமைச்சர் கலந்துகொள்ள முடியாமல் அமைச்சர் உதயநிதி பங்கேற்று தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.