கார்த்திக் ப.சிதம்பரம் முதல் தேர்தல் போட்டியில் தோல்வியை சந்தித்தார். பிறகு இவர் தனது தந்தை ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த சமயத்தில் பல்வேறு சர்வதேச நிதி முறைகேடுகளை செய்ததாக பல புகார்கள் எழுந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். தனது முதல் தேர்தல் போட்டியான 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவிய கார்த்தி சிதம்பரம் 2019 நடைபெற்ற இந்திய மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு எம்பி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்படி எம்பி ஆனதோட சரி அதற்குப் பிறகு எந்தப் போராட்டங்களிலும் கலந்து கொள்ளவில்லை, திமுக அரசு எடுக்கும் எந்த ஒரு முக்கிய முடிவுகளிலும் அவர் உடன்படுவதில்லை என பல்வேறு சச்சரவுகள் வெடித்தன. இது மட்டுமில்லாமல் கார்த்தி சிதம்பரம் முக்கிய நிகழ்வுகளின் போது ட்விட்டரில் விளையாடிக் கொண்டிருந்ததும் குறிப்பாக ராகுல் காந்தி பிரதமர் மோடியை அவதூறாக பேசியதற்காக வழக்கு பதியப்பட்டு அவரது பதவி சென்ற போது நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு ஆதரவாக பல போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தது, ஆனால் கார்த்தி சிதம்பரம் wordly கேமை விளையாடி தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்ட் செய்தது கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது.
அதேபோன்று பல மாநிலங்கள் தேர்தலில் காங்கிரஸ் பாடு தோல்வியை சந்தித்து வருகின்ற சமயத்தில் காங்கிரஸ் கட்சியினர் துவண்டு சோகத்தில் இருந்த நேரத்தில் நெட்பிளிக்சில் எந்த படம் பார்க்கலாம் என எனக்கு பரிந்துரைக்கவும் என்று ட்விட்டரில் கார்த்திக் சிதம்பரம் பதிவிட்டிருந்தது காங்கிரஸ் கட்சினரை மேலும் கோபமடையச் செய்தது. இப்படி சிறுபிள்ளைத்தனமாக விளையாடிக் கொண்டிருந்த கார்த்தி சிதம்பரம் தற்போது தேர்தல் நெருங்கி வருவதால் அதாவது இன்னும் ஒரு வருடத்தில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளதால் தேர்தல் பணிகளை துவங்கிவிட்டார் என காங்கிரஸ் வட்டாரத்தினர் பெருமையாக பேசி வருகின்றனர். சிவகங்கையில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தொடர்ச்சியாக கூட்டம் நடத்தப் போவதாகவும், அதனைத் தொடர்ந்து தற்போது முதல் கூட்டத்தை சிவகங்கையில் தொடங்கியுள்ளனர். அப்படி நடத்தப்பட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்களில் செய்தியாளர்களை சந்தித்தார் கார்த்தி சிதம்பரம்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், 'இந்தியாவில் ரயில்வே பணிகளில் பாதுகாப்பையும், ரயில்களின் கட்டுமானங்கள் மற்றும் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் மேலும் ஒடிசா ரயில் விபத்து ஏற்பட்டதற்கு முக்கிய காரணம் தொழில்நுட்ப கோளாறுகளே, ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதால் ரயில்வே துறையில் உள்ள டெக்னிக்கல் பிரிவு பைலட் பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகளிலும் பணி செய்யும் நேரம் அதிகரித்துள்ளது. இதனால் ஊழியர்கள் மிகவும் சோர்வடைந்து உள்ளனர். அதனால் தற்போது ரயில்வே ஊழியர்களை நியமிக்கும் பணிகளில் மத்திய அரசு ஈடுபடலாம் மேலும் புல்லட் ரயில் விட நினைத்துக் கொண்டிருக்கும் மத்திய அரசிற்கு தற்போது இருக்கும் ரயில்வே கட்டுமானங்களை பாதுகாப்பானதாகவும் தரமானதாகவும் முதலில் மாற்ற வேண்டும்' என கூறியுள்ளார்.
மேலும் கார்த்தி சிதம்பரம் தனது நாடாளுமன்ற தொகுதிக்கு உட்படுத்தப்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரு கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்துள்ளதாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி கார்த்திக் சிதம்பரம் சிவகங்கை தொகுதியை குறிவைத்து தனது பணியை செய்து வருவதால் சிவகங்கை தொகுதியை குறி வைத்திருந்த திமுகவினருக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. காரணம் கடந்த முறை வென்றதற்கே எதையும் செய்யவில்லை அதனால் இந்த முறை கார்த்தி சிதம்பரத்திற்கு சீட்டுக் கொடுக்கக் கூடாது என திமுகவினர் முடிவெடுத்திருக்கும் சமயத்தில் இப்படி கார்த்திக் சிதம்பரம் மீண்டும் சிவகங்கை தொகுதியை குறி வைத்து வேலை செய்து கொண்டிருப்பது திமுகவிற்கு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இது வரும்காலங்களில் கூட்டணியில் சர்ச்சையாக வெடிக்கும் எனவும் தெரிகிறது.