தமிழக பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றுதலில் இருந்து சிலர் பாஜகவை விட்டு வெளியேறி அவ்வப்போது அண்ணாமலையை குறைசொல்லி வருகின்றனர். சமூக வலைதளங்களில் அண்ணாமலையை விமர்சித்து வருகிறதை வழக்கமாகவும் கொண்டுள்ளனர். கட்சியின் மாநில செயலாளராக இருந்த திலீப் கண்ணன் பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை குறித்து கடும் விமர்சனத்தை தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டிருந்தார். அடுத்ததாக அண்ணாமலை பிராமணர்களின் கருத்துக்கு எதிரானவர் என்று கூறி காயத்ரி ஸ்ரீ ரகுராம், எஸ்வி சேகர் போன்றோர் சமூக வலைதளங்களில் அவ்வப்போது பேசி வருகின்றனர். மேலும் அண்ணாமலை மற்றவர்களை செய்தியாளர்கள் சந்திப்பில் தலையிட விடாமல் தானே பேசி புகழைப் பெற்றுக் கொள்கிறார் என்றும் திலீப் கண்ணன் விமர்சித்திருந்தார்
அப்படி பாஜகவை விட்டு வெளியேறியவர்களில் எஸ் வி சேகருக்கும் அண்ணாமலைக்கும் இடையேயான வார்த்தை போர் சில மாதங்களாகவே இருந்து வருகிறது. அண்ணாமலை திமுகவினரின் பட்டியலை வெளியிட்ட போது தனக்கான செலவுகளை தனது நண்பர்களே பார்க்கிறார்கள். அதுவே லட்சக்கணக்கில் ஆகிறது என்று கூறியிருந்தார் இதற்கு எஸ் வி சேகர் தனது ட்விட்டர் பதிவில் லட்சம் ரூபாயில் அடுத்தவன் காசில் வாழ்பவனை விட ஆயிரம் ரூபாய் சொந்த காசில் வாழ்பவனே மானஸ்தன் நேர்மையானவன் தலைமைக்கு தகுதியானவன் என்று கூறி சலசலப்பை ஏற்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து தமிழக வரலாற்றில் முதல் முறையாக 21 ஆதீனங்கள் தமிழகத்தை விட்டு வெளியேறி புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்து கொண்டது ஒரு சரித்திர நிகழ்வாக பார்க்கப்படுகிறது. நாசிக்கல் யூதர்களை எந்த அளவில் வெறுத்தார்களோ அதே அளவிற்கு திராவிடர்கள் பிராமணர்களை வெறுத்து வருகின்றனர் என்பதை மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருந்தார். மேலும் பிராமணர்களை தேடி தேடி தற்போது அதிக அளவில் அவர்களுக்கு மிரட்டல் விடப்படுகிறது, பிராமணர்களில் எத்தனையோ பேர் கடவுள் மீது பக்தியுடனும் மரியாதையுடனும் நல்லவர்களாகவும் வாழ்ந்து வருகின்றனர் இவர்களை வைத்து தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய அரசியலே நடந்து வருகிறது எனவே அவர்களுக்கான எதிர்ப்பை அடித்து நொறுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று பேசியிருந்தார் அண்ணாமலை.
அண்ணாமலையின் இந்த கருத்திற்கு எஸ் வி சேகர் தனது ட்விட்டர் பதிவில் நாக்கில் தேனையும் நாடி நரம்புகளில் பிராமண எதிர்ப்பை கொண்டு மேல் இடத்திலிருந்து வந்த அழுத்தத்தால் பேச வைக்கப்பட்ட ஓட்டு வங்கி என்று கூறி மறுபடியும் வார்த்தை போரை ஆரம்பித்தார். எஸ் வி சேகர் இன் இந்த டிவிட்டர் பதிவிற்கு அண்ணாமலை பதிலளிக்கும் விதமாக அவர் தனது பதிவில் தன்னை மாற்ற வேண்டும் என நினைப்பவர்கள் தாராளமாக டெல்லி செல்லட்டும் அதற்கான டிக்கெட் பணத்தை நானே தருகிறேன் என்று பதிவிட்டு இருந்தார்.
அண்ணாமலையின் இந்த பதிவிற்கு எஸ்வி சேகர் மிக நீண்ட பதிலுடன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதாவது அண்ணாமலையை மாற்றுவதற்கு டெல்லி வரை செல்ல வேண்டிய அவசியம் இல்லை அவரை தூக்க வேண்டிய நேரம் வந்தால் நிச்சயம் அவர் தூக்கப்படுவார்கள் நண்பர்களின் பணத்தில் வாழ்பவர் எனக்கு டிக்கெட் வாங்கி தர வேண்டிய அவசியமில்லை, காவல்துறையில் பணியாற்றியவர் தனக்கு கீழ் இருக்கும் அனைவரும் சல்யூட் அடிக்க வேண்டும் என்ற மனப்பான்மையிலே இருக்கிறார். நான் என்னுடைய உழைப்பில் உள்ளேன் அண்ணாமலை தன்னை தானே முட்டாள் என கூறிக் கொள்ள வேண்டாம் கொஞ்சம் வாயை குறைத்துக் கொள்ள வேண்டும். அண்ணாமலை பிராமணர்களை ஒதுக்குகிறார் என்று நான் கூறியதை கேட்டு தான் டெல்லி அண்ணாமலைக்கு ஆப்பு அடித்தார்கள் நண்பர்களிடம் பணத்தை வாங்கி வாழ்கிறேன் என்று அவர் கூறுவதற்கு வெட்கமாக இல்லையா என்று காட்டமாக தனது பதிலை பதிவிட்டு இருக்கிறார் எஸ். வி. சேகர்.
அவ்வப்போது எஸ்வி சேகர் மற்றும் காயத்ரி ரகுராம் போன்றோர் அண்ணாமலைக்கு எதிராக விமர்சனத்தை செய்து கொண்டிருந்தபோது அண்ணாமலை ஆதரவாளர்களும் அவ்வப்போது தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் எஸ்.வி சேகர் இந்த நீண்ட காட்டமான விமர்சனத்தை அண்ணாமலை மீது சுமத்தி உள்ளதால் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் எஸ் வி சேகரின் சமூக வலைதள கணக்குகளில் சென்று இனிமேல் தலைவரைப் பற்றி பேச கூடாது என்றெல்லாம் கூறி வருவதால் தற்போதைய எஸ். வி சேகர் அமைதியாக இருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.