பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக கடந்த 27 மற்றும் 28ஆம் தேதி தமிழகத்திற்கு வருகை புரிந்தார். அப்பொழுது பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் பிரதமர். அப்படி பிரதமர் தமிழகம் வந்து சென்ற வீடியோக்களே தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தற்போது தமிழகத்திற்கு வந்து சென்றது இந்த வருடத்தில் முதல் முறையல்ல இது மூன்றாவது முறையாக கூறப்படுகிறது மேலும் இன்னும் அதிக முறை தமிழகத்திற்கு வருவார் என்ற செய்திகளும் வெளியாகி உள்ளது. ஆனால் கடந்த எந்த முறையையும் விட பிரதமருக்கு இத்தனை வரவேற்பு தமிழகத்தில் கிடைக்கவில்லை, அந்த அளவிற்கான வரவேற்பு மற்றும் பிரதமரை காண கூட்டம் கூட்டமான மக்கள் தங்கள் குழந்தைகளுடனும் பெற்றோர்களுடனும் வந்திருந்தனர் இந்த கூட்டத்தில் எந்த விதமான அசம்பாவிதமும் குறைபாடுகளும் இல்லை அமைதியான முறையில் நடைபெற்று மக்கள் அனைவரும் அமைதியாக வீடு திரும்பினார்.
ஆனால் திமுக சார்பில் நடைபெற்ற பயிற்சி பாசறை கூட்டம் இளைஞர் அணி மாநாடு என அனைத்துமே சொதப்பலில் முடிந்து பெரும் விமர்சனங்களை பெற்றது இதனால் திமுகவை சார்ந்த அதன் கூட்டணி கட்சிகளும் பெரும் அதிருப்தியை அடைந்தனர். இதனால் திமுகவின் நிலைமை தமிழகத்தில் மிகவும் மோசமாகிவிட்டது 2024 ஆம் ஆண்டு தேர்தல் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவின் நிலைமை முன்பை விட மிகவும் சரிவை சந்திக்கும் என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிற காரணத்தினால் திராவிட அரசு தொடர்ந்து மத்திய அரசை எதிர்த்தும் மத்திய அரசு செய்ய தவறிவிட்டது! நிதி அனுப்ப வில்லை! அது செய்யவில்லை! இது செய்யவில்லை! எனத் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது அதே சமயத்தில் மத்திய அரசு செய்யும் பல நடவடிக்கைகளுக்கு தன் சார்பான ஸ்டிக்கரை ஒட்டி பிரபலப்படுத்தி வருவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
மேலும் பாஜகவை தொடர்ந்து சீண்டியும் பாஜக நிர்வாகிகளையும் தொடர்ந்து பிரச்சினைகள் இழுத்தும் தேவையில்லாத வகையில் காரணங்களை கூறி பாஜக நிர்வாகிகளை கைது செய்யும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது. அதன்படி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ரயில் நிலையத்தில் பிரதமரின் அம்ரித் பாரத் திட்டத்தின் ஏழு கோடி ரூபாய் மதிப்பீட்டில் குளிர்சாதன வசதியுடன் பயணிகள் ஓய்வு எடுக்கும் அரை, மின் தூக்கிகள், பயணிகள் இருக்கைகள் என பல வசதிகள் அமைக்கப்பட்டது. இப்படி புதிய வசதிகள் அமைக்கப்பட்டுள்ள ரயில் நிலையத்தின் திறப்பு விழா காரைக்குடியிலும் நடைபெற்றது இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் சென்னையில் இருந்து காரைக்குடிக்கு கம்பன் ரயிலை விட வேண்டும் காரைக்குடி ரயில் நிலையத்தை மதுரை கோட்டத்தில் இருந்து திருச்சி கோட்டத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்ததோடு தமிழ்நாட்டில் ரயில் நிலையங்களில் கொடுக்கப்படும் வட நாட்டு உணவான சப்பாத்தியை தவிர்த்து விட்டு இங்குள்ள உணவை வழங்க வகை செய்ய வேண்டும் என கூறினார்.
இதனை கடுமையாக எதிர்த்த சிவகங்கை மாவட்ட பாஜக தலைவர் மேப்பல் சக்தி மேடையில் அரசியல் பேசக்கூடாது என்றும் கூறினார். இதற்கு காரணம் சிதம்பரம் தரப்பினர் அவரை சண்டையிடுவது போன்று சத்தமிட இரண்டு கட்சி நிர்வாகிகள் மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை கவனித்த காவல்துறையினர் இரண்டு தரப்பினரையும் சமாதானப்படுத்தி திருப்பி அனுப்பினார் இதற்குப் பிறகு செய்தியாளர்கள் மத்தியில் பேசிய கார்த்தி சிதம்பரம் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் என்ன செய்கின்றதோ அதே வேலையை செய்துள்ளார் ஏனென்றால் அவரும் கூட்டணி கட்சிக்காரர் தானே! அதாவது நிதி பங்கிட்டில் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது டிக்கெட் கவுண்டரில் கூட வடநாட்டவர் வந்து விட்டார்கள் ரயில்வே வேலையை பற்றிய விழிப்புணர்வை தமிழகத்தில் ஏற்படுத்தாமல் உள்ளார்கள் என்று சம்பந்தமில்லாத பல குற்றச்சாட்டுகளை மத்திய அரசை நோக்கி முன் வைத்தார் கார்த்திக் சிதம்பரம். ஆனாலும் பொதுவெளியில் எம்.பி என்றுகூட பாராமல் கார்த்தி சிதம்பரத்தை தெறிக்கவிட்ட காவிக்கு இணையத்தில் வாழ்த்துக்கள் குவிகின்றன....