தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் பாலா, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை நடிகர்களாக வலம் வருபவர்கள் கூட இவரது இயக்கத்தில் ஒரு படத்தையாவது நடித்து விட வேண்டும் என்ற ஆசையில் இருப்பார்கள். ஏனென்றால் நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்டு குறைந்தபட்சம் இரண்டு வருடம் எடுத்துக் கொண்டு இவரது படங்கள் திரையரங்குகளை சந்திக்கும். ஒரு கதையை முடிவு செய்து அதற்கான நடிகை நடிகர்களை தேர்ந்தெடுத்து இடங்களை தேர்ந்தெடுத்து அந்த படத்தை எடுத்து முடிப்பதற்கு இயக்குனர் பாலாவிற்கு கிட்டத்தட்ட 2 அரை வருடங்கள் ஆவது ஆகிவிடுகிறது இதனாலே இந்த படத்தின் கமிட்டாகும் நடிகை நடிகர்கள் மற்ற எந்த படங்களிலும் கமிட்டாகாமல் பாலாவின் படத்தில் மட்டும் நடிப்பதற்காக நீண்ட நாட்கள் உழைத்து வருவார்கள் அப்படி இவரது இயக்கத்தில் நடிகராக ஆர்யா நான் கடவுள் படத்திற்காக தனது உடலை முழுவதுமாக மாற்றியும் முடி மற்றும் தாடியை அதிகமாக வளர்த்து யோகா பயிற்சிகளை பல மாதங்களாக மேற்கொண்டு அதனை கடைபிடித்து வந்ததாக கூறியுள்ளார்.
சூர்யா மற்றும் பாலா இணைந்து பணியாற்றிய படமான பிதாமகன் மற்றும் நந்தா படங்கள் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றதோடு சூர்யாவின் திரை வாழ்கையில் முக்கிய படங்களாக அமைந்தது. இதனால் இருவரும் இணைந்து அடுத்து என்ன படத்தில் நடிப்பார்கள் என்று எதிர்பார்ப்பு சூர்யாவின் ரசிகர்கள் மத்தியிலும் சினிமா விமர்சகர்கள் மத்தியிலும் மேலோங்கி இருந்தது. அதோடு நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று, ஜெய் பீம் போன்ற படங்கள் நல்லா வரவேற்பை பெற்ற நிலையில் எதற்கும் துணிந்தவன் படம் மட்டும் விமர்சனத்தை பெற்றது இதனால் சூர்யா நடிப்பில் அடுத்து வெளியாகப் போகிற படத்தை இயக்கப் போவது பாலா என்ற செய்தி சமூக வலைதளம் முழுவதும் வைரலானது. ஆனால் இப்படத்திற்கான படப்பிடிப்பு எடுக்கப்படுவதில் சூர்யாவிற்கும் பாலாவிற்கும் சில மனக்கசப்புகள் ஏற்பட்டு இந்த படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டதாக சில மாதங்களிலேயே இவர்களது கூட்டணி பிரிவு குறித்த செய்தி வெளியானது.
இது அவர்களது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை பெற்றதோடு கலவையான விமர்சனங்களையும் பெற்றது. இதற்குப் பிறகு இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருந்த வணங்கான் திரைப்படத்தில் நடிகர் சூர்யா விலகியதை அடுத்து நடிகர் அருண் விஜய்யை வைத்து இப்படத்தை இயக்கினார் இயக்குனர் பாலா. இப்படத்திற்கான டீசர் கூட சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் வணங்கான் திரைப்படத்திலிருந்து விலகிய மலையாள நடிகை மமிதா பைஜு பரபரப்பான தகவலை தெரிவித்துள்ளார். அதாவது தற்போது இவர் நடிப்பில் வெளியாகிய பிரமலு திரைப்படம் நல்லா வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்று வருவதால் தனியார் பத்திரிகை தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த நடிகை மமிதா வணங்கான் திரைப்படத்திலிருந்து விலகிய காரணத்தை கூறியுள்ளார்.
அதில் வணங்கான் படத்தில் நான் நடிக்க முதலில் ஒப்பந்தமாக இருந்தேன், அப்படி அப்படத்தில் வில்லுப்பாட்டு தொடர்பான காட்சி ஒன்று இணைந்திருந்தது அதில் நான் பாடிக் கொண்டு இசைக்கருவி ஒன்றை வாசிக்க வேண்டும், அதில் எனக்கு கொடுக்கப்பட்ட பயிற்சி நேரம் போதுமானதாக இல்லை அந்த நேரத்தில் திடீரென பாலா சார் என்னை அதை செய்து காட்டும் படி கூறினார் அந்த நேரத்தில் நான் அதற்கு முழுமையாக தயாராகாத காரணத்தினால் எனக்கு பதற்றம் ஏற்பட்டது. அதனால் பல டேக்குகள் போனது அப்போது எனக்கு பின்னால் இருந்த பாலா சார் என்னை தோள்பட்டையில் அடித்தார். படத்தில் ஒப்பந்தமாக இருக்கும் பொழுது நான் கொஞ்சம் திட்டுவேன் அதையெல்லாம் பெரிதுபடுத்திக் கொள்ளாதீர்கள் என்று பாலா சார் கூறியிருந்தார் இருப்பினும் அவர் என்னை அடித்தது மற்றும் திட்டியது என் மனதை காயப்படுத்தியது அதனால் அந்த படத்தில் இருந்து நான் விலகினேன் என்று நடிகை மமிதா பைஜூ பேட்டியில் கூறியுள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதுகுறித்து சினிமா விமர்சகர்களிடம் கேட்ட பொழுது, அவர்கள் கூறியது அந்தப்பொண்ணுக்கு ஒழுங்கா நடிக்க வராது அதுமட்டுமில்லாமல் பாலா அவரு திருமண வாழ்க்கைல பிரச்சினை வந்தப்புறம் அவரு தன்னோட கோவத்தை குறைச்சுக்கிட்டார். ஆனா இந்தப்பொண்ணு தனக்கு சரியா நடிக்க வரலன்னு சொல்லாம இப்படி சொல்லி சமாளிக்குறாங்க என கூறினார்கள்... பாலா திருமண வாழ்கை சர்ச்சை விவாகரத்துக்கு பிறகு அவர் அதிகம் கோபப்படுவதில்லை எனவும் வீடு கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.