24 special

ஆமா டி! என சர்மிளாவை வெளுத்த கார்த்திக் கோபிநாத்....

larthik gopinath, dr sharmila
larthik gopinath, dr sharmila

விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த டாக்டர் ஷர்மிளா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். இவர் அரசியலில் நுழைவதற்கு முன்பாக தமிழ் திரைப்படம் மற்றும் நாடகங்களில் துணை நடிகையாக அறியப்பட்டார். தற்பொழுது அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் அரசியல் குறித்த பல கருத்துக்களையும் குறிப்பாக திமுகவிற்கு ஆதரவான பாஜகவிற்கு எதிரான கருத்துக்களை முன்வைப்பதில் முதல் நாளாக ஓடி வருபவர் டாக்டர் ஷர்மிளா. அதுமட்டுமின்றி தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் முக்கிய சீரியல் களிலும் வில்லியாக நடித்து வருகிறார். இருப்பினும் இவருக்கும் சர்ச்சைக்கும் பத்து பொருத்தங்கள் இருப்பது போன்று தினம் ஒரு சர்ச்சையில் சிக்கி அதற்கு பதிவிட்டு அதற்கான விமர்சனங்களையும் தானே தேடிக் கொள்வார்.


 சமீபத்தில் கூட திமுக அமைச்சர் செந்தில்குமார் ஹிந்தி பேசும் மாநிலங்களை கோமூத்திரம் மாநிலங்கள் என்று நாங்கள் பொதுவாக கூறுவோம் என்ற கருத்து பல தரப்பில் கண்டனங்களை பெற்ற நிலையில் திமுக எம்பி க்கு ஆதரவாக நிற்பதாக நினைத்துக் கொண்டு டாக்டர் ஷர்மிளா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், தவறாக பிழையுடன் ஒரு பதிவை பதிவிட்டு பாஜக பிரமுகர் திருச்சி சூரிய சிவாவிடம் வாங்கி கட்டிக்கொண்டார். இந்த நிலையில் மீண்டும் ஒரு பதிவை பதிவிட்டு விமர்சனத்தை பெற்றுள்ளார் விடுதலை சிறுத்தை கட்சியின் ஷர்மிளா! அதாவது ஜனவரி 2 இல் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருகை புரிந்து புதிதாக கட்டப்பட்டுள்ள திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்ததோடு தமிழகத்தில் பல லட்சம் மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைத்துவிட்டு டெல்லி திரும்பினார். அதுமட்டுமின்றி இந்த வருகையின் பொழுது திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவ செல்வங்களுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினார்.

பட்டமளிப்பு விழாவின் தொடக்கத்தில் தேசிய கீதமும் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டுள்ளது தேசிய கீதத்திற்கு எழுந்து நின்ற பிரதமர் நரேந்திர மோடி தேசிய கீதத்தை தன் வாயார பாடினார் இது குறித்த வீடியோவை பதிவிட்டு வலது சாரி அரசியல் விமர்சகர் கார்த்திக் கோபிநாத், " நீங்கள் ஏதாவது கவனித்தீர்களா, முக ஸ்டாலின் தேசிய கீதத்தைப் பாடவில்லை. இது முதலில் இந்தியில் கூட இல்லை, ஆனால் பெங்காலி பின்னர் அரசியலமைப்பு சபையால் இந்தி பதிப்பில் மாற்றப்பட்டது. திதியை மகிழ்விப்பதற்காக அவர் பங்களாவைக் கற்றுக்கொள்ள முடியும், ஆனால் தேசிய கீதத்தில் என்ன பிரச்சனை?"  என்று பிரதமர் தேசிய கீதத்தை பாடும் வீடியோவையும் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுப்பதாக நினைத்துக் கொண்டு ஷர்மிளா, "உங்களை மாதிரி அவர் என்ன நாடக கம்பெனியா நடத்துறாரு இல்ல இது பெரிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியா …. மரியாதை மனசுல இருக்கணும்டா …உதட்டளவில் தேசிய கீதத்தை பாடிபுட்டு …நாட்டின் சொத்துகளை கார்ப்பரேட்களுக்கு வித்து கல்லா கட்டுறவனெல்லாம் நாட்டுபற்று பத்தி  பேசவே கூடாது"  என்று மரியாதை குறைவான வகையில் கடுமையாக விமர்சனம் செய்தார். 

இதற்கு கோபமடைந்த கார்த்திக் கோபிநாத், " மரியாதை மனசுல இருக்கணும்டா.....? அதெல்லாம் இருக்குடி..உனக்கு மரியாதை தெரியுமாடி......?என்று நாங்கள் சொன்னால் ஒத்துக்கொள்வீர்களா டாக்டர்.ஷர்மிளா அவர்களே?....PTR சொன்ன 30,000 கோடி...குடியாத்தம் குமரன் சொன்ன 60,000 கோடி...சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி...சிறை செல்லக் காத்து இருக்கும் பொன்முடி.....இதெல்லாம் தான் மக்கள் சேவையா? உங்கள் நாடக கும்பலுக்கு தலைவர் யார் என்று எல்லோருக்கும் தெரியும்...உங்கள் வார்த்தைகளை கவனத்தில் கொள்ளுங்கள் ஷர்மிளா அதே நாணயத்தில் நாங்கள் திருப்பிச் செலுத்துவோம்" என்று பங்கமாக கலைத்து பதிவிட்டுள்ளார். இந்த இரு பதிவுகளும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.