Cinema

எது லோகேஷ் கனகராஜ் சைக்கோவா! என்னப்பா சொல்றிங்க...?

lokesh kanagaraj, actor vijay
lokesh kanagaraj, actor vijay

மாநகரம் படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ்! மாநகரம் படமே நல்ல வரவேற்பு கொடுத்தது. ஒரு மாறுபட்ட கதை சூழலை கொண்டிருந்த படம் மக்களிடையும் வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து கார்த்தியின் நடிப்பில் கைதி படத்தை இயக்கியனார் லோகேஷ் கனகராஜ். அதுவும் இப்படத்தில் கார்த்தி கை விலங்கோடு ஒரு வாளியில் பிரியாணியை கொண்டு சென்று சாப்பிடும் காட்சிகள் பிரியாணி பிரியர்களை தாண்டி அனைவரது மனதிலும் பிரியாணி ஆசையை தூண்டும்! அதோடு சிறுவயதிலேயே பெற்றோர்களை இழந்த சிறுமி தன்னை பார்க்க யார் வருகிறார் என்ற ஏக்கத்தில் கார்த்திக்கு கால் செய்வதும் கார்த்தி தான் தனது அப்பா அப்பா தான் தன்னை பார்க்க வருகிறார் என்பது தெரியாமல் காட்டப்படும் காட்சிகள் அனைத்தும் பார்ப்போர் நெஞ்சை கலங்கடித்தது இருப்பினும் இப்படத்தில் அதிரடியான ஆக்சன் பிளாக்குகளும் கூட்டம் கூட்டமாக வில்லன்கள் வரும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. 


லோகேஷ் கனகராஜின் முதல் படம் மாநகரமாக இருந்தாலும் கைதி  படத்திற்கு பிறகு அனைவராலும் கவனிக்கப்பட்டார். ஏனென்றால் கார்த்தியின் நடிப்பில் வெளியான கைதி படம் மாபெரும் ஹிட் அடித்தது வசூலிலும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பையும் பெற்றது. கைதி படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தை இயக்கினார் மாஸ்டர் படமும் விஜயின் தொடர் சரிவுகளுக்கு ஈடு கட்டியது விஜய்க்கு ஒரு முக்கிய படமாகவும் அமைந்தது. விமர்சன ரீதியாக கடுமையான விமர்சனங்களை பெற்ற மாஸ்டர் படம் வசூல் ரீதியாக சாதனை புரிந்ததும் குறிப்பிடத்தக்கது. இப்படி லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் படத்திலிருந்து கைதி மாஸ்டர் என்ற மூன்று படத்திலும் அதிரடி ஆக்ஷனையும் போதை பொருள் தடுப்பையும், பெண்கள் கொலை செய்யப்படுவதையும் கைவிடவே இல்லை மூன்று படத்திலும் இந்த கருத்தை மயமாகக் கொண்டே படத்தை எடுத்திருந்தார். 

இதனை அடுத்து உலகநாயகன் நடிப்பில் விக்ரம் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கினார் லோகேஷ்! அப்படமும் முழுக்க முழுக்க போதை பொருளை மையமாகக் கொண்டும் கதாநாயகியை கொல்லும் அதிரடியான மற்றும் அதிர வைக்கும் வகையில் சண்டை காட்சிகள் பல அதில் இடம் பெற்றிருந்தது. இப்படத்தைப் பார்த்த அனைவரையும் நுனி சீட்டில் அமர வைத்தார் லோகேஷ்! இயக்குனராக பெருமளவில் சாதனையை விக்ரம் படத்தின் மூலம் படைத்த உலகநாயகனின் திரை வரலாற்றிலும் விக்ரம் படத்தின் இரண்டாம் பாகம் பெறும் வசூலை பெற்று பல ஆண்டுகளுக்குப் பிறகு கமலஹாசனின் நடிப்பில் விக்ரம் 2 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், மீண்டும் விஜய் நடிப்பில் லியோ படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கினார்.

இந்த படம் குறித்த அறிவிப்புகள் வெளியான பொழுதிலிருந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியது ஏனென்றால் தொடர் வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் மீண்டும் மாஸ்டருக்கு பிறகு லியோ படத்தில் இணைந்து மாபெரும் அதிரடியான மாஸ் ஹிட் ஆனா படத்தை கொடுப்பார் என்று அவர் ரசிகர்கள் எதிர்பார்த்தனர், எதிர்பார்த்தபடி வசூல் ரீதியாக லியோ படம் நல்ல வரவேற்பை பெற்றது இருப்பினும் வன்முறைகள் அதிகம் நிறைந்த படமாகவும் சண்டைக்காட்சிகள் நிறைந்த படமாகவும் லியோ படம் உள்ளதால் அனைத்து ஊடகங்களிலும் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன் வைக்கப்பட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் லோகேஷ் கனகராஜ் தனது திரைப்படங்கள் அனைத்திலும் பெண்களைக் கொல்வதையே புகழ்ந்துறைத்துள்ளார் இதனால் இயக்குனரின் மனநிலையை உளவியல் பரிசோதனை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் லியோ படம் பார்த்ததால் மன உளைச்சலுக்கு ஆளானதால் ரூபாய் ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாரர் ஒருவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். இதனால் தமிழ் திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.