24 special

விஜயகாந்த் மறைவு நான் வெளியூரில் இருந்தேன்...பிரபல நடிகையின் சர்ச்சை பேச்சு!

Vijayakanth, Ishwarya Rajesh
Vijayakanth, Ishwarya Rajesh

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ் இவர் மலையாளம், தெலுங்கு மட்டும் சினிமா உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் தமிழ் சினிமாவில் அட்டகத்தி படத்தின் மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்தடுத்து பட வாய்ப்பு வந்ததன் பிறகு விஜயை சேதுபதி மட்டும் நடிகர் தனுஷுடன் வடசென்னை உள்ளிட்ட படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். 


நடிகர் விஜயகாந்த் மறைந்ததை ஒட்டி திரைபிரபலன்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். மக்கள் லட்சக்கணக்கான மக்களும் வந்திருந்தனர். மூத்த நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் மிரட்டும் விஜய் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். இதில் அஜித், சூர்யா உள்ளிட்டவர்கள் கலந்து கொள்ளவில்லை என விமர்சனம் எழுந்தது. நடிகர் விஜயகாந்திற்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது அதனை தொடர்ந்து தேமுதிக அலுவலகத்திற்கு மக்கள் தினமும் சென்று அஞ்சலி செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.  இறந்த பின்னும் பெயர் சொல்ல வேண்டும் என சொல்வது போல் விஜயகாந்த் உயிருடன் இருந்த போது மக்களுக்கும் நடிகர்கள் சங்கத்திற்கும் செய்த நன்மை தான் இறந்த பிறகு மக்கள் அவரை வந்து பார்ப்பதற்கு காரணம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சென்னை தாம்பரத்தில் நகைக்கடை ஒன்றை திறந்து வைத்தார். அதனையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் செய்தியாளர்கள் விஜயகாந்த் இறப்பு குறித்து கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், கைகூப்பி நான் கடை திறப்பு விழாவிற்கு வந்திருக்கிறேன் என்னிடம் அதனை கேட்காதீர்கள் என நழுவினார். ஆனால் செய்தியாளர்களோ தொடர்ந்து விஜயகாந்த் பற்றி கேள்விகளை தொடுத்துக்கொண்டே இருந்தனர். அப்போது பேசிய அவர், "நான் புதுச்சேரியிலிருந்து நேற்று இரவுதான் வந்தேன். விஜயகாந்த் உயிரிழந்தது எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது என்றார். அதனைத் தொடர்ந்து நடிகர் சங்க கட்டடத்துக்கு விஜயகாந்த்தின் பெயரை வைக்கலாமா என்று கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "நடிகர் சங்க கட்டடத்துக்கு விஜயகாந்த்தின் பெயர் வைப்பது சரி என்றால் அதில் தவறே இல்லை. எல்லோருக்கும் அது பொதுவான கருத்தாக இருந்தால் அதை செய்யலாம். எல்லோருடைய கருத்தும்தான் என்னுடைய கருத்து" என்று கூறினார். மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் பாலா பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா, 'உதவி செய்வது நல்ல விஷயம்தான். அதை உற்சாகப்படுத்த வேண்டும். அதை விட்டுவிட்டு நீங்கள் செய்யவில்லையா என்று கேள்வி கேட்கக்கூடாது. நானும் நிறைய உதவிகள் செய்திருக்கிறேன். ஆனால் அதை வெளியில் சொல்ல வேண்டும் என்று இல்லை. நாம் உதவி செய்வது நமக்கு தெரிந்தால் போதும்" என்றார். இந்த வீடியோ வைரலாக என்ன நாகரிகம் கேப்டன் மறைவு குறித்து கேட்டால் அதற்கு கைகூப்பி வேறு பதில் சொல்றிங்க, பாண்டிச்சேரி என்பது 5 பிளைட் புடிச்சி சென்னைக்கு வர தேவையில்லை என கண்டனம் தெரிவித்து வருகின்றனர், மேலும், நடிகையிடம் அறையில் கேள்வி கேட்டால் பதில் சொல்லுவிங்கள சினிமா பத்தி கேள்வி கேட்டல் கடை திறப்பு பற்றிய கேள்வி கேளுங்கள் என சொல்லுவது நியாயமல்ல என விமர்சனத்தை முன் வைக்கின்றனர்.