24 special

கோவை போட்டியே அதிமுக vs பாஜக தான்... கள நிலவரம் சொல்லும் தகவல்..!

Annamlaai, Selva Ganapathy, Singai Ramachandiran
Annamlaai, Selva Ganapathy, Singai Ramachandiran

நடைபெறவுள்ள நாடளுமன்ற தேர்தலுக்காக இன்னுமும் ஒன்பது நாட்களே உள்ள நிலையில், களங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர் அரசியல் தலைவர்கள். இந்நிலையில், கோவை தொகுதியை உற்று நோக்கும் இந்திய அரசியல் தலைவர்கள் இடையே கோவை தொகுதியில் யார் வெற்றி பெறுவார் யார் முன்னிலையில் இருக்கிறார் என இதில் பார்க்கலாம்.


                                                                                                 

தமிழகத்தில் அதிக கவனத்தை ஈர்த்த நாடாளுமன்றத் தொகுதியாக கோவை மாறியுள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பின் நேரடியாகப் போட்டியிடுகிறது திமுக, திமுக சார்பாக கணபதி ராஜ்குமார் போட்டியிடுகிறார்.  அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் களம் இறங்குகின்றனர். தமிழ்நாட்டின் தொழில் நகரமான கோவை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று பெயர் பெற்ற மாவட்டம் கோவை. தற்போது இந்த மாவட்டம் அரசியலிலும் பெரிய எதிர்பார்ப்பு அலையை ஏற்படுத்தியிருக்கு.

                                                                                        

வந்தாரை வாழ வைக்கும் சென்னை போன்று பல லட்சம் இளைஞர்களுக்கு கோவை மாவட்டம் வாழ்வாதாரமாக உள்ளது. எண்ணற்ற தொழிற்சாலைகள் உள்ளது, கோவை வடக்கு, தெற்கு, பல்லடம், சூலூர் உள்ளிட்ட ஆறு சட்டமன்றத்தை கொண்டுள்ளது கோவை தொகுதி. கோவையை பொறுத்தவரைக்கும் கவுண்டர் சமுதாயத்தினர் அதிகம் வசிக்கும் பகுதியாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக பட்டியலினத்தவர் உள்ளனர். இந்த கோவையை அதிமுக தன் வசமாக வைத்து வந்தது. தற்போது கொங்கு மண்டலத்தை பாஜக வசமாக மாற்றி வருகிறது என்றே சொல்லலாம்.

                                                                                        

கடந்த தேர்தலில் திமுக கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றார். இந்த முறை திமுகவே நேரடியாக களம் இறங்குகிறது. அந்த வகையில், கணபதி ராஜ்குமார் என்பவர் முன்னதாக கோவை மாநகரின் மேயராக இருந்தார். அவர் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்ததால் தற்போது தேர்தலில் அவருக்கு வேலை செய்ய திமுகவினரிடம் தொய்வு ஏற்படுள்ளதாக கூறப்படுகிறது. இவர் அதிமுகவில் எஸ்பி வேலுமணியுடன் பயணித்தவர் ஆவார். அதிமுக சார்பாக இளைஞர் சிங்கை இராமச்சந்திரன் போட்டியிடுகிறார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார்.

                                                                                        

கணபதி ராஜ்குமார் அதிமுகவின் இருந்து திமுகவில் இணைந்தாலும், அவருக்கு கோவை தொகுதியில், கம்யூனிஸ்ட் வாக்குகள், மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆதரவுகள் உள்ளனர். சிங்கை ராமச்சந்திரனுக்கு சிங்காநல்லுர் பகுதியில் நல்ல வரவேற்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதிமுக கோட்டை என்பதால் வெற்றி பெற அதிகம் முயற்சி எடுப்பதாகவும் அதிமுகவின் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளதால் வெற்றியை நோக்கி உழைத்து வருகின்றனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

                                                                                                    

அண்ணாமலை பெயரே வெற்றிக்கு உறுதுனையாக இருக்கும் என கூறப்படுகிறது. காரணம், சமீபமாக மக்கள் அதிகம் கேட்ட பெயர் அண்ணாமலை. அப்படி இருக்கையில், பிரதமர் வாகன பேரணியும் கோவையில் நடத்தி வாக்குகள் கவர்ந்துள்ளார். கோவை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பின் பாஜகவுக்கு சாதகமான தொகுதியாக மாறியுள்ள கோவையில் அண்ணாமலைக்கு ஆதரவு பெருகி வருகிறது. அண்ணாமலையை ஆதரித்து பொது கூட்டத்தில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி அன்னமாயின் வெற்றிக்கு மேலும் வாக்குகள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

                                                                                                   

ஆனால், திமுக சார்பாக ஒரு சட்டமன்ற உறுப்பினரும் இல்லாததால் பெரியதாக கோவை தொகுதி திமுகவுக்கு ஆதரவு கொடுக்காது என்றும் கோவை தொகுதியில் தற்போது இளைஞர்கள் இடையே தான் போட்டி என்றும் இதை அண்ணாமலை சற்று முன்னேறி செல்வதாகவும் கூறப்படுகிறது. மக்கள் திமுக, அதிமுகவை விட பாஜகவே நம்பி இருக்கிறார்கள். ஏனென்றால் பாஜகவுக்கு வாய்ப்பளித்து மாற்றத்தை எதிர்பார்ப்பதாக கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.