24 special

காசிக்கு செல்லும் புண்ணியம் தமிழகத்திலே கிடைக்கும் அதிசயம்!

sivan , mountain
sivan , mountain

ஒருவரிடம் பணம் இருந்தால் செலவு செய்து இமயமலை சென்று சிவபெருமானை வணங்கி வருவார். ஆனால் இமயமலை செல்லும் அளவிற்கு வசதி படைக்காத ஒருவரின் உடலில் தெம்பு மற்றும் சிவனின் கருணை இருந்தால் தென் கைலாயம் எனப்படுகின்ற கோவை மாவட்டத்தில் வெள்ளையங்கிரி மலையில் உள்ள சிவபெருமானை தரிசிக்கலாம். கோவை நகரின் மேற்கு எல்லையில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த திருத்தலம் அடிவாரத்திலும் சிவபெருமானை கொண்டுள்ளது. கிரி மலை எனப்படும் ஏழாவது மலையில் இந்த வெள்ளியங்கிரி ஆண்டவர் குகை கோவில் சுமார் 6000 அடி உயரத்தில் கடும் குளிரான சீதோசன நிலையில் மிகவும் செங்குத்தான மலை பாதையின் முடிவில் அமைந்துள்ளதாகும். 


ஒவ்வொரு சித்ரா பௌர்ணமியும் சிவன் கோவிலில் மிகவும் விசேஷ பூஜைகளைக் கொண்டது போன்று இத்திருக்கோவிலும் சித்ரா பௌர்ணமி மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது அன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக் கோவிலின் நடைபெறும் திருவிழாவில் கலந்து கொண்டு சிவனின் அலங்காரங்களை கண்டு பரவசமடைகின்றனர். காலை நேரத்தில் ஈசனை தரிசிக்க மழையேற ஆரம்பித்தால் அம்மலையின் அழகு, சூரிய உதயம், இயற்கை எழில் ஆகியவற்றை ரசித்துக் கொண்டே சிவபெருமானையும் தரிசிக்கலாம். மேலும் சிவபெருமான் பஞ்சலிங்கமாக காட்சியளிக்கும் ஒரே கைலாயம் இது என்றும் கூறப்படுகிறது. 

எப்படி பஞ்சலிங்கமாக சிவபெருமான் இங்கு எழுந்தருளினார் என்பதற்கு புராண கதைகளும் உள்ளது. அதன்படி சிவபெருமானிற்கு மாறாக தக்கன் செய்த வேள்விக்கு தேவர்கள் முனிவர்கள் சென்றதால் சிவபெருமான் வேள்வியை சினந்து அழித்தார். மேலும் தேவர் மற்றும் முனிவர்களை சபித்தார் அதோடு தன் முகங்களை ஐந்து கிரீடிகளாகக் கொண்டு கொங்கு நாட்டில் மறைந்தார். இதனால் தேவர்கள் முனிவர்கள் அனைவரும் தங்களது சாபம் நீங்க சிவபெருமானை காண அலைந்தனர். பழனி வந்து அலைந்தனர் மேலும் பழனி அடிவாரத்தில் உள்ள திருவாவின்குடிக்கும் சென்று பஞ்சமுகங்களில் பேறு பெற்றார். இதனை அடுத்து கார்த்திகை மாதத்தின் ஐந்தாம் வாரம் இறுதியில் வெள்ளையங்கிரியில் சிவபெருமனின் பஞ்ச லிங்கங்களை கண்டு பேரு பெற்றனர். அதோடு வெள்ளியங்கிரியில் ஆண்டிசுனையை தீர்த்தம் உள்ளதாம் இந்த தீர்த்தத்தால் தீராத நோய்கள் கூட தீரும் என்று கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி அர்ஜுனனின் ஒருமுறை தவம் மேற்கொண்டிருக்கும் பொழுது சிவபெருமான் அவருடன் திருவிளையாடல் செய்து போர் புரிய இறுதியில் தன் சுய ரூபத்தை காட்டிய சிவபெருமான் அர்ஜுனன் வேண்டிய பாசுப்பதத்தை வழங்கி அர்ஜுனனுக்கு முக்தியும் அளித்தார். மேலும் பார்வதியின் வேண்டுதலால் சிவபெருமான் திருநடனம் ஆடியது வெள்ளையங்கிரி மலை என்றும் கூறப்படுகிறது. இப்படி பூலோக கைலாயம், இரசதகிரி கைலாயம் மற்றும் தக்கின கைலாயம் என அழைக்கப்படுகின்ற வெள்ளையங்கிரி ஆண்டவர் மலைக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது இந்த கோவில் குறித்து சமூக வலைதளத்தில் தற்போது வீடியோக்களும் கருத்துக்களும் வைரலாகி வருகிறது. அதோடு பெண்களுக்கு இந்த கோவிலில் அனுமதி இல்லை என்றும் அதிகாலை 4 மணிக்கு மழை ஏற ஆரம்பித்தால் மலைக்குகை கோவிலில் நண்பகலின் நடைபெறும் ஆராதனையும் கலந்து கொள்ளலாம் என்றும் கூறுகின்றனர் பக்தர்கள்.

அதுமட்டுமின்றி காசிக்கு சென்று ஆயிரம் பெயருக்கு அன்னதானம் வழங்கியபோது கிடைக்கும் புண்ணியம் வெள்ளையங்கிரி மலை கோவிலில் ஒருவருக்கு பிச்சை போடுவதன் மூலம் கிடைக்கும் என்றும் கூறுகின்றனர்.  மலையில் ஏற திறன் இருப்பவர்கள் மலைக்குறை கோவிலில் அமைந்திருக்கும் சிவபெருமானை கண்டு தரிசனம் பெறலாம் அல்லது மலை மேல் ஏற முடியாதவர்களால் மலையடிவாரத்தில் உள்ள சிவபெருமான் மற்றும் உமயாளை தரிசித்து அபிஷேகம் செய்து அவர்கள் நேர்ந்திருந்த நேர்த்திக்கடனையும் முடிக்கலாம் என்று கூறப்படுகிறது.