தமிழகத்தில் தற்போது திமுகவின் நிலைமை என்பது மிகவும் பரிதாபமாக பார்க்கப்படுகிறது ஏனென்றால் கடந்த 2021 திமுக தனது ஆட்சி பொறுப்பை தமிழகத்தில் ஏற்றதிலிருந்து தொடர் சரிவுகளையும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது அது மட்டும் இன்றி அந்த சரிவு மற்றும் விமர்சனங்களுக்கு திமுகவின் நிர்வாகிகளை காரணமாக இருந்ததும் அறிவாலய தலைமையை அதிர்ச்சிக்கு உள்ளாகியது. அதிலும் குறிப்பாக திமுகவின் மூத்த அமைச்சர்களான பொன்முடி, எவ வேலு மற்றும் துரைமுருகன் போன்றோர் தமிழக மக்களை தரை குறைவாக நடத்தியதும் அலட்சியப்படுத்தி பேசியதும் தமிழக முழுவதும் வைரலானது மேலும் பல கண்டனங்களை பெற்றது இதனால் திமுக தலைமை திண்டாடியதோடு முதல்வர் மு க ஸ்டாலின் திமுகவின் பொது கூட்டத்தில் மூத்த அமைச்சர்களின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேசி இருந்தார்.
இதனை அடுத்தும் சில அமைச்சர்களின் நடவடிக்கைகள் அதேபோன்று இருந்தது அடுத்து அவர்களின் பதவிகளும் மாற்றப்பட்டது சிலருக்கு பதவியும் பறிக்கப்பட்டது இதனை அடுத்து திமுக அமைச்சர்கள் மீதான வழக்குகள் ஒவ்வொன்றும் துளிர் விட ஆரம்பித்தது முதலில் செந்தில் பாலாஜி அடுத்து பொன்முடி தற்போது துரைமுருகன் அமைச்சர் சேகர்பாபு என ஒவ்வொருவரும் வரிசையாக வழக்கு பட்டியலில் சிக்கி உள்ளனர் அதுமட்டுமின்றி அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை மேற்கொள்ளப்படும் சோதனைகள் அனைத்திலும் திமுகவின் அமைச்சர்கள் அல்லது நிர்வாகிகள் ஏதாவது ஒரு வகையில் சம்பந்தாம் இருப்பதாகவும் அங்கு கோடிக்கணக்கான ரூபாய் மற்றும் கணக்கில் வராத ஆவணங்கள் பொருட்கள் கைப்பற்றப்பட்ட செய்தியும் தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் தலைநகரில் பெய்த மழையால் திமுக அரசு மீது மக்களுக்கு இருந்த அதிருப்தி மேலும் அதிகரித்தது நிவாரண பொருட்கள் இன்றி மீட்பு பணிகளும் நடைபெறாமல் மக்கள் திண்டாடிய காட்சிகள் அனைத்தும் சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் வைரலானது. இப்படி ஒவ்வொரு பக்கமும் திமுக தனது சரிவை சந்தித்து வரும் நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேலைகளில் தீவிரமாக இறங்கி உள்ளது இதற்கான ஒருங்கிணைப்பு கூட்டத்தையும் மாவட்ட வாரியாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது இந்த ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கட்சிக்குள்ளே பல சச்சரவுகள் மற்றும் புகைச்சல்கள் ஏற்பட்டுள்ளதும் வெளியில் இருக்கும் பிரச்சனைகளை சமாளிப்பது விட கட்சிக்குள்ளே பல பிரச்சினைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.
ஏனென்றால் தற்போது கட்சியின் எம்பிகளாக உள்ளவர்களை அதை கட்சி மற்றும் அதே பகுதியை சேர்ந்த திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மீண்டும் அதே தொகுதியில் அவரை நிறுத்தக்கூடாது என்ற கோரிக்கையும் முன் வைத்துள்ளனர் இதன் மூலம் திமுக தன் கட்சிக்குள்ளேயும் ஒற்றுமை இல்லாமல் திமுக எம்பிகள் அவர்களின் தொகுதிகளுக்கே தேவையான சேவைகளை வழங்கவில்லை என்பதும் தெரிய வந்தது. இந்த நிலையில் திமுகவைச் சேர்ந்த ஒரு எம்எல்ஏ தன்னிடம் இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டு தான் செல்லும் இடங்களுக்கு எல்லாம் ஒரு நடிகையை கூட்டி சென்றுள்ளார். அதாவது சென்னை விருகம்பாக்கம் எம்எல்ஏ பிரபாகர் ராஜா கட்சி நிர்வாகிகளின் நிகழ்ச்சிகள் மற்றும் மற்ற பொது நிகழ்ச்சிகள் அனைத்திலும் கலந்து கொள்ளும் போது தன்னுடன் ஒரு நடிகையையும் அழைத்துச் செல்வதாக திமுக பிரமுகர்களே திமுக தலைமையிடம் குற்றம் சாடியுள்ளனர்.
ஏற்கெனவே கட்டப்பஞ்சாயத்து மற்றும் பண வசூல் போன்ற பல சர்ச்சைகளில் சிக்கி திமுக விற்கு பின்னடைவை ஏற்படுத்திக் கொடுத்ததால் திமுக தலைமை அவரை அழைத்து கண்டித்து அனுப்பியது ஆனால் அமைச்சர் மா சுப்பிரமணியத்தின் ஆதரவுகள் இவருக்கு இருப்பதால் தலைமையின் நடவடிக்கைகளுக்கு சிக்காமல் தப்பித்துக் கொண்டே வருகிறார் எம்எல்ஏ பிரபாகர் ராஜா என கூறப்படுகிறது, இந்த நிலையில் இவர் மீது இப்படி ஒரு புகாரை திமுக நிர்வாகிகளே முன் வைத்திருப்பது அறிவாலய தலைமையை கடுப்பில் ஆழ்த்தியுள்ளதாகவும் இதனால் திமுக எம்எல்ஏ பிரபாகர் ராஜா மீது நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்றும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.