24 special

ஒரு மாசமாச்சே டிஸ்சார்ஜ் ஆகனுமே...! ஆரம்பமான அழுகாச்சி...!

Rn ravi , senthilbalaji
Rn ravi , senthilbalaji

செந்தில் பாலாஜியின் வழக்குகள் விசாரணை நிலையில் இருந்து வருகிற சமயத்தில் ஆளுநர் ஆர் என் ரவி செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்த நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டார் இந்த அறிவிப்பு வெளியிட்ட 4 மணி நேரத்திற்கு பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின் பரிந்துரையின்படி மூத்த வழக்கறிஞரான அட்டர்ணி ஜெனரல் ஆலோசனை கேட்ட பிறகு அறிவிப்பு வெளியாகும் என்று செந்தில் பாலாஜி பதவி நிக்க அறிவித்த அறிவிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார் ஆளுநர். குற்ற வழக்கில் ஒரு அதிகாரி இருக்கும் பொழுது அவரை பதவி நீக்கம் செய்வதே முறையானது என்று பல தரப்பிடமிருந்து ஏன் ஜார்கண்ட் ஆளுநரே கூறும் பொழுதும் தமிழக அரசு செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்ற அறிவிப்பை திருப்பி வாங்காமல் இருந்து வருகிறது. 


ஆனால் ஆளுநருக்கு அது விருப்பம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது, பிறகு ஒரு வார பயணமாக டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் நேரில் சந்தித்து செந்தில் பாலாஜி வழக்கு பற்றி ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் வழக்கு வேறு நீதிமன்றத்தில் பல கட்டங்களாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்படி செந்தில் பாலாஜி விவகாரத்தில் பல திருப்பங்கள் ஏற்பட்டடுள்ளது. தற்போது செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாதங்களாகியுள்ள நிலையில், எப்போது அவரை டிஸ்ஜார்ஜ் செய்யலாம் என்று யோசித்து திட்டமிட்டு இந்த வாரத்தில் அவரை டிஸ்சார்ஜ் செய்ய உள்ளதாகவும் செந்தில் பாலாஜி தரப்பு  முடிவெடுத்ததாக தகவல்கள் கூறுகின்றன.

இதற்கிடையில் ஆளுநர் தொடர்ந்து நமது அரசியல் விவகாரங்களில் தடையிட்டு வருகிறார் அதனால் அவருக்கு எதிராக ஏதேனும் வழக்கு பதியலாமா என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது இதனால் மூத்த வழக்கறிஞர்களும் இதற்கு முன்பு ஆளுநர் மீது ஏதேனும் வழக்கு பதியப்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்து வருவதாகவும் சமயம் கிடைத்தால் ஆளுநர் மீது வழக்கு பதிந்து விடலாம் என்ற எண்ணத்தில் அறிவாலய வட்டாரம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இந்த நிலையில் ஆளுநர்  நேற்று முன்தினம் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக உள்ள அட்டர்ணி ஜெனரல் ஆர் வெங்கட்ரமணி ஆகியோரை சந்தித்தது செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதற்கான ஆலோசனைகளில் தமிழக ஆளுநர் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதோடு மறுபுறம் ஐடி அதிகாரிகள் கரூர் பகுதிகளில் தனது சோதனையில் இறங்கியதால் தற்போது செந்தில் பாலாஜியின் தரப்பு மருத்துவமனையில் இருந்து செந்தில் பாலாஜியை  டிஸ்ஜார்ஜ் செய்வது பற்றி யோசிக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளதாகவும் அது பற்றிய முடிவை பிறகு பேசிக்கொள்ளலாம் என்று அதனை தள்ளி போட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

வீட்டிலிருந்தே ஓய்வு எடுக்கலாம் என்கின்ற நிலை இருக்கும் பொழுதிலும் செந்தில் பாலாஜி தற்போதைக்கு மருத்துவமனையில் இருந்து வெளியில் வர வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நீதிமன்ற காவலில் இருந்த பொழுது அமலாக்கத்துறை விசாரணை மேற்கொள்வதற்காக சென்ற பொழுதே, அவருக்கு முடியவில்லை! அவர் தற்போது ஓய்வில் இருக்க வேண்டும்! அவரை மறுபடியும் சிக்கலில் தள்ளி விடாதீர்கள்! என்று செந்தில் பாலாஜியின் தரப்பினர் கூறி விசாரணையில் இருந்து தப்பித்து வந்த நிலையில் தற்போது வெளியில் சென்றால் மறுபடியும் சிக்கலில் மாட்டிக் கொள்வோம் என்று டிஸ்சார்ஜ்ஜை தள்ளிப் போட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.