24 special

வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்கனும் ...! அறிவாலயத்தில் விழுந்த அர்ச்சனை யாருக்கு தெரியுமா...!

Mk stalin,rs bharathi
Mk stalin,rs bharathi

சமீப காலமாக திமுக அமைச்சர்கள் பாஜகவுக்கு எதிராக பல கருத்துக்களை சர்ச்சைக்குரிய வகையில் கூறி வருகின்றனர். குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக, தி.மு.கவின் மேடை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆளுநரை அவதூறாக பேசியது பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அந்த கூட்டத்தில் பேசிய போது மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பிற கட்சித் தலைவர்களை மிகவும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியதால்  அரசியல் தலைவர்கள் பலரும் தனது கண்டனத்தை தெரிவித்து வந்தனர் . மேலும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஒருவரையும் விட்டு வைக்காமல் வெளுத்து வாங்கிய பேச்சால் திமுகவிற்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது.


இந்தநிலையில் சமீபத்தில் பாஜகவிற்கு எதிராக எதிர் கட்சிகள் கூட்டம் பிஹாரில் நடைபெற்ற போது 19 எதிர்க்கட்சி தலைவர்கள் காங்கிரஸ் உடன் இணைந்து பாஜகவை எதிர்ப்பதற்கு பல திட்டங்கள் எடுத்துள்ள நிலையில் அடுத்த கட்ட  கூட்டம் பெங்களூரில் நடைபெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தை குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது பேசும்போது, 'மேகதாது அணை விஷயத்தை நாங்கள் விடப்போவதில்லை, ஒருவேளை முதல்வர் ஸ்டாலின் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பெங்களூரு சென்றால் திரும்பி வரும்போது கண்டிப்பாக கறுப்புக்கொடி காட்டி 'கோ பேக் ஸ்டாலின்' என கூறுவோம்! நானே நின்று முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டுவேன்' எனக் கூறியது திமுகவினரிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா திருச்சியில் கே என் நேரு அவர்களின் தலைமையில் பெரும் விமர்சையாக நடைபெற்றது. திமுக கட்சியின் அமைச்சர்கள்  பலரும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.  இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஆர் எஸ் பாரதி மேடையில் பேசும்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சுட்டிக்காட்டி தனது பேச்சை முன் வைத்தார். அண்ணாமலைக்கு தைரியம் துணிச்சல் இருந்தால் முடிந்தால் முதல்வரை  தடுத்து பார்க்கட்டும் என அண்ணாமலை கூறியதற்கு எதிராக தனது கருத்து தெரிவித்தார்.

மேலும் பேசிய ஆர்.எஸ்.பாரதி, 'திமுக கட்சியினர் பல இடங்களில் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருவதால் பிரதமர் மோடி திமுகவை சீண்டி பார்க்கிறார், அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியின் மீது அத்துமீறி நடவடிக்கை எடுத்துள்ளது, நல்ல வேலை அவர் இருதய நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார் இல்லையெனில் அவரது உயிரையும் எடுத்து இருப்பார்கள்' என ஆர்.எஸ்.பாரதி பேசியது மட்டுமல்லாமல்பிரதமர் மோடி, வருமானவரித்துறை, அமலாக்கத்துறை என சர்ச்சைக்குரிய கருத்துக்களை அந்த கூட்டத்தில் பேசினார்.

ஏற்கனவே திமுக கடுமையான இடர்பாடுகளை சந்தித்துவரும் நிலையில், வரும் நாட்களில் அண்ணாமலை டி.எம்.கே பைல்ஸ் இரண்டாம் பாகத்தை வெளியிடப்போகும் நிலையில், அந்த நிகழ்ச்சியை அமித்ஷா வந்து துவங்கிவைக்கும் நிலையில், ஆர்.எஸ்.பாரதி இவ்வாறு பேசியிருக்கக்கூடாது என சில திமுகவினரே கூறுவதாகவும், இதனால் விளைவுகள் அதிகம் இருக்கும் எனவும் பேச்சுக்கள் அடிபடுகிறது.

ஏற்கனவே தொடர் ரெய்டுகள், பாஜக மற்றும் திமுகவினர் இடையே கடுமையான மோதல் போக்கு என வெடித்துவரும் வரும் நிலையில் ஆர் எஸ் பாரதி பேசியதற்கு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றே பாஜகவினர் தரப்பிலிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்ணாமலை திமுகவின் பைல்ஸ் 2 சொத்து பட்டியலை வெளியிடும் நிலையில் ஆர் எஸ் பாரதி பேசியது திமுகவிற்கு வில்லங்கமாக அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்களிடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதனால் ஆர்.எஸ்.பாரதி மீது அறிவாலய தரப்பு கடுமையான கோபத்தில் இருப்பதாகவும் தெரிகிறது.