கீர்த்தி பாண்டியன் பிரபல நடிகரான அருண்பாண்டியன் மகள். இவர் தனது தமிழ் திரை உலகை 2019 ஆம் ஆண்டு இயக்குனர் ஹரிஷ் ராம் இயக்கத்தில் வெளியான தும்பா என்ற படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கினார், அதற்குப் பிறகு 2021 ஆம் ஆண்டு இயக்குனர் கோகுல் இயக்கத்தில் அன்பிற்கினியால் என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்தார். கீர்த்தி பாண்டியன் தனது கல்லூரி படிப்பை செட்டிநாடு வித்யாஷ்ரம் என்ற கல்வி நிறுவனத்தில் முடித்துவிட்டு முழுவதுமாக படங்களின் நடிக்க ஆர்வம் கொண்டிருந்தார். இதனால் கீர்த்தி பாண்டியன் தனது பட்டம் பெற்றதிலிருந்தே பலே பாண்டியன் மற்றும் சல்சா போன்ற நடன கலைஞராக திரை வாழ்க்கையை தொடங்கி 2015 க்கு பிறகு நாடக நடிப்பிற்கு மாறினார்.
இருப்பினும் கீர்த்தி பாண்டியனின் நிறம் எடை போன்றவற்றை காரணம் காட்டி பல இவரை நிராகரித்துள்ளனர். இதனால் இவரது தந்தை சொந்தமாக நடத்தி வந்த திரைப்பட விநியோக நிறுவனமான ஏ & பி குரூப்ஸ்சில் தலைமை இயக்குனராகவும் மாறி நிறுவனத்தை நடத்தி வந்தார். மேலும் ஒரு நிறுவனத்தை சிங்கப்பூரில் தனது சொந்த விநியோக நிறுவனமாக நடத்தி வந்துள்ளார். 2015 க்கு பிறகு இவருக்கு கிடைத்த வாய்ப்புகளை தும்பா மற்றும் அன்பிற்கினியால் ஆக இரண்டு படங்கள், பெரும்பாலான இயக்குனர்கள் இவரின் தோற்றத்தை காரணம் காட்டி நிராகரித்தனர் எனினும் தற்போது கீர்த்தி பாண்டியனின் கையில் கொஞ்சம் பேசினால் என்ன, கண்ணகி மற்றும் ப்ளூ ஸ்டார் ஆகி படங்கள் உள்ளது.
திரை உலகில் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் இருந்து வந்த இவர் சமீபத்தில் இவரது திருமணம் பெருமளவில் பேசப்பட்டது விமர்சனமும் செய்யப்பட்டது ஏனென்றால் இவர் தமிழ் திரையுலகின் இளம் நடிகரான அசோக்செல்வனை மணந்து கொண்டார் இவர்களது திருமணம் என்பது யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக இருந்தது இவ்விருவருமே தற்பொழுது ப்ளூ ஸ்டார் படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கீர்த்தி பாண்டியன் இதுவரை திரையுலகில் சந்தித்த இன்னல்களை குறித்து சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் வெளிப்படையாக பேசி உள்ளார். எனக்கும் அசோக் செல்வனுக்கு திருமணமாகியதில் இருந்து இருவருமே நடிப்பை மிகவும் பிசியாக இருந்து வருகிறோம் என்னை நன்கு புரிந்து கொண்டவர் அசோக்ஷயங்கள் எனக்கு மரியாதையும் தருகிறார் படங்களில் பிசியாக உள்ளதால் நாங்கள் இருவரும் வீட்டில் இணைந்திருக்கும் நாட்கள் எத்தனை என்று விரல் விட்டு எண்ணக் கொண்டிருக்கிறோம்.
மேலும் படங்கள் குறித்து எந்தவிதமான கருத்துக்கள் தோண்டினாலும் இருவரும் பகிர்ந்து கொள்வோம் என்ன தனது திருமண வாழ்க்கை குறித்து கூறிக் கொண்டிருந்த கீர்த்தி பாண்டியன், ஒருவரின் முதல் தோற்றத்தை விமர்சிப்பது மிகவும் தவறானது சிறுவயதிலிருந்தே எனது தோற்றத்திற்காகவும் எனது உயரம் எடை நிறத்திற்காகவும் பெருமளவில் விமர்சனங்களை பெற்றுள்ளேன் அப்பொழுதெல்லாம் எதிர்மறையான விமர்சனங்களை நினைத்து பயங்கரமாக அழுது இருக்கிறேன்! ஆனால் இப்பொழுது அதனை யோசித்துப் பார்க்கும் பொழுது அந்த காலகட்டத்திற்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் ஏனென்றால் நான் எனக்காகவே என்னை பலமாக்கிக் கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார். இதற்கிடையில் சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட கீர்த்தி பாண்டியன் தனக்கு நேர்ந்த பாதிப்பையும் அரசு தரப்பில் மீட்பு நடவடிக்கைகள் நடைபெறவில்லை என்பதையும் சுட்டிக் காட்டியதற்காக திமுக தரப்பிலிருந்து இவரை குறிவைத்து சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.