சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு அறிமுகமானவர், இவர் ஆரம்பத்தில் தனுஷுடன் ஒரு படத்தில் துணை நாயகனாக அறிமுகமாகி நாளடைவில் கதைக்கு ஏற்றாற்போல் நாயகனாக அவதாரம் எடுத்தார். இவரது வளர்ச்சிக்கு பலரும் மறைமுகமாகவே எதிர்ப்பு தெரிவித்தனர். அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தன் பாதையை நோக்கி சென்ற சிவகார்த்திகேயன் மீது அடுக்கடுக்கான குற்றசாட்டை வைத்தார் பிரபல இசையமைப்பாளர் இமான் இது குறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்த சிவகார்த்திகேயன் தற்போது வெளியில் வந்து செய்த சம்பவம் மூலம் தவளை தன் வாயில் கெடுவது போல் சர்ச்சை எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நிவாரண தொகையாக முதலமைச்சர் ஸ்டாலின் தனது ஒரு மாத சம்பளத்தை கொடுப்பதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் மிக்ஜாம் புயல் பாதிப்பில் இருந்து மக்களை காக்கும் விதமாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் 10 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இதற்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நடிகர் சிவகார்த்திகேயன் வழங்கினார்.
ஒருபக்கம் சிவகார்த்திகேயன் கொடுத்த தொகைக்கு நன்றி குவிந்தாலும் மறு பக்கம் இவ்ளோ நாள் எங்கே சென்றிர்கள் உங்களது சின்னத்திரை நடிகர் பாலா 3 லட்சத்திற்கும் மேலாக நிவாரண தொகையை அறிவித்ததன் காரணமாவகவே சிவகார்த்திகேயன் நல்ல பெயர் வாங்கவே இதுபோல் செய்திருக்கலாம் என அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது. மேலும், சிவகார்த்திகேயன் மீது இசையமைப்பாளர் இமான் அவருடைய வாழ்க்கையில் நடந்த துயரத்தை நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். இதன் மூலம் சிவகார்த்திகேயேன் பெயர் சினிமா மட்டுமின்றி அவரது ரசிகர்கள் இடத்திலும் டேமேஜ் ஆனது இது குறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்த நடிகர் சிவகார்த்திகேயன் பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார். இந்நிலையில், அந்த சம்பவத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் அதனை எல்லாம் மறைக்கவே இது போல் தொகை கொடுத்திருக்கலாம் என சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.