தருமை ஆதினம் முகநூல் பக்கத்தில் பகிரப்பட்ட பதிவு ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழகத்தில் ஆதினங்கள் செயல்பாடுகள் எப்போதும் ஆன்மீக பணியை மேற்கொள்ளும் வகையில் அமைந்துள்ளன, அதே நேரத்தில் எப்போதெல்லாம் தங்கள் சமயத்திற்கு ஒரு பாதிப்பு வருகிறதோ அப்போது அதனை எதிர்த்து குரல் கொடுக்கவும் தருமை ஆதினம் மற்றும் தற்போதைய மதுரை ஆதினம் இன்னும் பல ஆதினங்கள் தயங்குவது கிடையாது.
அந்த வகையில் கடந்த மாதம் தமிழக ஆளுநரை அழைத்து மயிலாடுதுறை தருமை ஆதினம் விழா ஒன்றை நடத்தினார், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த தமிழக ஆளுநருக்கு திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் திராவிடர் கழகம் போன்ற அமைப்புகளும் எதிர்ப்பை தெரிவித்தன, இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் கார் மீது கருப்பு கொடி வீசப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை உண்டாக்க அது ஆளும் அரசிற்கு கடும் பின்னடைவை கொடுத்தது.
இதன் எதிரொலியாக பல நூறு ஆண்டுகளாக நடைபெறும் தருமை ஆதினம் பல்லக்கு பிரவேஷத்திற்கு தமிழக அரசு கோட்டச்சியர் மூலம் மனிதனை மனிதனே தூக்குவது தவறு என புது கருத்து ஒன்றை கூறி தடை செய்தது, ஆனால் கடுமையான எதிர்ப்பு கிளம்புய நிலையிலும் பல்வேறு அரசியல் கட்சிகள், ஆதினங்கள், மத குருமார்கள், இந்து அமைப்புகள் ஆகியவற்றின் போராட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு பின்வாங்கியது.
நேற்று கொடுக்கப்பட்ட தடையை நீக்கி தமிழக அரசு பின் வாங்கியது இது ஒருபுறம் என்றால் முதலில் இந்த விவகாரத்தை ஊதி பெரிதாக்கி இப்போது பொது மக்கள் மத்தியில் கொண்டு சென்ற பங்கு திராவிட கழகத்தை சேரும், தருமை ஆதினம் பட்டினம் பிரவேஷத்தை தடை செய்யவேண்டும் என பேசியது வீரமணிதான்.
நிலை இப்படி இருக்க இன்று தருமை ஆதினம் முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்து இருக்கிறார்கள், அதில் ஆதீனம் அரசியல் பேசக்கூடாது-ஓசி சோறு வீரமணி.பாதிரியார் சற்குணம், ஜார்ஜ் பொன்னையா பேசும் போது, இந்த வாயில் என்ன இருந்தது என ஒருவர் பதிவிட்ட பதிவை தருமை ஆதினம் முகநூல் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்கள். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த முகநூல் கணக்கை 29 ஆயிரம் நபர்கள் பின் தொடர்கிறார்கள் இதுதான் தருமை ஆதினத்தின் அதிகார பூர்வ கணக்கா என்பது அதில் குறிப்பிடப்படவில்லை எனினும் இதில் தருமை ஆதினம் குறித்த அனைத்து தகவல்களும் இடம்பெற்று இருக்கிறது. ஆதினங்கள் ஒரு முடிவோடுதான் இருக்கின்றன போல?