தமிழகத்தில் pகெத்தாக மேடையில் பேசிய நபர்களுக்கு தக்க பாடம் டெல்லியில் புகட்ட படும் என பாஜகவினரும், பாஜகவை சேர்ந்த நடிகை குஸ்புவும் தெரிவித்து இருந்தனர், இதனை பலரும் சாதாரண அரசியல் பேச்சாக இருக்கலாம் நடவடிக்கை எல்லாம் ஒன்றும் இருக்காது என எண்ணிய நிலையில் டெல்லியில் அமைந்துள்ள தேசிய பெண்கள் ஆணையம் சாட்டையை சுழற்றி இருக்கிறது.
அந்த வகையில் கடந்த சில அக்டோபர் மாதம் சென்னை ஆர்.கே.நகரில் திமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை கழக பேச்சாளர் சைதை சாதிக் பாஜகவை சேர்ந்த நடிகைகள் குஷ்பு, நமீதா, கெளதமி, காயத்ரி ரகுராம் ஆகியோரை ஆபாசமாக பேசினார்.
அவர் பேசும்போது மேடையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உட்கார்ந்திருந்தார்.இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. பலரும் சைதை சாதிக் பேசியதற்கு தங்களது கண்டனத்தைத் தெரிவித்திருந்தனர்.
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆண்கள் பெண்களை அவதூறாக பேசும்போது, அவர்களது வளர்க்கப்பட்ட விதத்தை காட்டுகிறது.
இந்த ஆண்கள் பெண்ணின் கருப்பையை அவமதிக்கிறார்கள். அப்படிப்பட்ட மனிதர்கள் தங்களை கலைஞரை பின் தொடர்பவர்கள் என்று கூறி கொள்கிறார்கள்.
இது தான் மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் இயங்கும் திராவிட மாடலா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.இதனை தொடர்ந்து சைதை சாதிக் பாஜகவை சேர்ந்த நடிகைகளை ஆபாசமாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டார்.
சைதை சாதிக் தனது ட்விட்டர் பதிவில், “நான் மேடையில் பேசிய பேச்சு தவறாக சித்தரிக்கப்பட்டு ஜோடிக்கப்பட்டு வெளிவந்துள்ளது இருப்பினும் மரியாதைக்குரிய நடிகை குஷ்பு அவர்கள் மனம் புண்பட்டிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்தார் ஆனால் குஸ்பு , என்னைப் பற்றி அவதூறாக பேசியவரின் மன்னிப்பை நான் ஏற்க தயாராக இல்லை என உறுதி பட தெரிவித்தார்.
அதன் பின்பு நீதிமன்றம் மக்கள் மன்றம் என அனைத்து இடங்களிலும் மன்னிப்பு கேட்ட சைதை சாதிக்கிற்கு தேசிய பெண்கள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது முதலில் கண்டுகொள்ளாத சைதை சாதிக், தேசிய மகளிர் ஆணையத்தின் பலம் தெரிந்ததும் நேரடியாக டெல்லி சென்றார் அங்கு குஸ்பு குறித்து அவதூறாக பேசியது ஏன் என்ற விளக்கம் கேட்க....
Yes மேம் நோ மேம் என பள்ளி குழந்தைகள் தலைமை ஆசிரியரை பார்த்து பயம் கொள்வது போல பாவமாக முகத்தை வைத்து கொண்டு பேசினார் சைதை சாதிக், இறுதியில் அதெல்லாம் தெரியாது இனிமேல் பெண்கள் குறித்து அவதூறாக பேச மாட்டேன் என முழு விளக்கமாக மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துவிட்டு செல்லுங்கள் என கூற...,
காலில் விழுந்தது போன்று மன்னிப்பு கடிதத்தை எழுதி கொடுத்துவிட்டு சத்தம் இல்லாமல் சென்னை திரும்பி இருக்கிறார் சைதை சாதிக், இதில் காமெடி என்ன என்றால் மன்னிப்பு கேட்க டெல்லி சென்ற புகைப்படத்தை ஏதோ நல்ல காரியத்திற்கு டெல்லி செல்வது போல ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் நம்ம மன்னிப்பு மன்னன் சைதை சாதிக்.
திராவிட இயக்கத்தின் வரலாறை டெல்லியில் மன்னிப்பு கேட்டு அசிங்க படுத்திவிட்டாயே என ஒரு பக்கம் உடன்பிறப்புகள் விமர்சனம் செய்ய மறு பக்கம் இனி உன் பெயர் சைதை சாதிக் இல்லை மன்னிப்பு சாதிக் என பாஜகவினர் கிண்டல் அடித்து வருகின்றனர்.
எது எப்படியோ தமிழகத்தில் வைத்து இந்த பிரச்சனையை மூடி விடலாம் என நினைத்த சாதிக்கிற்கு டெல்லிவரை ஓடவிட்டு மன்னிப்பு கேட்டு சென்னை திரும்ப வைத்து இருக்கிறார் குஸ்பு என்கின்றனர் நமது டெல்லி வட்டாரங்கள்.