24 special

கோகினூர் சாபம் தொடர்கிறது

cancer, stone
cancer, stone

தங்கத்தில் பல நகைகள் வாங்கி அணிந்து அலங்கரித்துக் கொண்டாலும் வைர நகைகளையும் ஒரே ஒரு வைரக்கல் கொண்ட மூக்குத்தியாவது வாங்க வேண்டும் என்று ஆசை பல பெண்களுக்கு இருப்பது உண்டு! ஆனால் நம் நாட்டில் வைரங்கள் வாங்குவதற்கு முன்பு பல சம்பிரதாயங்களை பின்பற்றுவர் ஏனென்றால் சில வைரங்கள் நம்மை அகல பாதாளத்திற்கு அழைத்துச் செல்லும் என கூறுவர். இதனாலேயே பெரும்பாலான வைரப்பிரியர்கள் வைரத்தில் ஒரு நகை வேண்டும் என்றால் முதலில் அந்த வைரக் கற்களை வாங்கி தன் வீட்டின் பூஜையறைகள் வைத்து அந்த வைரக்கல் வந்த பிறகு நமது குடும்ப சூழ்நிலை எப்படி உள்ளது ஆரோக்கியம் வருமானம் என அனைத்தையும் கருத்தில் கொண்டு அவை அனைத்தும் உயர்ந்திருந்தால் அந்த வைரத்தை தனக்கு சொந்தமாக மாற்றி விடுவார்கள் ஒரு வேலை அந்த வைரக்கல் தனக்கு எதிர்மறையான விபரீதங்கள் மற்றும் விளைவுகளை ஏற்படுத்திக் கொடுத்தால் அந்த வைரக் கல்லை கொடுத்துவிட்டு வேறு கற்களை வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 


அப்படி ஒருவரின் உயர்வுக்கும் அழிவிற்கும் காரணமாக சில வைர கற்கள் இருப்பது கதைகளில் பேசப்பட்டாலும் நிஜத்திலும் பின்பற்றப்படுகிறது. இந்த நிலையில் பிரிட்டன் அரசராக கடந்த 2023 முடிசூட்டப்பட்ட சார்லசிற்கு கேன்சர் ஏற்பட்டுள்ளது வைரக்கற்களின் சாப பக்கத்தை குறித்த பேச்சை மீண்டும் வைரலாக்கி உள்ளது. அதாவது பிரிட்டன் அரசு குடும்பத்திற்கு சொந்தமாக உள்ள கோகினூர் வைரம் தொடர்ச்சியாக ஆண் வாரிசுகளை அழித்து வந்ததாகவும் அதன் சாபமே தற்போது பிரிட்டன் மன்னர் சார்லசிற்கும் பாய்ந்துள்ளதாக பேசப்படுகிறது. முதலில் கோஹினூர் வைரம் ஆந்திரா கோல்கண்டாவில் உள்ள கொல்லூர் சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டதாகவும் அப்பொழுது இந்த வைரத்தை வாரங்கல்லில் உள்ள பத்திரகாளியம்மன் இடது கண்ணாக அலங்கரித்து அப்பகுதி மக்கள் பூஜை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அதற்குப் பிறகு அப்பகுதி அலாவுதீன் கில்ஜியால் கைப்பற்றப்பட்ட காலத்தில் இந்த வைரம் கொள்ளை அடிக்க பட்டதாகவும் அதற்குப் பிறகு இந்த வைரம் பல மன்னர்களின் வசம் சென்று அவர்கள் அனைவரின் அழிவிற்கும் இந்த வைரம் முக்கிய காரணமாக அமைந்ததாகவும் ஒரு கதை பேசப்படுகிறது.

அதுமட்டுமின்றி 1728 ஆம் ஆண்டில் ஷாஜகான் கோஹினூர் வைரத்தை பயன்படுத்தி தனக்கு ஒரு மயில் வடிவிலான சிம்மாசனத்தை உருவாக்க உத்தரவிட்டதாகவும் அதற்குப் பிறகு மயில் வடிவிலான கோஹினூர் வைரம் பதித்த சிம்மாசனத்தை பாரசீக மன்னர் நாதர்ஷா கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது. மேலும் பல ஆண்டுகளாக இந்த வைரம் ஆப்கானிஸ்தானில் இருந்து மகாராஜா ரஞ்சித் சிங்கிடம் சென்றதாகவும் அதற்குப் பிறகு இவரது மகனை வற்புறுத்தி இந்த வைரத்தை பிரிட்டனிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஆவணத்தில் கையெழுத்திட்டு கிழக்கிந்திய நிறுவனம் பெற்றுள்ளது.. இந்த வைரத்தை கிழக்கு இந்த நிறுவனம் பெற்ற பிறகு 1857ல் கிளர்ச்சி ஏற்பட்டு இந்த கம்பெனி அழியும் நிலைக்கு சென்றதற்காடுத்து பிரிட்டிஷ் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இந்தியா சென்றது! இதற்குப் பிறகு வைரத்தை பிரிட்டிஷ் அரச குடும்பங்களின் சொத்தாக கூறப்பட்ட தலைமுறை தலைமுறையாக பாதுகாக்கப்படுகிறது.

ஆனால் இந்த வைரத்தை அடைந்த கில்ஜி பேரரசு, முகலாய பேரரசு, துரானி பேரரசு, ரஞ்சித் சிங் என்ற பலரும் மரணம் அடைந்து தங்கள் அழிவை சந்தித்தனர். இதனால் கோகினூர் வைரத்தை கொண்டிருக்கும் ஆண் வாரிசுகள் மரணமடையும் சாபத்தை கொண்டதாகவும் சொல்லப்பட்டது. இந்த கதையை தெரிந்த பிரிட்டிஷ் அரசு குடும்பமும் இந்த வைரத்தை ஆண் வாரிசுகள் அணியாமல் பெண்களயே  அணிய வைத்து வந்தது அப்படி இந்த வைரத்தை விக்டோரியா மகாராணி முதலில் வைத்திருந்தார் அதற்கு பிறகு எலிசபெத் மகாராணி தனது கிரீடத்தில் பொருத்திருந்தார் இதற்கு அடுத்ததாக எலிசபெத் மகாராணி மறைந்த பிறகு கடந்த 2023 ஆம் ஆண்டு  சார்லஸ் மன்னராக பொறுப்பேற்கப்பட்டார் அப்பொழுது அவரது மனைவியான கமிலா கோகினூர் வைரம் கொண்ட கிரீடத்தை அணியவில்லை எனவும் அதனால் இந்த சாபம் சார்லசை தாக்கி அவரை அழிக்கும் நோக்கில் கேன்சரை ஏற்பட்டுள்ளதாகவும் பல பேச்சுக்கள் உலா வருகிறது.