24 special

பெருசாக சிக்கப்போகும் டி ஆர் பாலு! ஆட்டம் ஆரம்பம்!

annamalai, tr balu
annamalai, tr balu

தமிழகத்தின் மலை பாதிப்பின் பொழுது மத்திய அரசு கொடுத்த நிவாரண நிதி போதுமானதாக இல்லை எனவும் உரிய நிவாரண நிதியை வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். அவற்றிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்றைய முன் தினம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் தமிழகத்திற்கு ஒதுக்கிய நிதி விவரத்தையும் 2014 க்கு பிறகு 2023 வரை பாஜக தலைமையிலான அரசு தமிழகத்திற்கு ஒதுக்கிய நிதி பங்கீடு குறித்தும் வெள்ளை அறிக்கை தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்தார். இப்படி இந்த இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிற நிலையில் நாடாளுமன்றத்தில் கடந்த ஏழாம் தேதி நடைபெற்ற விவாதத்தில் திமுக நாடாளுமன்ற குழு தலைவரான டி ஆர் பாலு பேசும்பொழுது அவரைக் குறிக்கிட்டு மத்திய இணை அமைச்சர் முருகன் பேசியதற்காக டி ஆர்  பாலு எல் முருகன் அமைச்சராக இருப்பதற்கே தகுதியற்றவர் என்று கூறியது பெரும் சர்ச்சையானது. 


மேலும் டி ஆர் பாலு ஒரு அமைச்சரை குறித்து நாடாளுமன்றத்தில் இப்படி பேசியதற்கு மன்னிப்பு கூற வேண்டும் என்று மத்திய அமைச்சர்கள் கூறினார். அதோடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் மத்திய இணை அமைச்சர் எல் முருகனை திமுக எம்பி டி ஆர் பாலு, தகுதியற்றவர் என்று குறிப்பிட்டதோடு பட்டியலின மக்களையும் அவமானப்படுத்தி உள்ளார் அதனால் அவர் நிபந்தனையற்ற மன்னிப்பை கூற வேண்டும் என்று கூறினார். இதனை அடுத்து சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த டி ஆர் பாலுவிடம் அண்ணாமலை கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது அதற்கு அண்ணாமலைக்கெல்லாம் பதில் சொல்லும் அளவிற்கு நான் மலிவாகிவிட்டேனா? அவர் தற்போது அரசியலுக்கு வந்தவர், நான் 65 ஆண்டுகளாக அரசியலில் உள்ளேன், அவருக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டியதில்லை! என ஆவேசமாக பேசினார். இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், நீங்கள் மலிவான மனிதரா என்பதை உங்கள் 65 வருட அரசியல் வாழ்க்கை தீர்மானிக்காது, உங்களுடைய சிந்தனையும் செயல்பாடுகளுமே தீர்மானிக்கும் என்பதை திமுக பாராளுமன்ற உறுப்பினர் திரு டி.ஆர். பாலு அவர்களுக்கு மிகப் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டிருந்தார். 

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த அண்ணாமலையிடம், எம்பி டி ஆர் பாலுவிடம் இதற்கு என்ன நினைக்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்ட பொழுது, விநாச காலம் விபரீத புத்தி என்று கூறுவார்கள்! ஒரு மனிதனுக்கு கெட்ட காலம் ஆரம்பிக்கும் பொழுது அவர் வாயில் இருந்து இது போன்ற பேச்சுக்கள் வரும், பாராளுமன்றத்தின் அவையில் ஒருவரை தகுதியற்றவர் என்று கூறுவது மோசமான வார்த்தைகளை பயன்படுத்துவது இந்த மாதிரி பல இடங்களில் பார்த்தால் அவர்களுடைய ஜாதி வன்மம் வெளி வருகிறது குறிப்பாக பார்த்தால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களின் ஜாதி வன்மம் நீ ஓசியா எஸ் சி யா? என்ன பேசுகிறார்கள் இதெல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்கள் அமைச்சர்கள் சாதாரணமாக பேசுகிறார்கள் டி ஆர் பாலா அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் அரசியல் தற்பொழுது சாமானிய மனிதர்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறது, 

நாங்கள் சாமானிய மனிதர்களின் என்ன ஓட்டத்தை பிரதிபலிக்கிறோம். அவர் பதில் தெரிவிக்கலாம் அல்லது தெரிவிக்காமல் இருக்கலாம் எங்களுடைய 2 ஜி டேப் ஒவ்வொன்றையும் வெளியிட்டு வருகிறோம் நீங்கள் அனைவரும் கேட்டுக் கொண்டிருப்பீர்கள் இன்னும் நான்கு ஜி டேப்புகள் டி ஆர் பாலுவிற்கு என்று இருக்கிறது அவை அனைத்தையும் வெளியிட்ட பிறகு ஒரு பிரஸ்மீட்டை வைக்கிறேன் அப்பொழுது நான் பேசுகிறேன்! இவை அனைத்துமே ஆணவத்தின் உச்சம் என்று கூறியுள்ளார். அண்ணாமலை இப்படி கோபப்பட்டு பேசிய பின்னணியை கமலாலய வட்டாரத்தில் சிலரிடம் விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது, 'அண்ணாமலை திமுகவை எதிர்ப்பதில் முழு மூச்சுடன் இயங்கி வருகிறார் அவரது டாப் லிஸ்டில் TR.பாலு இருக்கிறார், அதுமட்டுமில்லால் டி.ஆர்.பாலு அவர்கள் பேசும் தோரணையும் சரியில்லை, எனவே அடுத்த அம்பலம் டி.ஆர்.பாலு விவகாரங்கள்தான் என கூறினார்கள்....