24 special

இப்படி எல்லாமா சாப்பிடுவீங்க கொங்கு மண்டல உணவுகள் பற்றிய சர்ச்சை! 

food
food

தமிழகத்தின் மேற்கு பகுதியில் உள்ள ஒரு மண்டலமே கொங்கு மண்டலம் என்று அழைக்கப்படுகிறது. இப்பகுதி சேர சோழ பாண்டியன் என்ற மூன்று மன்னர்களாலும் மற்று சில மன்னர்களாலும் ஆளப்பட்டு உள்ளது ஏனென்றால் மேற்கு தொடர்ச்சி மலைகளின் பாலக்காட்டு கணவாய் அருகில் இந்த கொங்கு மண்டலம் அமைந்திருந்தது இதனால் இதனை கைப்பற்றுவதற்கு பல அரசுகள் சண்டையிட்டனர் என்றும் வரலாறு கூறுகிறது. அதாவது கர்நாடகத்தின் சில பகுதிகளையும் வடக்கே கேரளத்தின் சில பகுதிகளையும் இந்த கொங்கு மண்டலம் உள்ளடக்கியதால் எப்பொழுதும் ஒரு மாறுபட்ட காலநிலையையும் இயற்கை அமைப்புகளையும் கொண்டது. தற்பொழுது இந்த கொங்கு மண்டலத்தின் கீழ் கோயம்பத்தூர், ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம், நீலகிரி, திண்டுக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் வருகிறது. இந்தப் பகுதிகளில் பேசப்படும் தமிழ் மொழியை வேறு விதமாக இருக்கும் எப்படி மதுரை, சென்னை பகுதிகளில் பேசப்படும் தமிழ் மொழி வேறு மாதிரி இருக்குமோ அதே போன்று கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர் பகுதிகளில் பேசப்படும் தமிழ் மொழியும் வேறு விதமான விதத்தைக் கொண்டிருக்கும்.


அதோடு அவர்கள் பேசும் மொழியை வைத்தே இந்த ஊரிலிருந்து வந்துள்ளனர் என்பதையும் எளிதாக கண்டுபிடிக்கும் அளவிற்கு கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்களின் மொழி அழகாகவும் வித்தியாசமாகவும் இருக்கும். எப்படி இந்த கொங்கு பகுதிகளில் பேசும் மக்களின் மொழி வித்தியாசமாக இருக்கிறதோ அதேபோன்று அப்பகுதிகளில் அமைக்கப்படும் உணவுகளும் வித்தியாசமாக உள்ளது. சமையல் பாரம்பரியங்கள் அந்த பகுதியில் தனித்தன்மை வாய்ந்ததாகவும் செட்டிநாட்டு உணவு வகைகளுடன் வேறுபட்டது. அதோடு நன்னீர் மீன் மற்றும் நாட்டுக்கோழி போன்றவையும் பொன்னி என்ற அரிசி வகை சார்ந்த குறுகிய தானிய அரிசி, கொள்ளு, துருவிய தேங்காய் மற்றும் மண்பானையில் திணையை ஊறவைத்து தயாரிக்கப்படும் பாலாடை போன்ற உணவுகளும் இப்பகுதியில் அதிக பிரசித்தி பெற்றது .அதுமட்டுமின்றி இப்பகுதிகளில் கம்பு தோசை மணிகாரம் என்கிற காரமான வடகம், கம்பு பணியாரம் ராகி பக்கோடா போன்றவை அதிகமாக செய்யப்படும் உணவுகள்.

இவற்றோடு சேர்ந்து பல வித்தியாசமான உணவுகளும் கொங்கு மண்டல பகுதிகளில் விரும்பி உண்ணப்படுகிறது, அதாவது பரோட்டாவிற்கு சால்னா ஊத்தி சாப்பிடும் பிரியர்களை பார்த்திருப்போம் ஆனால் இப்பகுதியில் உள்ள உணவு பிரியர்கள் பரோட்டாவில் தேங்காய் சட்னி தொட்டு சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர், இவற்றை விட மற்றுமொரு சூப்பர் டிஷ் செய்யும் கண்டுபிடித்துள்ளனர் சேமியாவில் தயிரை சேர்த்து சாப்பிடும் பழக்கத்தையும் கொண்டுள்ளனர். இதைவிட கொங்கு மண்டல பகுதிகளில் சந்தகை என்ற பெயரில் இடியாப்பம் சூடாக பேக் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது மற்றும் தட்டு அடை என்ற பெயரில் பலகார வகையைச் சேர்ந்த தட்டு மீது  மசாலா மற்றும் காய்கறிகள் அல்லது முட்டை வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இப்படி புதுப்புது உணவுகள் இப்பகுதியில் பேமஸ் ஆகியுள்ள நிலையில் தற்போது மற்றுமொரு உணவு குறித்த வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. அதில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் முறுக்கின் மீது தக்காளி சட்னி ஊற்றி விற்பனை செய்யப்படும் கடையும் உள்ளது அந்த கடையை சுற்றி மசாலா முறுக்கு என்ற பெயரில் விற்கப்படும் அந்த உணவுப் பொருளை வாங்குவதற்கு கூட்டமும் அலைமோதியுள்ளது. இப்படி இன்னும் என்னென்ன வித்தியாசமான உணவெல்லாம் கண்டுபிடிச்சு வச்சிருக்கீங்க என்ற வகையில் இந்த வீடியோவிற்கு கமெண்ட்கள் பதியப்பட்டு வைரல் ஆகி உள்ளது.