24 special

இந்தியாவில் மட்டுமல்ல தாய்லாந்தில் ஒரு அயோத்தியா!

ayothi, thailand
ayothi, thailand

 1528 முதல் 1530 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் முகலாய சக்கரவர்த்தி பாபரின் ஆட்சியின் பொழுது மொக்கலாவில் மலைக்குன்றில் பாபர் மசூதி கட்டுவதற்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அந்த இடத்தை எப்படி பாபர் அரசு கைப்பற்றியது குறித்த தகவல்கள் எங்கும் கிடைக்கப்படவில்லை! ஆனால் மசூதி கட்டுப்படுத்துவதற்கான உத்தரவுகளில் இருந்து கட்டிடங்கள் முடிக்கும் வரையிலான விவரங்கள் பாபர் மசூதியில் காணப்படும் கல்வெட்டுகள் மற்றும் அரசு ஆவணங்களில் கிடைக்கிறது. அதற்குப் பிறகு இந்த இடம் குறித்த சர்ச்சைகள் உள்ளூர் மக்களிடையே பெருமளவில் வெடித்தது. ஏனென்றால் மசூதியை சுற்றியுள்ள இடம் ராமர் பிறந்த இடம் என்று இந்து சமுதாயத்தை சேர்ந்த மக்கள் கூறி அங்கு பூஜைகளை நடத்த ஆரம்பித்தனர்! இதனை அடுத்து இந்து சமயத்தை சேர்ந்தவர்கள் பாபர் மசூதியை ஒட்டி ஒரு பீடம் அமைத்து வழிபட்டு வந்தனர்.


இதனால் இஸ்லாமிய தரப்பினர் தங்கள் தொழுகைக்கு இடையூறு  இருப்பதாக ரிட் மனுக்களை தாக்கல் செய்தனர். அதனை எதிர்த்து 1883 ஆண்டில் மசூதிக்கு அருகில் பீடம் அமைக்கப்பட்டிருந்த இடத்தில் கோவில் கட்ட அனுமதிக்க வேண்டும் என்றும் பைசாபா துணை ஆணையரிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. இதிலிருந்து தொடங்கப்பட்ட சர்ச்சை பல நேரங்களில் உயிரிழப்பு வரை சென்று இரு மதத்தினருக்கும் இடையே பெரும் கலவரம் ஏற்பட்டது. இதனை அடுத்து நீதிமன்ற வழக்குகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு விசாரணைகளும் தினந்தோறும் நடைபெற ஆரம்பித்தது. விசாரணையில் ஒரு பகுதியாக இந்திய தொல்லியல் துறையை பாபர் மசூதி இருந்த  இடத்தில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில் கிடைத்த அறிவியல் ஆதாரங்களை அடிப்படையாக வைத்து கடந்த 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அயோத்தியில் வழக்கில் உள்ள சர்ச்சைக்குரிய இடம் ராமர் கோவில் கட்டுவதற்காக ஒதுக்கப்படுவதாகவும் அதே அயோத்தியில் வேறு பகுதியில் மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்றும் தீர்ப்பளித்தது.

இதனை அடுத்து மத்தியில் ஆட்சிகள் இருந்த பாஜக அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகளை தீவிரப்படுத்தி தற்போது கட்டுமான பணிகள் முடிக்கப்பட்ட பிரம்மாண்டமாக ராமர் கோவிலை அயோத்தியில் எழும்பி இருக்கிறது! இதனை அடுத்து கடந்த ஜனவரி 22 ஆம் தேதி அன்று ராமர் கோவில் கும்பாபிஷேகமும் பிரம்மாண்டமாக உலக மக்கள் அனைவராலும் போற்றப்படும் வகையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிலையில் இந்தியாவில் மட்டும் அல்ல தாய்லாந்திலும் ஒரு அயோத்தி கோவில் இருப்பதாக ஒரு பெண் தாய்லாந்தில் உள்ள அயோத்தி குறித்து பேசும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக உள்ளது. அந்த வீடியோவில்,  அயோத்தியிலிருந்து 3500 கிலோமீட்டர் தூரம் உள்ள தாய்லாந்தில் உள்ளது அயோத்தையா, பெயரில் மட்டுமல்ல நம்பிக்கை பண்பாடு என அனைத்திலும் நம்முடைய அயோத்தியை பிரதிபலிக்கிறது. இவையெல்லாம் எங்கிருந்து ஆரம்பித்தது காஞ்சிபுரத்தை தலைநகராக வைத்து தென்னிந்தியாவை ஆட்சி செய்த பல்லவர்கள் தாய்லாந்துடன் நல்ல வணிகத்தையும் மேற்கொண்டிருந்தனர். 

பல்லவர்கள் வைணவத்தை பின்பற்றியதால் வைணவம் தாய்லாந்து வரையும் சென்றது, தாய்லாந்தில் வைணவம் மிகப்பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தியது தாய்லாந்தின் ஒரு ராஜ்யத்தில் உத்தோங் என்ற ஒரு மன்னர் அரியணை ஏறிய பொழுது தன் பெயரையே ராமதிபோடி என்று மாற்றிக் கொண்டு தன் ராஜ்யத்திற்கு அயோத்தையா என்று பெயர் வைத்தார். மேலும் ராமாயணத்தை அப்படியே தழுவி தாய் மொழிக்கு ஏற்ற வகையில் ராமகி என்ற இதிகாசத்தையும் எழுதினார்கள் இந்த இதிகாசம் தான் தாய்லாந்தின் தற்பொழுது நேஷனல் எபிக்காக உள்ளது. இது மட்டுமல்லாமல் தாய்லாந்தி ஆட்சி செய்யும் மன்னர்கள் இன்று வரையிலும் ராமா என்கின்ற ஒரு ராஜ அடைமொழியை கொண்டே அழைக்கப்படுகிறார்கள். பல்லவர்கள் இல்லையென்றால் தாய்லாந்து வரையிலும் ராமரின் தாக்கம் ஏற்பட்டிருக்காது என்றும் அப்பெண் கூறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.