24 special

இயக்கத்தை நிறுத்திய கோயம்பேடு! இனி அவ்வளவு தான்!

koyambedu bus stop, kilampakkam bus stop
koyambedu bus stop, kilampakkam bus stop

தமிழகத்தின் தலைநகரான சென்னை பல பகுதிகளை உள்ளடக்கியது. சமீபத்தில் கூட சென்னையில் ஒரு அங்கமாக இருந்த செங்கல்பட்டு தற்போது தனி மாவட்டமாக பிரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது அந்த அளவிற்கு அதிக மக்கள் தொகையும் அதிக எண்ணிக்கையிலான பகுதிகளையும் கொண்டது சென்னை. இருப்பினும் சென்னை என்றாலே முதலில் அனைவரது ஞாபகத்திற்கு வருவது கோயம்பேடு! கோயம்பேடு பேருந்து நிலையம் கோயம்பேடு சந்தை என அப்பகுதி முழுவதுமே 24 மணி நேரமும் பரபரப்பாக இருக்கக்கூடியது. அப்படிப்பட்ட ஒரு பரபரப்பான பகுதி 2002ல் அன்றே முதல்வரான ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இதற்கு முன்பாக சென்னையின் புறநகர் பேருந்து நிலையம் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் 1.5 ஏக்கர் பரப்பளவில் பிராட்வே முனையம் என அமைந்திருந்தது.


ஆனால் வருடங்கள் ஓட போக்குவரத்தின் தேவையும் பேருந்துகளின் தேவையும் அதிகரித்ததால் 37 ஏக்கர் பரப்பளவில் ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய பேருந்து நிலையமாக கோயம்பேடு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. அதுமட்டுமின்றி சென்னைக்கு புதிதாக வருபவர்களுக்கும் தெரிந்த ஒரே பகுதி கோயம்பேடு பகுதி மட்டுமே அதிலும் குறிப்பாக வாய்ப்பு தேடி சென்னைக்கு வரும் பல இளைஞர்களுக்கு கோயம்பேடு ஒரு முக்கிய நினைவிடவாகவும் மாறி இருந்தது குறிப்பிடத்தக்கது. அப்படிப்பட்ட பேருந்து நிலையம் வரும் பொங்கலுக்கு பிறகு மக்களின் புழக்கத்திற்கு வராது என்றும் இனி கிளாம்பாக்கத்திலே சென்னையின் புறநகர் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது சென்னை நகரில் தற்போது இருக்கும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக 2019-ல் வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் சென்னை புறநகர் பேருந்து நிலையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த பணிக்காகவே சுமார் 88 ஏக்கர் இடத்தில் 400 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடைபெற்று வந்தது இருப்பினும் இடையில் கொரோனா ஊரடங்கு காரணத்தால் 2022 முடிக்க வேண்டிய கட்டுமானத்தின் பணிகள் தற்போது முடிக்கப்பட்டுள்ளது. இதனை சமீபத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்,  அதுமட்டுமின்றி பொங்கல் விடுமுறைக்கு சென்னை மக்களை தங்கள் சொந்த ஊருக்கு கடைசியாக கோயம்பேடு பேருந்து நிலையம் அனுப்பி வைக்கும் என்றும் அதற்கு பிறகு கிளாம்பாக்கமே சென்னை புறநகர் பேருந்துகளை இயக்கும் நிலையமாக திகழும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள சென்னை புறநகர் பேருந்து நிலையம் தினம்தோறும் 1.5 லட்சம் பயணிகளை கையாலும் திறனின் அமைக்கப்பட்டுள்ளது, அதோடு ஒரே நேரத்தில் 200 பேருந்துகளையும் 270 கார்கள் மற்றும் 3500 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. 

ஆதலால் இதுவரை  தங்களது கனவுகளை சுமந்து வந்த பலரை சென்னையில் இறக்கி விட்ட கோயம்பேடு பேருந்து நிலையம் இனி இயங்காது என்றும் அதற்கு பதிலாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இயங்கும் என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து கோயம்பேடு என்ன ஆகப்போகிறது என்றால்! அப்பகுதிக்கு ஒரு கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் குடியிருப்பு பகுதிகள் சில ஐடி நிறுவனங்கள் வர உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விளையாட்டு தொடர்பான திட்டங்களும், விளையாட்டு அரங்கம் மற்றும் ஹைரைஸ் கட்டிடம் போன்றவை வர உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் சமூக வலைதளங்களில், இனி கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தான் சென்னைக்கு பேருந்து நிலையம் கோயம்பேடு கிடையாது என பலரும் இது பற்றி உருக்கமாக பதிவிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.