24 special

ராஜ் பவனில் வைத்து ஆளுநர் ரவி கூறிய அந்த வார்த்தை...

https://www.tnnews24air.com/storage/gallery/ClPXMPyX3Es6p4C0Rf9iwBBQSoKRGYXY4PlrkdA3.jpg
https://www.tnnews24air.com/storage/gallery/ClPXMPyX3Es6p4C0Rf9iwBBQSoKRGYXY4PlrkdA3.jpg

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் கள வேலைகள் தமிழக உட்பட இந்திய அளவில் மிக பரபரப்பாக மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் தமிழகத்தில் திமுகவிற்கு பின்னடைவு சூழ்நிலையே நிலவுகிறது. அதோடு கடந்த ஐந்து மாநில தேர்தலில் கூட பாஜக மூன்றில் தனது ஆட்சியை நிறுவி INDI  கூட்டணிக்கு தோல்வியை பரிசாக கொடுத்தது. இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக திமுகவின் முக்கிய அமைச்சரான அமைச்சர் உதயநிதியின் சனாதன கருத்து கூறப்படுகிறது இதனால் INDI கூட்டணியிலும் திமுகவிற்கு பலத்த எதிர்ப்பு நிலவுகிறது. அதுமட்டுமின்றி தமிழகத்திலும் திமுகவிற்கு எதிரான அலையே தற்பொழுது அதிகரித்துள்ளது என்றும் 2021 தேர்தலுக்கு முன்பாக திமுக கொடுத்த ஒரு தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றாத காரணத்தினால் மக்கள் கொந்தளிப்பில் இருக்கின்றனர் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.. மேலும் கடந்த மாதத்தில் சென்னை மற்றும் தென் தமிழகங்களில் ஏற்பட்ட மழை பாதிப்பு தமிழக அரசின் மீதான அதிருப்தியை மேலும் அதிகரித்தது வேறு குறிப்பிடத்தக்கது.


இதனால் 2024 ஆம் ஆண்டு தேர்வுகள் பாஜகவிற்கு பெரும் சவாலாகவும் முற்றிலும் கூறப்போனால் தோல்வியை ஏற்படுத்தும் ஒரு தேர்தலாக அமையும் என்று அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த நிலையில் மத்திய அரசை நோக்கி உங்கள் அப்பான் வீட்டு காசா என்று அமைச்சர் உதயநிதி கூறியது வேறு திமுகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.. இதனால் INDI கூட்டணியில் இருந்து எப்பொழுது வேண்டுமானாலும் திமுகவை வெளியில் அனுப்பலாம் என்ற சூழல் இருந்து வரும் நிலையில் அமைச்சர் பொன்முடியின் பதவி வேறு தற்போது பறிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ராஜ்பவனுக்கு சென்று தமிழக ஆளுநரை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சந்தித்துள்ளார். 

தமிழக முதல்வரின் இந்த திடீர் சந்திப்பு குறித்து தமிழக ஆளுநர் தரப்பில் மாண்புமிகு ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்கள், மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை மாநில அரசு விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கும் சந்திப்புக்கு அழைத்திருந்தார். அதன்படி, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு ஆளுநர் அவர்களை ஆளுநர் மாளிகை, சென்னையில் 30.12.2023 மாலை 5.30 மணியளவில் சந்தித்தார். 

மாண்புமிகு முதலமைச்சருடன் மாண்புமிகு அமைச்சர்கள் திரு. துரைமுருகன் அவர்கள், திரு. தங்கம் தென்னரசு அவர்கள், திரு. எஸ். ரகுபதி அவர்கள், திரு. ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் அவர்கள் மற்றும் மாநில தலைமைச் செயலாளர் அவர்கள், முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் அவர்கள், தமிழ்நாடு பொதுத்துறை செயலாளர் அவர்கள் ஆகியோரும் வந்திருந்தனர். 

இந்த சந்திப்பு சுமூகமாக இருந்தது. மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்களும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் பரஸ்பரம் மரியாதையை பரிமாறிக் கொண்டு, மாநிலம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் குறித்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர் மாண்புமிகு ஆளுநர் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனில் தாம் முழு ஈடுபாட்டைக் கொண்டிருப்பதாக மீண்டும் வலியுறுத்தினார். இந்திய அரசியலமைப்பின் வரம்புக்கு உட்பட்டு மாநில அரசுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் அவர் உறுதியளித்தார். மாண்புமிகு ஆளுநர் அவர்கள், மாநிலத்தின் மிகப்பெரிய நலனை கருத்தில் கொண்டு மாண்புமிகு முதலமைச்சருடன் அவ்வப்போது சந்திப்புகள் நடைபெற வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார் என்று தமிழக ஆளுநரின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 

எனினும் இதுகுறித்து விசாரிக்கும் பொழுது தேர்தல் வருவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் சட்டம் ஒழுங்கு போன்ற பிரச்சனைகள் எதுவும் வராதபடி பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் மேலும் பிரதமர் மோடி மற்றும் தேசிய அளவில் பல தலைவர்கள் தமிழகம் வர இருப்பதால் எக்காரணம் கொண்டும் பாதுகாப்பு குறைபாடு இருக்கக்கூடிய கூடாது என்றும் ஆளுநர் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.