24 special

விஜய் குறித்து பிரேமலதா கூறிய வார்த்தைகள்.....

vijay, premalatha
vijay, premalatha

கடந்த வாரத்தில் மக்களின் இதயங்களை வென்று அரசியலில் நுழைந்த ஒரு வருடத்திலேயே எதிர்க்கட்சியின் தலைவராக பொறுப்பேற்கப்பட்டு பிறகு கட்சிக்குள் தன்னுடன் இருந்தவர்களால் பெரும் ஏமாற்று வலைகளில் சிக்கி தொடர் தோல்விகளை சந்தித்து வந்த தேமுதிக தலைவரும் மக்களின் கேப்டனுமான விஜயகாந்த் உடல்நல குறைவால் உயிரிழந்தார். திரையுலயில் அடிமட்டத்திலிருந்து அதிக முயற்சிகளையும் போராட்டங்களையும் சந்தித்து தனது தைரியத்தாலும் முயற்சியாலும் அதிக வெற்றி படங்களை கொடுத்தவர் கேப்டன் விஜயகாந்த். சமீப ஆண்டுகளாக உடல் நல பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைகளை பெற்று வந்த விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் சிகிச்சைகள் அனைத்தும் முடிந்து வீடு திரும்பினார், வீடு திரும்பிய உடனே நடைபெற்ற தேமுதிக பொது செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு தனது நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சந்தித்தார்.


அதற்கு பிறகு திடீரென ஏற்பட்ட அவரது உடல்நல குறைவிற்கு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் இவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்ததாக மருத்துவ தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. தனது நடிப்பால் கட்டிப்போட்ட தமிழக மக்களுக்கு  அவரின் மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழ் திரை உலகமும் பல அரசியல் பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தினர். இந்த வகையில் நடிகர் விஜய்யும் விஜயகாந்தை காண்பதற்காக இரவு வேளையில் விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு வந்த பொழுது விஜய்க்கு பல எதிர்ப்புகள் அங்கு இருந்தது. ஏனென்றால் விஜய்யின் சினிமா வாழ்க்கைக்கு பெரிதும் உதவி புரிந்தது செந்தூரப் பாண்டியன் படம். அப்படத்தில் அன்றைய முன்னணி நடிகராக இருந்த விஜயகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து படத்திற்கான ஊதியத்தையும் பெறாமல் விஜய்க்காக இப்படத்தை செய்கிறேன் என்று அதில் நடித்துக் கொடுத்து விஜய்யை மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கை பெற வைத்தார்.

அப்படி திரை வாழ்க்கையில் மிகப்பெரிய உதவி செய்த விஜயகாந்த்திற்கு விஜய் என்ன செய்திருக்கிறார் நன்றி கெட்டவரா விஜய் இருந்துள்ளார்! இதே விஜயகாந்த் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பொழுதும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பொழுதும் எங்கு சென்றார் இந்த விஜய்! இப்பொழுது மட்டும் வந்து பார்க்கிறாரா? இதனால் அவர் இந்த அரங்கத்திற்குள் வரவே கூடாது என விஜயகாந்தின் தொண்டர்களும் ரசிகர்களும் விஜய்யின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்புகளை மீறி விஜயகாந்த்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்த விஜய்யை வெளியே போ வெளியே போ என்று கூச்சலிட்டனர் அதோடு காலணியும் அவர் மீது வீசப்பட்டது, இது குறித்த வீடியோகளும் சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரேமலதா விஜய் பற்றிய கூறிய சில விஷயங்களை நடிகர் மீசை ராஜேந்திரன் தனியார் பேட்டியில் பகிர்ந்துள்ளார். 

அதாவது தொடர்ந்து விஜய் விஜயகாந்தை வந்து பார்க்கவில்லை என்பதை மிகவும் கோபத்துடன் வலியுறுத்தி வந்த மீசை ராஜேந்திரனிடம் பிரேமலதா ஒரு கட்டத்தில் இனி விஜய் பற்றி அப்படி பேசாதீர்கள் விஜய் குறித்தும் அப்படி பேசாதீர்கள் அவர்களுக்கே தெரிய வேண்டும் இதை நாமே கூறி பிறகு அவர்களுக்கு தெரியக்கூடாது என்று பிரேமலதா அவர்களே என்னிடம் கூறினார் என்று நடிகர் மீசை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். அதோடு, எனினும் விஜய் வரவில்லை என்று வருத்தம் என்னைப் போன்று மற்றவர்களுக்கும் இருந்திருக்கும், ஏன் விஜய் கூட இருந்திருக்கும் என்று கூறியுள்ளார். தன் கணவரால் தமிழ் திரை உலகில் இவ்வளவு பெரிய உயரத்தில் சென்றிருக்கும் விஜய்யிடம் எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பாராமல்  விஜய்க்கு தோன்றி கேப்டனை பார்க்க வந்தால் வரட்டும் இல்லையென்றால் விட்டுவிடுங்கள் என்று பெருந்தன்மையுடன் பிரேமலதா கூறிய விஷயம் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.