திமுகவை சேர்ந்த ஆ. ராசா திராவிட நாடு கோரிக்கை அப்படியே இருக்கிறது எங்களை இந்தியாவை பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்ப வைத்து விடாதீர்கள் என்று பேசினார் இந்த சூழலில் ஆ.ராசா கருத்திற்கு ஆதரவு கிடைக்கும் என்று பார்த்தால் அப்படியே எதிராக மாறியுள்ளது ஆ. ராசா கருத்து.
பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் ஆ. ராசா பேசுவது சரி என்றால் தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று பேட்டி கொடுத்து இருக்கிறார் இதற்கு பதறி கொண்டு அப்படியெல்லாம் நடக்காது என்று திமுக செய்தி தொடர்பாளர் இளங்கோவன் பதில் கொடுத்தார், இது ஒருபுறம் என்றால் புதிய தமிழகம் கட்சியின் தலைவரும் தேசியவாதியுமான டாக்டர் கிருஷ்ணசாமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் திராவிட நாடு கோரிக்கையை தமிழகத்தில் போராடி பெற முடியாது வேண்டுமென்றால், திகார் ஜெயிலில் எழுதிப் பார்த்துக் கொள்ளலாம்.
இந்தியா - இந்தியா தான் இந்த தேசத்தை மீண்டும் எவராலும் பிரிக்க முடியாது என அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளார் அதாவது ஏற்கனவே ராசா திகார் ஜெயிலில் இருந்தவர் என்றும் விரைவில் மீண்டும் சிறைக்கு செல்லும்போது அங்கு எழுதி கொள்ளலாம் என பங்கமாக கலாய்த்து இருக்கிறார் கிருஷ்ணசாமி.
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர் கொங்கு நாடு என்ற ஒன்று உருவாகும் என எழுந்த கருத்துக்களால் திமுக கடும் அதிர்ச்சி அடைந்தது, இந்த சூழலில் ஆ.ராசா கருத்திற்கு தொடர்ச்சியாக பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்து இருப்பது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போன்று இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதிலும் கிருஷ்ணசாமி ஒரு படி மேலே சென்று திகார் சிறையில் எழுதி பார்த்து கொள்ளலாம் என்று தெரிவித்து இருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது. ( கிருஷ்ணசாமி அளித்த முழு பேட்டி கீழே இணைக்கப்பட்டுள்ளது )