24 special

புரிஞ்சது பற்ற வச்சுட்டீங்களே நயினார்... கிளம்பியது அடுத்த விக்கெட்!

Nayanar
Nayanar

பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்த கருத்து பெரும் விவாதத்தை கிளப்பி இருக்கிறது, திமுகவை சேர்ந்த மக்களவை உறுப்பினர் ஆ.ராசா பிரிவினையை விதைக்கும் விதமாக கருத்து ஒன்றை தெரிவித்தார். இந்தியாவை பிரிக்க கோரும் நிலைக்கு எங்களை தள்ளிவிட வேண்டாம் என்று குறிப்பிட்டு இருந்தார்.


இந்த சூழலில் ஆ.ராசா கருத்திற்கு கண்டனங்கள் வலுத்து வரும் சூழலில் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார், ஆ. ராசா இந்தியாவை பிரிக்க வேண்டும் என பேசி இருக்கிறார், அப்போ நாங்கள் கேட்கிறோம் தமிழகத்தை இரண்டாக பிரி 117 தொகுதி 117 தொகுதி என இரண்டாக பிரிப்போம், அதை செய்ய கூடிய இடத்திலும் நாங்கள் இருப்பதாக நயினார் தெரிவித்து இருந்தார்.

இதற்கு பதறி அடித்து கொண்டு திமுகவை சேர்ந்த இளங்கோவன் பேட்டி கொடுத்தார், அப்படியெல்லாம் மாநிலங்களை பிரிக்க முடியாது என பதில் கொடுத்தார் இந்த சூழலில் அரசியல் பார்வையாளர் சுந்தர் ராஜா சோழன் திமுகவை சேர்ந்த இளங்கோவன் பேட்டிக்கு எதிர் கேள்வி எழுப்பியுள்ளார் அதில்,

பாஜகவின் சட்டமன்ற கட்சித் தலைவர் நயினார் தமிழகத்தை இரு மாநிலமாக பிரிப்பது குறித்த கருத்துக்கு டிகேஸ் இளங்கோவன் கொடுத்த பதிலடியில் சில பிழை உள்ளது..

அதாவது,கோரிக்கையும் போராட்டமும் இருந்தால்தான் மத்திய அரசால் மாநிலங்களை பிரித்துக் கொடுக்க முடியும் என்று சொல்கிறார்..அவர் தெலங்கானாவை வைத்து மட்டுமே கணக்கிடுகிறார் என நினைக்கிறேன்.அவர் ஒன்றை மறக்கக்கூடாது..

1999 - 2004 ல் திமுக கூட்டணி அங்கம் வகித்த NDA அரசின் பிரதமர் வாஜ்பாய்,2000 ம் வருடம் நவம்பர் மாதத்தில் மூன்று புதிய மாநிலங்களை எந்த சலனமும் இல்லாமல் உருவாக்கினார்.

மத்திய பிரதேசத்தை உடைத்து சத்தீஷ்கரும்,பீஹாரை உடைத்து ஜார்கண்ட்டும்,உ.பியை உடைத்து உத்தரகாண்ட்டும் உருவாக்கப்பட்டது பிரதமர் வாஜ்பாயினால்..அங்கே எல்லாம் என்ன போராட்டம் நடந்தது? என்ன கோரிக்கை இருந்தது? என அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார், இதன்மூலம் எப்போது வேண்டும் என்றாலும் அதிரடி மாற்றங்கள் அரங்கேறலாம் என்றே எதிர்பார்க்க படுகிறது.

ஆ.ராசாவிற்கு பதிலடி கொடுக்க நயினார் தெரிவித்த கருத்து மீண்டும் தமிழகத்தை பிரித்து புதிய மாநிலங்களை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்தி இருக்கிறது.