24 special

நினைத்தாலே முக்தி தரும் தலமான திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றால் இந்த தொல்லையும் தீருமாமே!!!

Tiruvannamalai
Tiruvannamalai

திருவண்ணாமலையில் அமைந்திருக்கும் அருணாச்சலேஸ்வரர் ஆலயமானது சிவபெருமானின்  பஞ்சபூத தளங்களில் ஒன்றாகவும் சிறப்பாக அக்கினிக்கு என்று அமைக்கப்பட்டு இருக்கும் தளமாகவும் இது விளங்குகிறது. இத்தகைய அக்னி தளத்தில் ஈசன் நெருப்பு வடிவில் நின்று மலையாக குளிர்ந்த தளம் என்றும் கூறி வருகின்றனர். இந்த தளத்தில்தான் உமையவளுக்கு தனது இடது பக்கத்தை அழித்து அம்மையாக திகழ்ந்து வருவதாகவும் கூறி வருகின்றனர். மேலும் பல கோவிலுக்கு சென்று பாவங்களை தீர்க்க வேண்டும் என்று நினைத்தவர்கள், வாழ்வில் முக்தி அடைய வேண்டும் என்று எண்ணுபவர்களும் இந்த கோவிலை நினைத்தாலே முக்தி கிடைக்கும் என்று கூறும் அளவிற்கு  சிறப்பு வாய்ந்த கோவிலாக திருவண்ணாமலையில் அமைந்திருக்கும் அருணாச்சலேஸ்வரர் கோவில் திகழ்ந்து வருகிறது. 


திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி!! திருவண்ணாமலைக்கு சென்று வந்தாலே சிறப்பு!! என்று அனைவரும் கூறுவது எந்த அளவிற்கு சிறப்பானதோ, அதே அளவிற்கு அங்கு சென்று திருவண்ணாமலையை சுற்றி கிரிவலம் வருவது மிகவும் சிறப்பானது என்று கூறி வருகின்றனர். அங்கு அமைந்திருக்கும் அருணாச்சலேஸ்வரரை மனதில் நினைத்துக் கொண்டு பக்தர்கள் வேண்டியவற்றை இறைவனிடம் கேட்டு மலையை சுற்றி கிரிவலம் வந்தால் வேண்டியவற்றை இறைவன் நடத்திக் கொடுப்பார் என்று நம்பிக்கை இன்றளவிலும்  இருந்து வருகிறது. மேலும் திருவண்ணாமலை அமைந்திருக்கும் இறைவனை நினைத்து கிரிவலம் சுற்றி வந்தால் எப்பேர்ப்பட்ட நோயாக இருந்தாலும் அதில் பல காலங்களாக அவதிப்பட்டு வருபவர்கள் கூட நோயிலிருந்து விடுபட்டு சுகமான வாழ்வை வாழ்வாக என்றும், அதிகம் பாவம் செய்தவர்களும் கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்வதினால் அவர்களின் பாவம் அனைத்தும் நீங்கி மோட்சம் அடைவார்கள் என்றும் கூறுகின்றனர்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த திருவண்ணாமலை கிரிவலத்தை தொடங்குவதற்கு முன்பு அங்கு அமைந்திருக்கும் பூத நாராயணனை வழிபட்டு விட்டு தொடங்கினால் கிரிவலத்தை எந்த ஒரு இடையூறும் இல்லாமல் சிறப்பாக முடிக்க முடியும் என்று நம்பப்படுகிறது. அதன் பிறகு இரட்டை விநாயகரையும், கோவில் கோபுரத்தையும் வணங்கிவிட்டு கிரிவலத்தை தொடங்கி சிவபெருமானை நினைத்துக் கொண்டே நடந்து கிரிவலத்தை முடிக்க வேண்டும். இந்த நிலையில் தற்பொழுது திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொண்டால் மற்றும் ஒரு பிரச்சனை தீரும் என்று கூறப்பட்டுள்ள வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில்...

 கடன் பிரச்சனையில் உள்ளவர்கள் அவற்றை சரி செய்ய வேண்டும் என்றால் செவ்வாய்க்கிழமைகளில் திருவண்ணாமலைக்கு சென்று கிரிவலம் மேற்கொள்ளலாம் என்றும், வங்கி கடன் மட்டுமல்லாமல் பூர்வ ஜென்மத்தில் எவரிடமாவது  கடன் பட்டிருக்க வாய்ப்புகள் இருந்திருந்தால் கூட  கிரிவலத்திற்கு சென்றால் சரி செய்து விடலாம் என்று கூறியுள்ளார். பொதுவாக கடன் என்பது பணத்தை மட்டும் கூறப்படுவது கிடையாது, ஒருவர் ஜென்மத்தில் எவரிடமாவது கடன் பட்டிருந்தால் இந்த ஜென்மத்தில் ஒருவரிடம் பணத்தினை கொடுத்து இழந்து விடும்பொழுது அதை பூர்வ ஜென்ம கணக்கில் நாம் அவரிடம் கடன் பட்டு இருந்ததாகவும், அதனால்தான் தற்போது இந்த ஜென்மத்தில் பணத்தினை வாங்கிவிட்டு சென்றுவிட்டார் என்றும் கடன் கழிந்து விட்டது என்று முன்னோர்கள் கூறி வருவார்கள். 

இது போன்ற கடன்களும் பணமாக இருந்தாலும் சரி, முன்னோர்களுக்கு செய்ய வேண்டியது மற்றும் தெய்வங்களுக்கு செய்ய வேண்டியது, பித்ரு கடன், ரிஷி கடன் மற்றும் ருண விமோசனம்  போன்றவை செவ்வாய்க்கிழமைகளில் கிரிவலம் சென்றால் சரியாகும் என்று கூறியுள்ளார். தற்போது இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி கடனினால் அவதிப்பட்டு வருபவர்கள் இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது போல கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.