மருத்துவ படிப்பிற்கு மாணவர்களின் சேர்க்கைக்காக நடத்தப்படும் நுழைவு தேவைதான் நீட்!! இந்த தேர்வானது மத்திய அரசால் ஆண்டுதோறும் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. நீட் தேர்வினை பல மாநிலங்கள் வரவேற்று ஏற்றுக் கொண்டாலும் கூட தமிழகத்தில் தொடர்ந்து எதிர்ப்புகள் தான் இருந்து வந்தது. மேலும் தொடர்ந்து நீட் தேர்வினை ரத்து செய்வதற்காக பல கோரிக்கைகள் எழுத வண்ணமே இருந்து வருகிறது. மேலும் நீட் தேர்வானது தமிழக மாணவர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தி வந்த நிலையில் தமிழ் வழியில் கல்வி கற்று வந்த மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதில் பல சிக்கல்களும் ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக தொடர்ந்து மாணவர்கள் தற்கொலையில் ஈடுபட்டு வந்தனர்.
மேலும் நீட் தேர்வின் தோல்வியால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களை பார்த்து தமிழகத்தில் பல இடங்களில் இனிதே எதிர்க்க பொதுமக்களும் பிரபலங்களும் முன்வந்தனர். இது போன்ற எதிர்ப்புகள் நீட் தேர்வு கொண்டுவரப்பட்ட ஆரம்பத்தில் இருந்தாலும் கூட அதன் பிறகு நீட் குறித்த விழிப்புணர்வுகள் மற்றும் அவற்றை எவ்வாறு படிப்பது?? எது போன்ற கேள்விகள் கேட்கப்படுகிறது?? போன்று அடுத்தடுத்து மாணவர்கள் அதைப் பற்றி தெரிந்து கொண்டு அந்த நினைத்து பயப்படாமல் அதற்கு ஏற்றது போல படித்து நிறைய மதிப்பெண்கள் வாங்கி தேர்ச்சி பெற்று வருகின்றனர். மேலும் நீட் தேர்வில் தோல்வியடையும் மாணவர்களும் தற்பொழுது அடுத்த முறை நன்றாக படித்து தேர்ச்சி பெற்று விடலாம் என்று மனப்பக்குவத்திற்கு வந்து விட்டனர்.
அதே சமயத்தில் நீட் தேர்வில் இட ஒதுக்கீடுகளும் மாணவர்களுக்கு அதிக அளவில் கிடைத்தது. கடந்த வருடத்தை விட இந்த வருடம் நிறைய மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளனர். மேலும் ஏழு மாணவர்கள் 720 மதிப்பெண்ணிற்கு 720 மதிப்பெண் வாங்கி சாதனை படைத்துள்ளனர். இப்படி தமிழகத்தில் ஒவ்வொரு வருடம் செல்ல செல்ல நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ சீட்டுகளை பெரும் தமிழக மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆனால் தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள திமுக மட்டும் நீட் தேர்வினை நாங்கள் ஒழித்துக் காட்டுவோம் என்று கூறிக்கொண்டு வருகிறது. இது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது. தற்போது சமூகவலை தளத்தில் வீடியோ ஒன்று உலா வருகிறது. அதில்
ஏழை குடும்பத்தில் பிறந்து பன்னிரண்டாம் வகுப்பு முடித்து நீட் தேர்வுக்கு எனது ஒரு வருடம் ஒதுக்கி அதற்காக கடுமையாக படித்து தற்போது மம்தா என்ற மாணவி நீட் தேர்வு எழுதி 558 மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்றுள்ளார். வீட்டில் உள்ள கஷ்டத்தை சரி செய்வதற்காகவும், மருத்துவராகவும் கனவே நிஜமாக்க வேண்டும் என்றும் கடன் வாங்கி படித்ததாக மாணவி கூறியுள்ளார். மேலும் நீட் தேர்வானது கடினமானது என்று கூறி வருகின்றனர் ஆனால் அது எளிமையாக தான் இருக்கிறது என்று கூறியுள்ளார். இது குறித்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரல் ஆவதை தொடர்ந்து மேலும் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் தயாநிதியின் மகளால் டாக்டருக்கு படிக்க முடியவில்லை!!
ஆனால் தமிழகத்தில் ஆட்டோ ஓட்டுபவரின் மகள் நீட் தேர்வு மூலம் மருத்துவராக போகிறார். இப்ப புரிகிறதா உதயநிதி, ஸ்டாலின் ,திமுகவினர் எதற்காக நீட்டை ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள் என்று!! மேலும் திமுக அமைச்சர்கள் அவர்களின் பிள்ளைகள் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாமல் இருப்பதினால் பணம் கட்டி மருத்துவத்திற்கு படிக்க வைக்க முடியாமல் இருப்பதால்தான் இது போன்ற நீட் தேர்விற்கு எதிர்ப்பு காட்டி வருகின்றனர் என்று அரசியல் விமர்சனங்கள் கூறி வருகின்றனர்.மேலும் நீட் எதிர்ப்பை முன்னிறுத்தியே அரசியல் செய்துவந்த உதயநிதி தரப்பு இந்த தேர்வு முடிவுகளை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளது... இனி நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களை நாம் செய்ய முடியுமா? அடுத்த தேர்தலுக்குள் எதாவது செய்தாகவேண்டும் எனவும் உதயநிதி அரசியல் ஆலோசனை குழு ஆலோசித்ததாக செய்திகள் கசிகின்றன...