24 special

தப்பிக்குமா குதுப்மினார்..? பரபரப்பு வாதங்கள்..!


இந்தியா : இந்தியாவில் அமைந்துள்ள குறிப்பாக வடமாநிலங்களில் அமைந்துள்ள இஸ்லாமிய நினைவுச்சின்னங்கள் மற்றும் மசூதிகள் பல ஹிந்துக்களின் கோவில்களை இடித்து அல்லது அதன்மீது எழுப்பப்பட்டது என ஒரு பிரிவினர் தொடர்ந்து குரல்கொடுத்து வருகின்றனர். அதேபோல சிலபல இடங்களில் தோண்டுகையில் அல்லது அதன் சுற்றுப்புற வளாகங்களில் ஹிந்து கோவில் அமைப்புகள் மற்றும் சிலைகள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.


இந்நிலையில் குதுப்மினார் வளாகத்திற்குள் ஹிந்து மற்றும் ஜெயின் தெய்வங்களை வழிபட அனுமதிக்குமாறும் அந்த இடங்களை தோண்டி ஆய்வுநடத்த உத்தரவிடுமாறும் மனு ஒன்று டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணை நேற்று நீதிமன்றத்தில் வந்தது. எதிர்மனுதாரராக ASI ( மத்திய தொல்லியல் ஆய்வுத்துறை) வாதாடியது.

தொல்லியல்துறை தரப்பில் " அந்த நிலத்தின் தற்போதைய நிலையை கொண்டு ஆய்வுசெய்தால் விண்ணப்பதாரரின் அடிப்படை உரிமையை பெறமுடியாது. குதுப்மினார் ஒன்றும் வழிபாட்டு தலமல்ல. அது ஒரு நினைவுச்சின்னம். அதன் தற்போதைய நிலையை மாற்றியமைக்க முடியாது" என தொல்லியல்துறை தரப்பில் வாதாடப்பட்டது.

இந்த வாதங்களை கேட்டறிந்த கூடுதல் மாவட்ட நீதிபதி நிகில் சோப்ரா மனுவின்மீதான விசாரணையை வருகிற ஜூன் 9 க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார். குதுப்மினார் என்றும் ஆய்வுக்குட்படுத்த மாட்டாது. அதன் புராதனத்தை அழிக்க ASI விரும்பவில்லை என தொல்லியல் துறை தரப்பில் தெரிவிக்கின்றனர்.

வழக்கு தொடர்பாக பேசிய மனுதாரரின் வழக்கறிஞர் ஹரிசங்கர் ஜெயின் "முகம்மது கௌரியின் ராணுவத்தளபதியான குதுபுதீன் ஐபக் மற்றும் குவாத் உல் இஸ்லாம் ஆகியோரால் 27 கோவில்களின் பகுதிகள் உடைக்கப்பட்டு அந்த பொருட்களை கொண்டே மசூதி எழுப்பப்பட்டது. பழங்காலத்தில் இருந்த விநாயகர் சிலைகள் இரண்டு தற்போதும் குதுப்மினாருக்குள் இருக்கிறது. அந்த சிலைகளில் ஒன்றை தேசிய அருங்காட்சியத்தில் வைத்துள்ளது ASI" என வழக்கறிஞர் ஜெயின் குறிப்பிட்டுள்ளார்.