24 special

'ஆக்ஷன் மேடம்' லாரன்ஸ் பற்றிய உண்மைகளை உடைத்த லெட்சுமி ராமகிருஷ்ணன்

lawrence, lakshmi ramakrishnan
lawrence, lakshmi ramakrishnan

இங்கிருக்கும் இணையதள உலகத்தில் ஒருவர் ஏதாவது ஒரு வார்த்தையை டைமிங்கில் அடித்து விட்டால் போதும் அல்லது என்றோ ஒரு நாள் கூறிய சில கமெண்ட்களை கூட திடீரென மீம் கிரியேட்டர்கள் டிரெண்டாக்கி விடுகின்றனர்.. அதாவது தற்போது நடக்கும் சில முக்கிய நிகழ்வுகளுக்கு என்ற ஒரு நாள் யாரோ ஒருவர் கூறிய பொருத்தமான கமெண்டை எடுத்து போட்டு எடிட் செய்து காமெடி நிறைந்த வீடியோவாக அதனை பதிவிட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றனர். அப்படி பல காமெடி வீடியோக்கள் கேள்வி எழுப்பும் வீடியோக்கள் அரசியல் சார்ந்த வீடியோக்கள் சமூக நல வீடியோக்கள் கல்வி சார்ந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது அதை அனைவரும் பார்த்திருப்போம் பகிர்ந்தும் இருப்போம்! இதில் முக்கியமாக தற்பொழுது 2023 ஆம் ஆண்டு முடிந்து 2024 ஆம் ஆண்டு தொடங்க உள்ள நிலையில் பிரெண்ட்ஸ் படத்தில் நேசமணி கேரக்டர் என்ன பீலிங்கா எனக்கு தான்டா ஃபீலிங் எனக்கு தாண்டா ஃபீலிங் என்ற டயலாக்கும் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது இதே சமயத்தில் தற்பொழுது சோசியல் மீடியா முழுவதும் ரெண்டாகிவரும் மற்றொரு கமெண்ட், மேடம் ஆக்சன் மேடம் இது! இவன விடுங்க அப்படியே சில்லு சில்லுனு நடப்பான் என்று பேசிய ஒரு வார்த்தை அதிகமாக டிரெண்டாகி வருகிறது. 


யார் இந்த லாரன்ஸ் என்றால் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு லாரன்ஸ் மற்றும் அவரது குடும்பமும் தங்கள் பிரச்சனைக்காக வந்தனர். அந்த நிகழ்ச்சியில் லாரன்ஸ் கூறிய மேடம் ஆக்சன் மேடம் இது! இவன விடுங்க அப்படியே சில்லு சில்லுனு நடப்பான்! என்று கூறியிருப்பார். தற்பொழுது இந்த வார்த்தையை கட் செய்யப்பட்டு அனைத்து வகையான வீடியோக்களுக்கும் பொருந்தும் வகையில் வைரல் ஆக்கப்படுகிறது. அதுவும் பல ஆண்டுகளுக்கு முன்பு லாரன்ஸ் கூறிய இந்த வார்த்தை தற்போது லாரன்ஸ் தத்துவங்கள் என்றே சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருவது, லாரன்ஸ் குறித்த தேடலையும் அதிகரிக்க வைத்துள்ளது. யார் அந்த லாரன்ஸ்? அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? எங்கே தற்போது இருக்கிறார் என்று கமெண்ட்களும் தற்போது அதிகமாக உலா வருகிறது. இந்த நிலையில் சமூக வலைத்தளத்தின் டிரெண்டாகிவரும் லாரன்ஸ் பற்றி சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் நடுவர் லட்சுமி ராமகிருஷ்ணன் கூறிய செய்திகள் வைரலாகி வருகிறது. 

அதாவது அப்பேட்டியில் லட்சுமி ராமகிருஷ்ணன், எத்தனை எத்தனையோ குற்றவாளிகளை இந்த நிகழ்ச்சிக்கு வரவழைத்து பேசி இருக்கிறேன் படித்தவர்களை விட படிக்காதவர்களுக்கு அதிக திறமைகள் இருந்திருக்கிறது. சற்று யோசிக்காமல் ஹ்யூமர் சென்சில் காமெடி அடிக்கும் திறமையும் அதிக பேருக்கு இருந்திருக்கிறது. கொலை பண்ணிட்டு வந்திருப்பாங்க ஆனாலும் சகஜமாக உட்கார்ந்து காமெடி பண்ணிட்டு இருப்பாங்க அவங்களுக்கு இருக்கிற மறுப்பக்கத்தையும் நாங்க இந்த நிகழ்ச்சி மூலமாக காட்டிருக்கோம், அப்படித்தான் ஒரு நாள் லாரன்ஸும் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார் அவரை இப்பவும் எனக்கு ஞாபகத்துல இருக்கு அவர் அந்த நிகழ்ச்சி முழுவதுமே இதே போல காமெடி செந்தில் தான் பேசிக்கிட்டே இருந்தாரு அவருக்குள்ள அப்படி ஒரு காமெடி செஞ்சு இருந்துச்சு அதனாலதான் அவர் அந்த மாதிரி ஆக்சன் பண்ணின போதும் அமைதியா இருந்து அவரோட திறமை எல்லாம் மக்களுக்கு தெரியப்படுத்த அதை அப்படியே ஒளிபரப்பினோம், எடிட் கூட பண்ணல நாங்க! தப்பு பண்ணிட்டு இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தால் கூட லாரன்ஸ் பண்ண திறமையை நாங்க ரசிச்சோம்! இருந்தாலும் அவருடைய தப்பா நாங்க நியாயப்படுத்தல சினிமால இவருக்கு வாய்ப்பு கிடைச்சா ஒரு பெரிய நகைச்சுவை நடிகராக வந்திருப்பார் என்று கூறியுள்ளார். இப்படி பல ஆண்டுகளுக்குப் பிறகு லாரன்ஸ் கூடிய வார்த்தைகள் அனைத்தும் சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருவதோடு லட்சுமி ராமகிருஷ்ணன் அவரை குறித்து பேசிய வீடியோவும் வைரலாகி வருகிறது.