24 special

கழிவு மாநிலமாக மாறும் தமிழ்நாடு...? இதற்கு ஒரு நடவடிக்கை இல்லையா?

Stalin, Kerlala Wastage
Stalin, Kerlala Wastage

கேரளா எல்லையோர மாவட்டங்களில் கேரளாவிலிருந்து கோழி இறைச்சி கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவை சட்டவிரோதமாக தமிழ்நாட்டில் கொட்டப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சி சம்பவம் இன்றும் கன்னியாகுமரியில் நடந்துள்ளது. இது குறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.


கேரளாவில் சேரும் குப்பைகள் தமிழ்நாட்டில் கொட்டப்படுவது என்பது காலம் காலமாக தொடரும் அவலமாக இருக்கிறது. நோயாளிகளுக்கு செலுத்திய ஊசிகள், ரத்தம் சலம் தோய்ந்த பஞ்சுகள் முதலிய மருத்துவக் கழிவுகளும், மாட்டிறைச்சி, கோழி இறைச்சிகளின் கழிவுகளும் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து தான் கொட்டப்படுகின்றன. குறிப்பாக, கன்னியாகுமரி, கோவை போன்ற கேரள எல்லைப் பகுதிகளில் தான் இந்த குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இவ்வாறு மருத்துவக் கழிவுகளும், இறைச்சிக் கழிவுகளும் கொட்டப்படுவதால் ஆபத்தான நோய்கள் அதில் இருந்து பரவும்.

இந்நிலையில் இன்று கேரளாவில் இருந்து தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கழிவுகளை ஏற்றி வந்த லாரியை கன்னியாகுமரி இளைஞர்கள் மடக்கி பிடித்துள்ளனர். அந்த லாரியின் முன்புறம் ஒரு பதிவு செய்த நம்பரும் பின் பக்கத்தில் வேறு நம்பரும் இருந்துள்ளது. அங்குள்ள இளைஞர்களுக்கு கிடைத்த தகவலின் படி கேரளாவில் இருந்து  தமிழகத்திற்கு இரு வண்டியில் கழிவுகளை தமிழகத்தில் கொட்ட வருவதாக தகவல் வந்துள்ளன.  அதன் பேரில் அந்த வண்டியை மடக்கி பிடித்து பார்த்த போது அதில், உணவகங்களின் கழிவுகள், இறைச்சி கழிவுகள் போன்ற பல கழிவுகள் இருந்துள்ளது உடனடியாக கலவத்துறைக்கு தெரிவித்து விசாரணை மேற்கொன்டுள்ளனர். 

தொடர்ந்து இதுபோல் குமரி மாவட்டத்தில் கேரளாவில் இருந்து கழிவுகளை மறைமுகமாக எடுத்து வருவதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர். மேலும், கேரளாவில் தமிழ்நாட்டு மக்களை அளிக்கவே இத்தகைய செயல்களில் ஈடுபடுவதை தமிழக அரசு கண்டும் காணாமல் இருப்பதாக குற்றச்சாட்டு முன் வைக்கின்றனர். தொடர்ந்து வாகன உரிமையலைட்ரம் மக்கள் கேட்கும் பொழுது அவர் பொறுப்பற்ற முறையில் பேசியது மக்களிடையே கோபத்தை உண்டாகியுள்ளது. மூன்று மாத காலமாக கேரளாவின் கொல்லம் பகுதியில் இருந்து கழிவுகளை இது போல் தமிழகத்திற்கு வருகிறது. இரு மாநிலத்திலும் உள்ள எல்லையோர பாதுகாப்பு போலீசாருக்கு தெரிந்து தான் இங்கு அனுமதிக்கப்படுகிறது எனவும் கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.

தமிழகத்தில் உள்ள கனிமவளங்களை கேரளா அரசு எடுத்து வருகிறது ஆனால், இங்கு கழிவு மாவட்டத்தை கேரளா அரசு செய்து வருகிறது. நங்கள் பல முறை இங்குள்ள அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்துள்ளோம் ஆனாலும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறுகின்றனர். மேலும், இதற்கு விரைவில் முற்று புள்ளி வைக்கவில்லை என்றால் போராட்டம் கையில் எடுப்பதாக மக்கள் தெரிவிகின்றனர்.