24 special

கடந்த வாரம் ஏற்பட்ட திருப்பம்...! திமுக வினையே திமுகவிற்கு எதிராக திரும்பியது..!.

a2b
a2b

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்கள் ஏன் வெளிநாடுகளில் கூட மிகப் பிரபலமான சைவ உணவகமான இயங்கி வரும் ஏ டு பி, 1979 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. ஒரு காலத்தில் சரவண பவன் எந்த அளவிற்கு சைவ உணவகத்திற்கு பெயர் பெற்றதோ அதனையும் தாண்டி தற்பொழுது இந்த அடையார் ஆனந்த பவன் உணவகம் பெயர் பெற்றுள்ளது. சுவையான உணவு, சுத்தமான உணவகம் ஆகியவை இந்த உணவகத்தின் வெற்றிக்கு காரணம் என வாடிக்கையாளர்கள் கூறுவார்கள்.


இந்த நிலையில் இந்த உணவகத்தின் உரிமையாளர் சீனிவாசராஜா அண்மையில் ஒரு youtube சேனலுக்கு பேட்டி அளிக்கும் பொழுது பேட்டி எடுக்கும் பேசியதுதான் சர்ச்சையை ஏற்படுத்தியது..இயக்குனர் சித்ராலட்சுமணன் கேள்வி எழுப்பும் பொழுது 'ஒரு காலத்தில் சைவ உணவகம் என்பது பெரும்பாலும் பிராமணர்கள் கையில் இருந்தது, பிறகு மெல்ல மாறுதல் ஏற்பட்டது! எப்படி இது?என்ற கேள்விக்கு சீனிவாசராஜா 'ஈவேரா தான் காரணம், இல்லை என்றால் இது சாத்தியமில்லை! ஈவேரா தான் குலத்தொழில் முறையை மாற்றி காட்டியவர், எந்த தொழிலையும் யார் வேண்டுமானாலும் செய்யலாம் என சொன்னார்.

காலம் மாறுகிறது, அரசின் ஆதரவு கிடைக்கிறது. வங்கிகள் கடன் கொடுக்கின்றன! ஒரு குறிப்பிட்ட சமுதாயம் மட்டும் செய்து வந்த தொழிலை யார் வேண்டுமானாலும் செய்யலாம்! கடலில் யார் வேண்டுமானாலும் மீன்பிடிக்கலாம்' என்று கூறினார். அதனை தொடர்ந்து திமுகவின் எம்.பி கனிமொழியும் இவர் சொன்னது சரிதான், உண்மையை சொன்னதற்கு நன்றி என வீடியோவை பகிர இணையம் பற்றிக் கொண்டது. வியாபாரத்திற்கு உங்களுக்கு உள்ளே பெருமாள் படம், ஆனால் வெளியில் நீங்கள் கேமரா முன்பு பெருமை பேசிக்கொள்ள ஈவேராவா என்ன பல்வேறு விமர்சனங்கள் அடையார் ஆனந்த பவன் உணவகத்திற்கு வைக்கப்பட்டன. 

மேலும் 'அடையாறு ஆனந்த பவன் உணவகத்தை இனி புறக்கணிக்க வேண்டும்!', 'இப்படி போலி பெரியாரிசம் பேசிக்கொண்டு போலியாக கடவுள் படங்களை வைத்துக்கொண்டு பெரியாரிசம் பேசும் இவரின் உணவகத்தை புறக்கணித்தால் என்ன?' என்பது போன்ற பல விமர்சனங்களை சமூக வலைதளத்தில் முன்வைத்து வந்தனர். இந்த நிலையில் இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்குள்ளாகவே அடையாறு ஆனந்த பவன் பத்திரிகையில் ஒரு அதிர்ச்சியான விளம்பரத்தை கொடுத்துள்ளனர்.

அந்த விளம்பரத்தில் பொறுப்பு துறப்பு என தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது, அதில் அடையாறு ஆனந்தபவனின் பொதுமக்களின் மதிப்பு மிக்க வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பது என்னவென்றால் 'தீபாவளி கவுண்டவுன் பரிசுகள்' வாட்ஸ் அப்பில் எங்கள் அதிகாரப்பூர்வ வர்த்தக முத்திரையுடன் எங்கள் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி சிலர் தங்கள் ஆதாயத்திற்காக போலியான மற்றும் மோசடியான ஒரு வழிமுறையை உருவாக்கியுள்ளனர். 

இதுபோன்ற மோசடியான சலுகைகளுக்கு எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கும் பொதுமக்களும் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கிறோம். ஏ டு பி தங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு அத்தகைய சலுகைகளை வழங்கவில்லை என்ற திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறது. இது போன்ற மோசடியான சலுகைகளால் பாதிக்கப்படும் எவரும் அதை அவர்களின் விருப்பம் மற்றும் அபாயத்தின் பெயரில் செய்கிறார்கள், மேலும் எங்களது a2b பாதிக்கப்பட்டவர்களின் எந்த விதமான இழப்புக்கும் எந்த வகையிலும் பொறுப்பாகாது.எங்கள் நிறுவனம் ஏற்கனவே குற்றவாளிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை எடுக்க உரிய வழிகளை தொடங்கியுள்ளது' என குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் அடையாறு ஆனந்த பவனின் இந்த விளம்பரம் குறித்து விசாரித்த பொழுது a2b உணவகத்தின் பெயரில் விற்கப்படும் சில போலிகளுக்கு எதிராக இந்த விளம்பரத்தை நிறுவனத்தார் கொடுத்துள்ளார்கள் என தெரிகிறது. இது மட்டுமல்லாமல் இவர்கள் நிறுவனத்தை பெயரை பயன்படுத்தி தற்பொழுது போலியாக சிலர் இனிப்புகளை விற்று வருவது இந்த நிறுவனத்திற்கு தெரிய வந்த காரணத்தினால் இப்படி அலறியடித்து விளம்பரத்தை கொடுத்து இருக்கிறார்கள் என்ன இருந்தாலும் ஏ டு பி இதுபோன்று விளம்பரத்தை இதுவரை கொடுத்ததில்லை இப்பொழுதே முதன்முறை என்கின்றனர். கடந்த வாரம் தான் ஈவேராவை பற்றி A2B நிறுவனத்தார் புகழ்ந்தார்கள் இந்த வாரமே ஏ டு பி க்கு வேலையை காட்டி விட்டார்கள் இதன் பின்னணியில் யார் இருப்பார்களோ? என கமெண்ட்டுகள் இணையதளத்தில் பறக்கிறது.