இந்துக்களின் பண்டிகைகளில் நவராத்திரி பண்டிகை மிகவும் பிரபலமானது. இந்த விழா மொத்தமாக 9 நாட்கள் கொண்டாடப்படும். அந்த நாட்களில் 9 வகையான கலர் உடைகளை அணிந்து கொண்டாடுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் அவரது மனைவி ஆண்டுதோறும் நவராத்திரி விழா கொண்டாடத்திற்கான ஏற்பாடு செய்வது வழக்கம்.இந்த ஆண்டு நவராத்திரி கொண்டாட்டங்களில் விவிஐபிகளையும் கலந்துகொள்ள ரஜினிகாந்த் தரப்பில் அழைப்பு விடுப்பார்கள். இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக கொண்டாட திமுக, அதிமுக, பாஜக, விஜய் தரப்பு பிரபலங்களை அழைத்து அனைவரது பார்வையையும் தங்கள் பக்கம் திரும்பியிருக்கிறார் லதா ரஜினிகாந்த்.
தலைவர் 170 பட ஷூட்டிங் காரணமாக இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பங்கேற்கவில்லை. இருப்பினும் ரஜினி மகள் சௌவுந்தர்யா ரஜினிகாந்த உள்ளிட்ட தமிழ் சினிமாவில் உள்ள பிரபலங்கள் இதில் பங்கேற்றனர்.இந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழைசை செளந்தரராஜன் இந்த நவராத்திரி கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார். அதேபோல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினும் இந்த விழாவில் பங்கேற்றார். முன்னாள் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது குடும்பத்தினருடன் வந்து கலந்துகொண்டார். அப்போது தனுஷின் மகன் லிங்கா மற்றும் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் உடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
சினிமா பிரபலங்களை பொறுத்தவரை நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் கலந்துகொண்டார். இதுதவிர நடிகை மீனா, உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்களும் இதில் பங்கேற்று எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் அம்பானி அழைப்பாளர்களை விட தமிழ்நாட்டில் இந்த விழாவில் அனனைவரும் ஒன்றிணைத்து பார்ப்பது நெகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.மேலும், அதிமுக, பாஜக, திமுக உள்ளிட்ட கட்சிகள் அரசியலில் எதிர்மறையாக இருந்தாலும், இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மனைவி துர்க ஸ்டாலின், தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் அதிமுக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் ஒன்றாக கலந்து கொண்டது தமிழர்களிடம் உள்ள இந்து கடவுளின் வழிபாட்டை ஒற்றுமையாக நவராத்திரியை கொண்டாடியது பிரமிக்க வைக்கிறது.
இதற்கிடையில் ரஜினிகாந்த் நடித்து வெளியான ஜெயிலர் படத்தின் பிறகு தளபதி விஜய் ரசிகர்களுக்கும் ரசிஜிகாந்த் ரசிகர்களுக்கும் முரண்பாடு ஏற்பட்டது. இதன் பின் தற்போது வெளியான விஜயின் லியோ படத்தின் வசூலை வைத்து ரஜினி-விஜய் ரசிகர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவிய நிலையில் தற்போது விஜயின் அம்மா ரஜினிகாந்த் வீட்டில் பங்கேற்றது இரு ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.என்னதான் அரசியல் மற்றும் சினிமாவில் மாற்றி மாற்றி வாதங்களை முன்வைத்து தவறுகளை சூட்டி காட்டினாலும் இப்படி அனைவரையும் ஒன்றிணைத்து பார்ப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக அரசியல் தலைவர்களும், சினிமா வட்டாரங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.