24 special

ஊருக்கு தான் உபதேசமா லியோனி...! வருத்தெடுத்த மக்கள்

Leoni
Leoni

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த லியோனி திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர்.  இலக்கிய சொற்பொழிவாளர் மற்றும் நகைச்சுவை பட்டிமன்றத்தின் நடுவராகவும் வலம் வந்துள்ளார். 2010 ஆம் ஆண்டில் கலைமாமணி விருதும் பெற்றவர்.


நகைச்சுவையாக பட்டிமன்றங்களில் டைமிங்கல் ஜோக் அடிப்பதில் பேச்சாற்றல் மிக்கவர். முன்னாள் முதல்வர் கருணாநிதி லியோனியின் பேச்சு திறமையில்  கவரப்பட்டு அவரை திமுகவிற்கு அழைத்துள்ளார். அப்படி இவர் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு 2011 ஆம் ஆண்டு அழைக்கப்பட்டு அதனை தொடர்ந்து திமுகவின் தலைமை கழக பேச்சாளராகவும் இருந்து வருகிறார். 2014 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் இவர் திமுகவை ஆதரித்து பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தார்.

இப்படி லியோனி திமுகவில் சேர்ந்து அவர்களை தொடர்ந்து ஆதரவாக பேசி வருகிற சில கருத்துகளால் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவதும் வழக்கமாக வைத்துள்ளார். தொடர்ந்து திமுகவிற்கு ஆதரவாக பேசிய காரணத்தினால் லியோனிக்கு தமிழ்நாட்டின் பாடநூல் கழக தலைவர் பதவியும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வழங்கப்பட்டது. 

திமுக ஆட்சியைப் பிடித்ததில் இருந்து பல்வேறு இடங்களுக்கு பேச்சாளராக சென்று வருகிற லியோனி கடந்த சில தினங்கள் முன்பு மலேசியாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பெனாங் என்ற இடத்திற்கும் பட்டிமன்றத்திற்கு சென்றுள்ளார். திண்டுக்கல் லியோனியின் பேச்சுத் திறமைக்கு ரசிகர்களாக உள்ள அனைத்து தமிழர்களுமே இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக டிக்கெட்'களை வாங்கிக்கொண்டு காத்திருந்துள்ளனர்.

இவர்களின் காத்திருப்பு நெடுநேரம் நீண்டு சொல்ல ரசிகர்கள் அனைவரும் கோபம் அடைந்துள்ளனர். ஏராளமான தமிழர்கள் இவரின் பட்டிமன்றத்தை பார்ப்பதற்காக டிக்கெட் வாங்கிக் கொண்டு காத்திருக்கின்ற நிலையில் திண்டுக்கல் ஐ லியோனி குறித்த நேரத்திற்கு வராமல் தாமதமாக வந்துள்ளார். 

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் தாமதமாக வந்த லியோனியை பார்த்து அங்கு கூடி இருந்த தமிழ் மக்கள் அனைவருமே லியோனியை சுற்றி வளைத்து மணி என்னைய்யா ஊருக்கு  உபதேசம் பண்றீங்க, உலகத்துக்கும் உபதேசம் பண்றீங்க, ஆனா அதை நீங்க கடைபிடிக்கிறது கிடையாதா? உங்கள நம்பி நாங்க இவ்வளவு தூரம் வந்து மோசம் போகனுமா? என்று சுற்றிலும் கோபத்துடன் கொந்தளித்துள்ளனர்.

அதற்குப் பிறகு எங்களை ஆர்கனைசர் தான் அழைத்து வரவேண்டும் எங்களுக்கு இந்த பகுதி தெரியாது என்று லியோனி சமாளித்துள்ளார் ஆனால் அவரின் சமாளிப்பிற்கு இறங்காத மக்கள் கோபத்துடனே இந்த நிகழ்ச்சி ரத்து செய்ய வேண்டும் எங்களது டிக்கெட்டுகளை பெற்றுக் கொண்டு காசுகளை திருப்பிக் கொடுங்கள் என்று கூறும் அளவிற்கு கொண்டு சென்றது லியோனியின் தாமதம்!

என்னதான் ஆளுங்கட்சியின் பிரபல பேச்சாளராக இருந்தாலும் நேரத்தை கடைபிடிப்பது மிகவும் முக்கியமான பண்பாகும் இவர் ஏன் இப்படி செய்தார் என்று அரசியல் வட்டாரங்களில் சில கருத்துக்களும் ஆங்காங்கே எழுந்தது. இந்த சம்பவத்திற்கு அடுத்து சென்னை ஆலந்தூர் பகுதியில் இனோவா காரில் பயணித்துக் கொண்டிருந்த திண்டுக்கல் ஐ லியோனியை தடுத்து நிறுத்தி ரூபாய் 2500 அபராதம் விதித்தது காவல்துறை அதிரடி காட்டியுள்ளது.

விதிமுறைகளை மீறி நாங்கள் ஆளுங்கட்சி என மிதப்பாக கார்  கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர், எக்ஸ்ட்ரா பம்பர், நம்பர் பிளேட் என அனைத்துமே விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டிருந்ததால் சென்னை ஆலந்தூர் போலீசார் இவருக்கு 2500 ரூபாய் அபராத தண்டனை விதித்து அபராதத்தை கட்ட சொன்ன சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இப்படி ஆளுங்கட்சியின் ஆதரவாளராகவும், முக்கிய பேச்சாளராகவும் இருந்து வருகிற நமக்கே சோதனை மேல் சோதனை வருகிறது என லியோனி புலம்பி வருகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.