தமிழ் சினிமாவில் தற்போதைய உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் அரசியலுக்கு வர உள்ளார் என்ற பேச்சு தற்போது அரசியல் வட்டாரங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அரசியல் விமர்சகர்களுக்குமே அவர் அரசியலில் வருவதற்காக தான் இத்தனை ஏற்பாடுகளையும் செய்து வருகிறார் என அடித்து கூறுகின்றனர். இந்த நிலையில் அரசியலுக்கு வருவதற்கான முன்னோட்டமாக கடந்த சில நாட்கள் முன்பு பத்து மற்றும் பன்னிரண்டாம் பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை ஒவ்வொரு தொகுதிகளில் இருந்தும் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழையும் வழங்கி கௌரவப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் கூட மாணவர்களை வாக்காளர்கள் என குறிப்பிட்டதும் அரசியல் ரீதியாக பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தின! இந்த நிகழ்விற்கு பிறகு நடிகர் விஜய் நிச்சயமாக அரசியலுக்கு வர உள்ளார் என்ற கருத்து பலமாக ஓங்கி உள்ளது.
மேலும் அந்த நிகழ்வில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட நடிகர் விஜய் மாணவர்கள் மத்தியில் உரையாற்றியது இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. அந்த அளவிற்கு எந்த ஒரு பதற்றமும் இல்லாமல் நேர்த்தியாக தனது உரையை முடித்தார், 'கல்விதான் நமக்கு பெரும் சொத்து, அறிவை இன்னும் வளர்த்துக் கொள்ளுங்கள், நம் விரலை வைத்தே நம் கண்ணை குத்துகிறார்கள், ஓட்டிற்கு பணத்தை வாங்க கூடாது இதை உங்கள் பெற்றோர்களிடமும் கூறுங்கள் எல்லா தலைவர்களையும் பற்றி படித்து நல்ல குணங்களை கற்றுக் கொள்ளுங்கள் என்று விஜய் பேசியது அரசியலிலும் கவனம் ஈர்த்தது. மேலும் அவர்கள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் கிளப்பியது. இந்த விழாவிற்கு பிறகு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்னும் சில கட்சி தலைவர்கள் மற்றும் சில முக்கிய தலைவர்களும் விஜய்யின் அரசியல் பிரவேசத்தை ஆதரித்தும், எதிர்த்தும் பேசினார். இருப்பினும் இன்று வரையிலும் அரசியலில் வரப்போவதை பற்றி விஜய் எந்த ஒரு கருத்தையும் பொதுவெளியில் குறிப்பிடவில்லை.
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், 'தற்போது சினிமாவில் நடித்து விட்டால் முதல்வராகி விடலாம் என்று சில நடிகர்கள் நினைக்கிறார்கள் அரசியலில் நடிகர்கள் வரும் சாபக்கேடு தமிழகத்தில் மட்டும் தான் உள்ளது என்று விஜயை குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார். மேலும் விஜய் சினிமா பின்புலத்தில் இருந்து வருகிறார் அதெல்லாம் அரசியலுக்கு சரிப்படாது என்கிற ரீதியில் வேறு பேசி வந்தார்!
விஜயின் அரசியல் வருகையை எதிர்பார்த்துவந்த ரசிகர்கள் மத்தியில் இந்த திருமாவளவனின் இந்த பேச்சு கடுமையாக கோபத்தை ஏற்படுத்தியது. அதாவது இந்த விமர்சனம் அவரது கட்சியை சேர்ந்த விஜய் ரசிகர்களே திருமாவளவனை விமர்சனம் செய்யும் அளவிற்கு சென்றது. இந்த விமர்சனத்தால் தனக்கு அரசியலில் பின்னடைவே என உணர்ந்து அப்படி எதுவும் நடந்து விடக்கூடாது அதற்குள் எதாவது செய்ய வேண்டும் என்று சுதாரித்துக் கொண்ட திருமாவளவன் இன்னும் ஒரு வருட காலத்தில் தேர்தல் வர உள்ள நிலையில் விஜய்யிடம் அரசியல் பேசி விமர்சனத்தை பெற்று பகையை வளர்த்துக் கொள்ள விரும்பாமல் தற்போது மொத்தமாக சரணடையும் விதத்தில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
இது குறித்து திருமாவளவன் கூறும்போது, 'நான் யாரையும் காழ்ப்புணர்ச்சியோடு விமர்சிக்கவில்லை பொதுவாகத்தான் குறிப்பிட்டேன் நடிகர் ரஜினி அரசியலுக்கு வரும்போதும், தற்போது விஜய் அரசியலுக்கு வரும் போதும் நான் வரவேற்றேன்' என்று கூறி சமாளித்துள்ளார் திருமாவளவன்.