24 special

உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த ராஜ்நாத் சிங்கின் பேச்சு....!

Ranjith sign ,pm modi
Ranjith sign ,pm modi

இந்தியா அதன் எல்லைகளை காக்க உறுதியான ராணுவ நடவடிக்கைகளை எடுக்க தயங்காது என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். 


கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் பகுதியின் உரி நகரிலுள்ள ராணுவத்தின் முகாமில்  ஜைஸ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதில் 19 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த விவகாரத்தில் பதிலடி கொடுக்கும் விதமாக ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ நடத்தப்பட்டது. இந்தியா தரப்பில் நடந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் ராணுவ வீரர்கள் இந்திய எல்லைப் பகுதியை கடந்து 2 கிலோமீட்டர் தூரம் வரை சென்று அதிரடி தாக்குதல் நடத்தினர்.  இந்தியாவின் இந்த எதிர்பாராத அதிவேக தாக்குதலில் 38 பயங்கரவாதிகள் மற்றும் 2 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 

அமைதிக்கும், நட்பிற்கும் பெயர் போன பிரதமர் மோடி சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த எடுத்த அதிரடி முடிவு இன்றளவும் பயங்கரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறது. குறிப்பாக பாகிஸ்தான் இந்தியா மீது பயங்கரவாத தாக்குதலை நடத்த துணியாததற்கு இது ஒரு முக்கிய காரணமாகும். உலக நாடுகளையே உற்று நோக்க வைக்கஇந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நடத்துவது குறித்து முடிவெடுக்க பிரதமர் மோடி அவர்கள் வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே யோசித்தார் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

ஜம்மு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் பேசிய அவர், ராஜ்நாத் சிங் இந்தியா முன்பு இருந்தது போல் இல்லை. பிரதமர் மோடி தலைமையின் கீழ் இந்தியா வலுவடைந்து வருகிறது. தேவைப்பட்டால் எல்லை தாண்டிச் சென்று தாக்கும் திறனும் இந்தியாவிடம் உள்ளது என்றார். 

பயங்கரவாதத்துக்கு எதிரான உறுதியான நடவடிக்கைகளை மோடி அரசு மேற்கொண்டுள்ளது. அதற்கு, 2016-ல் எல்லையில் நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக், 2019 பாலகோட் வான்வழித் தாக்குதல்களே சான்று. சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடவடிக்கைக்கு உத்தரவிட பிரதமர் வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டார். இது, அவரது வலிமையான சக்தியை காட்டுகிறது. நமது ராணுவம் பயங்கரவாதிகளை எல்லை தாண்டிச் சென்றும் அழித்தது.

ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் (ஏஎப்எஸ்பிஏ) வடகிழக்கின்பல பகுதிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் நிரந்தர அமைதிக்காக காத்திருக்க வேண்டியுள்ளது. விரைவில், ஜம்மு-காஷ்மீரிலிருந்தும் அந்த சட்டம் அகற்றப்படலாம்.பயங்கரவாதத்தை அரசின் கொள்கையாக பயன்படுத்தும் நாடுகளின்  விளையாட்டு நீண்ட காலத்துக்கு நீடிக்காது  என பாகிஸ்தானுக்கு சவால் விடும் வகையில் பேசியுள்ளார். 

ஏற்கனவே லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் உள்ளிட்ட ஐ.நா. பட்டியலிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், ராஜ்நாத் சிங்கின் இந்த பேச்சு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

பாரத பிரதமர் மோடி அமைதி விரும்பியாக இருந்தாலும், நாட்டு மக்களுக்கு பயங்கரவாதத்தால் ஆபத்து என்றால் பதிலடி கொடுக்க துளியும் தயங்கமாட்டார் என்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது. மேலும் இந்த எச்சரிக்கை பாகிஸ்தானுக்கு மட்டுமானது அல்ல, எல்லைப்புற கிராமங்களை ஆக்கிரமிக்க துடிக்கும் சீனாவிற்குமானது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.