24 special

இனி இதுதான் ...!டெல்லி எடுக்கப்போகும் பிரம்மாஸ்திரம்...!

Amutha, modi
Amutha, modi

Lஅடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது நிலையில், மூன்றாவது முறையாக பாஜகவே ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று பல தேர்தல் வியூகங்களை அமைத்து களப்பணிகளை செய்து வருகிறது. ஒன்பது ஆண்டு கால சாதனைகளையும் ஒவ்வொரு மாவட்டத்திலும் கூட்டங்களாக அமைத்து செய்தியாளர்கள் மத்தியிலும் பாஜகவின் சாதனைகளை மக்கள் மத்தியிலும் தெரிவித்து வருகின்றனர்.


மேலும் இந்த தேர்தலில் பாஜக 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளதாக பல தகவல்கள் வெளியானது. மறுபுறம் பாஜகவை இந்த முறை ஆட்சியில் ஏற விடவே கூடாது என்று நினைத்துக் கொண்டிருக்கும் தேசிய எதிர்க்கட்சிகள், எதிர்க்கட்சிகள் கூட்டணி மாநாடு என்ற கூட்டத்தையும் ஏற்பாடு செய்து அதன் முதல் கூட்டத்தை பாட்னாவில் தற்போது நடத்தி முடித்து இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியை இந்த முறை பிரதமராக தேர்ந்தெடுக்க விடவே கூடாது என்பதில் எதிர் கட்சிகள் குறியாக உள்ளனர். 

மேலும் சில மாநிலக் கட்சிகள் காங்கிரஸ் உறுதியாக இல்லாத தொகுதிகளில் கூட தங்களது பலத்தை பிரயோகித்து, பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் வெற்றியை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என குறியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் டெல்லி தலைமை மாஸ்டர் திட்டத்துடன் களமிறங்க உள்ளது!

பிரதமர் நரேந்திர மோடி பிரம்மாஸ்திரம் ஒன்றை தன் கையில் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது அரசு முறை பயணமாக அமெரிக்கா, எகிப்து போன்ற நாடுகளுக்கு சுற்று பயணத்தை மேற்கொண்டு விட்டு டெல்லி திரும்பிய பிரதமர் நரேந்திர மோடியை பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா மற்றும் மற்ற முக்கிய தலைவர்களும் வரவேற்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி போன்றவர்கள் கலந்து கொண்டனர், இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி தனது பிரம்மாஸ்திரத்தை பற்றி ஆலோசித்துள்ளார்! அதாவது தேர்தல் நெருங்கும் சமயத்தில் பெட்ரோல் விலை குறைப்பு எனும் பிரம்மாஸ்திரத்தை பிரதமர் நரேந்திர மோடி எடுக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைப்பது பற்றி பிரதமர் நரேந்திர மோடி ஆலோசித்ததாகவும் இதனால் இந்தியாவில் இனிவரும் காலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் குறைய வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கிட்டத்தட்ட இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் விற்கப்பட்டது. பெட்ரோல் டீசல் விலையை தினமும் எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருவதோடு சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை பொறுத்தே இந்த விலை ஏறும் இறங்கும் என்றும் கூறப்படுகிறது. 

இருப்பினும் தேர்தல் நெருங்கும் காலங்களில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி இதனை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதாவது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருளாக பெட்ரோல், டீசல் இருப்பதால் அதன் விலையை குறைக்கும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்தால் மக்கள் மத்தியில் இது எடுபடுமென்று பிரதமர் நரேந்திர மோடி இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. பிரதமரை வீழ்த்துவதற்காக கூடிய எதிர்கட்சிகளும் ஒற்றுமை இல்லாமல் இருக்கும் வேலையில் பிரதமர் மோடி மட்டும் இந்த பிரம்மாஸ்திரத்தை செயல்படுத்தினால் கண்டிப்பாக மூன்றாவது முறையும் அவரே பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என இப்பொழுதே பாஜக வட்டாரங்களில் பேசப்படுகின்றன.